தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிசட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது. (2/3)
தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். (3/3)
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.(1/4) @CMOTamilnadu#Pattinapakkam#Looproad
இந்த நடவடிக்கையால் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நேரடியாக மீன்களை விற்பனை செய்து வரும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். (2/4)
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் போது மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புகளை நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவித்து அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதே சரியான வழியாக இருக்கும். (3/4)
அதை விடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அவசர, அவசரமாக மீனவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். (4/4)
கேரளமக்களின் உணர்வோடு ஒன்றிவிட்ட கனி காணும் விழாவான விஷூ புத்தாண்டு கேரள மக்களுக்கு செழிப்பையும், மகிழ்ச்சியை அளிக்கட்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். (2/3)
தமிழ்நாட்டில் உள்ள மலையாள சொந்தங்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மலையாள சகோதர, சகோதரிகளையும் விஷூ புத்தாண்டு தருணத்தில் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன். (3/3)
#திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையில் #ஊழல்
பிறக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும், பரிசுப் பொருட்களையும் தராமல் கற்பிணி பெண்களையும் மக்களை அலையடித்து வெறுக்கடித்து, வாங்க விடாமல் செய்து, சுகாதாரத் துறையில் பகல் கொள்ளை, அரங்கேறி வருகிறது. வாய் திருக்குமா மீடியாக்கள்?
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள மூனாண்டிபட்டியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ் குமார் மற்றும்.., (1/2)
சேலம் மாவட்டம் வனவாசி பணங்காடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
துடிப்பு மிக்க இளம் ராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (2/2)
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி' என்று பெருமை கொண்ட தமிழ் சொந்தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த ‘சோபகிருது’ தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.