This is an Indian Hero Pilot Captain Smit Mac. The follow pilot tried to kill him, but he showing alertness called out to the crew and passengers. The open door of the cockpit helped. Salute Captain Sumit Machchhar.
My salute to the Indian pilot Captain Smit Machchhar for his extraordinary bravery.
Despite being stabbed and seriously injured, he fought back, resisted, opened the cockpit door, and enabled passengers and crew to overpower the attacker — preventing a catastrophic mid-air disaster.
He saved the lives of 174 people, including Israeli citizens and other nationals.
I wish Captain Machchhar a speedy and full recovery.
He is a true hero.
Heartiest congratulations to our Indian men’s 4x400m relay team Vishal TK avl, Dharmveer Choudary avl, Manu TS avl & Jay Kumar avl for securing the Bronze medal at the AsianGames2026.
A special and proud shoutout to our talented athlete from TN, Vishal TK avl who delivered a stellar performance with grit and determination on the global stage.
For any athlete or fan, nothing is more satisfying than seeing your country’s flag on top! 🇮🇳
- Just look at the raw emotions of India’s 4x400m Gold-winning team! 🥹🥇
Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Tears of joy, hearts full of pride! 🇮🇳
Watching our incredible 4x400m women’s relay team storm to a Gold medal finish brought back a flood of memories. I could feel every single stride, every heartbeat, and every ounce of grit out there on the track.
(1/3)
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Heartiest congratulations to our pride from TN, Vithya Ramraj avl, on a phenomenal performance at the Asian Games 2026.
Securing two magnificent medals, a stellar Silver in the 4x400m mixed relay and a historic Bronze in the 400m hurdles, where she broke legendary PT Usha avl’s 42 year old national record with a timing of 54.75s is an extraordinary achievement.
Her relentless grit, determination, and perseverance make Tamil Nadu and the entire nation immensely proud. Wishing her the very best in all her future endeavours.
“I want three medals, tomorrow one is waiting for me” 🤌
Vithya Ramraj reflects on winning bronze and setting a new national record in the women’s 400m hurdles 🔥
In Australia more than 180 mosque/mosque sites were demolished to make way for development. In China, over a 100 Islamic structures. 95% of Mecca’s millennium-old buildings had been demolished over a roughly 20-year period. Did you see these news portals ever talk about them?
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Delighted to have had the opportunity to interact with young entrepreneurs at Signograph 4.0, organised by Young Indians in association with CII in Tiruppur today.
Urged our Indian entrepreneurs to invest more in innovation and personal fulfilment. India’s next phase of growth will be driven not just by the scale of our businesses, but by the ambition, innovation and courage of our entrepreneurs to solve tomorrow’s problems today.
முயற்சிக்கு ஒரு சல்யூட்...! ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பயணி.. காப்பாற்ற நபர் செய்த செயல்.. வைரலாகும் சிசிடிவி காட்சி
#Chennai | #Guindy | #RailWayStation | #CCTV | #PolimerNews
ஒரு காலத்தில் நம் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறியுள்ளது. பல இளம் குழந்தைகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய pedophile குற்றவாளியான GEM கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை, தமிழ்நாடு காவல்துறை எப்படி கையாண்டது என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும், குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை என்று காரணம் கூறி, தமிழ்நாடு காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலதிக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், காவல்துறை GEM கிரானைட்ஸ் வீரமணியையும், அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ததுடன், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்களில் பலர், இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்ற காலத்தில், சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது. இதன் மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள், பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிப்பட்டிருக்கிறது.
நேர்மையான மற்றும் உறுதியான காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த வழக்கு அமைந்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, தவெக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
நேற்று, GEM கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, GEM வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணையானது, வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் முடிவடைந்து விடக்கூடாது. கடந்த பல ஆண்டுகளாக அவரை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாகச் செயல்படவும் உதவிய ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும், இதில் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல்வாதியும் என, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப் போக முயற்சித்த ஒவ்வொரு நபரும், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கில், மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக, இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அத்தனை நபர்களையும் வெளிக்கொண்டு வருவதற்காக, உடனடியாக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களின், குறிப்பாக சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது.
2 மாதமாக சிலிண்டர் அனுப்புவதை நிறுத்திய கேஸ் ஏஜென்சி..! வேதனையோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி..
#Covai | #OLdLady | #Idly | #Collector | #Cylinder | #PolimerNews
நமது We The Leaders அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், திரு. Aspire K. சுவாமிநாதன் அவர்களை, பொதுச் செயலாளர் – ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு என்ற பொறுப்பில் நியமிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
நமது We The Leaders அமைப்பின் ஊடகம், பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. Aspire K. சுவாமிநாதன் அவர்களுக்கு, அமைப்பின் அனைத்து தலைவர்களும், களப்பணியாளர்களும் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@WTLFoundation@aspireswami
பல தொகுதிகளில் 30,000 க்கும் அதிகமான தலைவர்கள், நமது @WTLFoundation அமைப்பில் இருக்கின்றார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் நமது அமைப்பின் சார்பாக குறைந்தபட்சம் 30,000 தலைவர்களை உருவாக்குவதை நமது இலக்காகக் கொள்ள வேண்டும்.
பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில், அவரது கடவுள் மறுப்பு, பிராமண துவேஷம் உள்ளிட்டவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
நாம் ஆட்சிக்கு வரும்போது, ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் அவர்களின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய மரியாதையுடன், பொது இடத்தில் வைக்கப்படும் என்று நான் கூறியதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.