வெறும் சினிமாதானே என்று விட்டுவிடாமல் துணிவு - வாரிசு பற்றி 24 மணிநேரமும் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பிக்பாஸ் மட்டும் எப்படி வெறும் ரியலிட்டி ஷோவாக தெரிகிறது என்று தெரியவில்லை.
பிக்பாஸ் வணிகநிகழ்ச்சிதான். ஆனால் எந்த இந்தியமொழி பிக்பாசில் இதுவரை அம்பேத்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். எந்த பங்கேற்பாளர் பீப்பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறார்.
அடிமை’வார்த்தை வேண்டாம் சேவகர் என்று பயன்படுத்துங்கள் என யார் பிக்பாஸையே திருத்தியிருக்கிறார்கள்.
கலையும் அரசியலும் வேறு வேறல்ல. அதை ஒருபோதும் பிரிக்கவும் முடியாது. எந்த இடத்தையும் வணிகம்- விளையாட்டு - சினிமா- டிவி என ஒதுக்கி வைப்பதைவிட அவ்விடத்தை தமக்கானதாக மாற்றுவதே இந்த தலைமுறை முன் உள்ள வாய்ப்பு. அந்த மாற்றத்தின் சாட்சியாக நாமே இருக்கிறோம்.
மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதற்கு எதிரான நிகழ்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, சமூகநீதி, தமிழ்நாடு பெயர் தமிழ்நாடுதான் என அதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது விஜய்டிவி பிக் பாஸ்.
Zee தமிழில் பெரியாராக நடித்த குழந்தைகள், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டைப் பற்றி நீயா நானாவில் புகழ்ந்தது, கற்பு- காதல்- குடும்பம் என தமிழா தமிழா நிகழ்ச்சி எடுத்தாண்ட தலைப்புகள், சீரியல் ஒன்றில் பெண் கல்வி பற்றி பேசி ட்ரெண்டான பாட்டி.. …
இந்த திட்டத்தை செயல்படுத்தியது எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் 🖤❤️
திராவிடம் என்ன செய்தது என்று கேட்போர் கண்டிப்பாக கேட்க வேண்டிய காணொளி இது..
RT Max 🔥🔥🔥
@mkstalin@KanimozhiDMK@TRBRajaa@keeraitamilraja