தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை - இந்திய தவ்ஹீத் ஜமாஅத் The first budget of the TVK government did not meet the expectations of the people - Indian Thowheed Jamaat - https://t.co/98AZz2DNQn
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் C.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு என்றால் சமூக நீதி,மத நல்லிணக்கம்,மொழி உரிமை,மாநில உரிமை மற்றும் கூட்டாட்��ி தத்துவத்தின் அடையாளமாகும்.அந்த அடிப்படை பண்புகளையும்,தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த காலங்களில் மக்களுக்கு பயனளித்த நலத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் எந்தவித தடையும் இல்லாமல் தொடரப்பட வேண்டும்.அரசுகள் மாறினாலும் மக்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதே தமிழ்நாட���டு மக்களின் பொதுவான எண்ணமாகும்.
தமிழர்களின் உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் தனித்துவத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளின் சூழ்ச்சிகளிலிருந்து எச்சரிக்கையுடன் இருந்து,அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்லாட்சி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
தமிழ்நாட்டின் முன்னேற்றம்,மக்கள் நலன் மற்றும் ஜனநாயக மதிப்புகளை உயர்த்தும் ஆட்சியை புதிய முதலமைச்சர் வழங்குவார் என நம்புகிறோம்.
முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #BJPFailsIndia #VoteChori #makkalreport #INTJ #tvk #actorvijay @actorvijay @TVKVijayHQ
நடைபெற விருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ��தரவு!
திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து வேட்பாளர்களையும் அனைத்து தொகுதிகளிலும் ஆதரித்து வெற்றி பெற செய்ய களமாடுவோம்.
01.04.2026 இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் பேட்டி.
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #VoteChori #BJPFailsIndia #makkalreport #INTJ #தமிழ்நாடுவெல்லட்டும் #dmk_2026
அமெரிக்கா இஸ்ரேல் சதியால் படுகொலை செய்யப்பட்ட ஈரான் சுப்ரீம் லீடர் ஆயத்துல்லா அலி காமேனி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ராயப்பேட்டை ஆயிரம் விளக்கு மசூதி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் கலந்து கொண்டு இரங்கலை தெரிவித்துக் கொண்டோம்.
Condolences Meeting On the Martyrdom of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei,who was assassinated by a US-Israeli conspiracy attack,was held at the Royapettah Thousand Lights Mosque complex.
Behalf of the India Thowheed Jamaath(INTJ),we participated in this event and expressed our deepest condolences.
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #BJPFailsIndia #VoteChori #makkalreport #INTJMEDIA #iran #condolences #TholThirumavalavan #VCK_SOCIAL_MEDIA
வக்ஃப் வாரியத்தில் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களா?
-திரும்பப் பெற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் வெளியிடும் முஹம்மது ஷிப்லி அறிக்கை...
புதுச்சேரி வக்ஃபு வாரியத்திற்கு அகில இந்திய என்.ஆர் காங் கிரஸ் கட்சியின் உறுப்பினரான
வி.பி. அப்துல் ரகுமானை தலைவராக நியமித்துள்ள ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு,ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் புதிய வாரியத்தில் முஸ்லிம் அல்லாத ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்களையும் சேர்த்திருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி அரசின் இந்த செயலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரியில் உள்ள பதிவு செய்யப்பட்ட 45 பள்ளிவாசல்களை நிர்வகி��்பது மற்றும் இந்த வாரியத்தின் கீழ் உள்ள சொத்துக்களைப் பாதுகாப்பது என்ற நோக்கத்தில் இந்த வாரியம் அமைக்கப்பட்டிருப்பதாக புதுவை முஸ்லிம்களை ஏமாற்ற மாய்மாலம் செய்கிறது புதுச்சேரியின் பாஜக கூட்டணி அரசு.
இத்தனை காலம் முஸ்லிம் சொத்துகளை பாதுகாப்பதில் இல்லாத அக்கறை திடீரென இப்போது முளைத்திருப்பதற்கு தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயம் அடையத்தான்
என்பது திண்ணமாகத்
தெரிகிறது.
வாரியத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிமல்லாத இருவரில் ஒருவர் எஸ்.செல்வ கணபதி.இவர்
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தற்போதைய ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பவர்.பாஜகவின் முக்கியத் தலைவர் என்பதால், இவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தப் பின்னணி கொண்டவராகவே அறியப்படுகிறார்.ஆக திட்டமிட்டே புதுவையின் பாஜக கூட்டணி அரசு முஸ்லிம் அல்லாதவர்களை வாரியத்தில் நியமித்துள்ளது.
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெறுவது வாரியத்தின் செயல்பாடுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த நியமனத்திற்கு புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததை பொருட்படுத்தாமலும்
ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை கவனத்தில் கொள்ளாமலும் இந்த நியமனங்களை ரெங்கசாமி அரசு செய்துள்ளது.
2015-க்குப் பிறகு நீண்ட காலம் செயல்படாமல் இருந்த இந்த வாரியம், தற்போதைய AINRC-BJP கூட்டணி அரசால் மீண்டும் அமைக்கப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் தவிர வேறில்லை.
��ேர்தல் ஆதாயம் கருதி முஸ்லிம்களை திருப்தி படுத்துவதாக எண்ணிக்கொண்டு,செயல்படாமல் இருந்த வக்ஃப் வாரியத்தை ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளையும் உறுப்பினராக்கி
புதிதாக அமைத்திருப்பது ரெங்கசாமி மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பையும் அதிருப்தியையுமே தரும் என்பதை அவர் உணர்ந்து தகுதியும் திறமையும் வாய்ந்த
முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களை வாரியத்தில் நியமிக்க வே��்டும்.
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கும் அபிலாஷைகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய நியமனங்களை உடனே அவர் திரும்பப் பெற வேண்டும்.இந்த சர்ச்சைக்குரிய நியமனங்கள் நாட்டின் பிற மாநிலங்களிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளதால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த,தான் காரணம் ஆகிவிடக்கூடாது என்பதை புதுவை முதல்வர் ரெங்கசாமி புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்���ொள்கிறேன்
இப்படிக்கு
முஹம்மது ஷிப்லி
பொதுச்செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஐமாஅத்.
நாள்: 05.03.2026
#mohamedshibli #INTJ #waqfborad #puducherry
உத்தரகாண்ட் மாநிலத்தின் ரேஷம் பாரி பகுதியிலுள்ள அத்ரியா கோயில் அருகே காலி இடத்தில் தொழுகை நடந்திய முதியவர�� மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.
அந்த பகுதியில் நீண்ட காலமாக வேலை செய்து வரும் ஷாஹித் என்ற கூலித்தொழிலாளி.தற்போது புனித ரமலான் மாதம் நடைபெற்று வருவதால் அவர் தனது தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில்,அவர் தொழுகை செய்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறி ஒரு கும்பல் கட்டைகளை கொண்டு அவர்மீது தாக்குதல் நடத்தியும், மேலும் அவரை 'ஜெய் ஸ்ரீ ராம்' என சொல்ல வைக்கும் கொடூரம் அடங்கிய காணோளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஒருவர் தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் அமைதியாக தொழுகை செய்வதை கூட சகிக்காமல் தாக்குதல் நடத்துவது மிகவும் கொடூரமானதும் மனிதநேயமற்றதுமான செயல்.இத்தகைய மத வெறியை தூண்டும் சம்பவங்கள் இந்தியாவின் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அடிப்படை தன்மைகளுக்கு எதிரானவை.
பாரதிய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து,நாட்டின் பல பகுதிகளில் மதவெறி தூண்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும்.ஒரு ��ாராரின் மீது தொடர்ந்து நடத்தப்படும் வெறுப்பு அரசியல் மற்றும் பிரச்சாரங்களின் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத நல்லிணக்கத்தையும்,மனிதாபிமானத்தையும் பாதுகாக்க அரசும்,சமூகமும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைதிக்கும்,நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டிலும் இத்தகைய வெறுப்பு அரசியல் மற்றும் கொடூர சம்பவங்கள் நடைபெற வேண்டுமா என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
மத நல்லிணக்கம்,சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் நிலைத்திருக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
#shiblivoice #mohamedshibli #indiathowheedjamaath #bjpfailedindia @polimernews @PttvNewsX @GunasekaranMu @sunnewstamil @Kalaignarnews @ThanthiTV @jayapluschannel @News18TamilNadu @ZeeTamilNews @thatsTamil @nakkheeranweb @ibctamilmedia @abpnadu @sathiyamnews @DinakaranNews @TamilTheHindu
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டத்தின்
MGR.நகர் மர்க்கஸுல் அவ்வல் பள்ளிவாசல் சார்பாக மாபெரும் ���ெண்கள் தர்பியா நல்லொழுக்க நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 08.02.2026 அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
ரமழான் மாதத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளிவாசலில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து.
கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசணை மேற்கொண்டனர்.
இதில் மஸ்ஜிதுர்ரய்யான் பள்ளிவாசல் பணிகள் குறித்தும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பணிகள் குறித்தும் ஆலோசணை மேற்கொள்ளப்பட்டது.
நல்லுறவு சந்திப்பு!
சென்னையிலுள்ள சிறந்த இருதயநோய் நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ரிபாய் சவுகத்அலி அவர்களை அப்பல்லோ மருத்துவமனையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி அவர்கள் நல்லுறவு நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
அவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் வெளிவரும் மக்கள் ரிப்போர்ட் இதழை வழங்கினார்.
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #BJPFailsIndia #VoteChori #DMK #INTJMEDIA #AppoloHospital #makkalreport
மறைந்த சமுதாயத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
மே பதினேழு இயக்கம் சார்பில் நேற்று (16.03.2025) சைதாப்பேட்டையில் தமிழ்த் தேசிய பெருவிழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் தமிழ் சமூகத்தில் இயங்கும் செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து தமிழ் கனலி விருதுகள் வழங்கப்பட்டன.
மறைந்த தமிழின ஆளுமைக்கு சிறப்பு செய்யும் வகையில் அறுந்திறல் தமிழர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.
மறைந்த சமுதாயத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் மே பதினேழு இயக்கம் சார்பில் அறுந்திறல் தமிழர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அந்த விருதை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் துணைத் தலைவர் முஹம்மது முனீர்,பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி,துணைப் பொதுச்செயலாளர் தக்வா மைதீன்,பொருளாளர் பிர்தவ்ஸ்,மாநிலச் செயலாளர் அபு பைசல் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மறைந்த சமுதாயத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களின் அறிமுகம் எப்படி ஏற்பட்டது என்பதை விளக்கினார்.
அவர் கூறும் போது: " மே பதினேழு இயக்கம் சார்பில் ஒரு முறை பாலஸ்தீன மக்களாக நீதி வேண்டி நடைபெற்ற போராட்டம் நடைபெறும் பகுதியில் சென்ற தோழர் பாக்கர் அவர்கள் தாமாகவே முன்வந்து அதில் கலந்து கொண்டார்.
பொதுவாக தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தால் வருவார்கள் ஆனால் தோழர் பாக்கர் அவர்கள் தாமாகவே கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அதன்பின் தோழர் பாக்கர் அவர்கள் இஸ்லாமிய மக்களை தாண்டி தமிழ் சமூகத்திற்கு செய்த பணிகளை அறிந்து கொண்டேன் " என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர்கள் முஹம்மது யூசுப்,சையது அலி,தென்சென்னை மாவட்ட தலைவர் ஜாகிர்,துணை தலைவர் ஆழ்வை ஜாகிர் ச��யலாளர் அபுதாகிர்,காஞ்சி மாவட்ட செயலாளர் அலி,மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சமீர்,மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் முஸ்ஹப், சைதாப்பேட்டை கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #may17movement #INTJMEDIA #SMBACKER
மனித நேய மக்கள் கட்��ியின் தலைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களை அவரது இல்லத்தில்.
INTJ மாநில நிர்வாகிகள் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்கள்.
இந்த சந்திப்பு போது INTJ சார்பில் ஜ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை அவரிடம் மாநில நிர்வாகிகள் வழங்கினார்கள்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கேரம் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ₹1 கோடி பரிசு வழங்கின���ர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #Khazima #CarromWorldCup