தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனித்துவமான கதையம்சங்கள்,குடும்பப் பின்னணியிலான திரைப்படங்கள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் குடும்பத்தினருக்கு இந்த துயரைத் தாங்கும் மனவலிமையை வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
#mohamedshibli #intj #bhagyaraj #ripbhagyaraj #tamilcinima
பாரதீய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாங்கி தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திய போது “ஜனநாயக படுகொலை” என்று கொந்தளித்த அரசியல்வாதிகள்,இன்று தமிழக வெற்றிக் கழகம் அதே அரசியல் முறையை பின்பற்றும் போது அமைதியாக மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருப்பது இரட்டை நிலைப்பாட்டின் உச்சமாகும்.
அரசியலில் கொள்கை,நேர்மை,ஜனநாயக மதிப்புகள் குறித்து பேசுபவர்கள்,தங்களுக்கு சாதகமான சூழ்நிலை வந்தவுடன் அதே செயல்களை நியாயப்படுத்த முயல்வது அல்லது அமைதியாக கடந்து செல்வது மக்களை ஏமாற்றும் அரசியலாகும்.
ஒரு கட்சி செய்தால் ஜனநாயக படுகொலை,மற்றொரு கட்சி செய்தால் அரசியல் யுக்தி என்ற அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாது.ஜனநாயகத்தை உண்மையாக மதிப்பவர்கள் எந்தக் கட்சி செய்தாலும் தவறை தவறு என்று சொல்லும் தைரியம் கொண்டிருக்க வேண்டும்.
முஹம்மது ஷிப்லி
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #TVKVijay #TVKGovernment #admk @polimernews@thatsTamil@Kalaignarnews@AIADMKOfficial@DMKITwing@sunnewstamil@News18TamilNadu@jayapluschannel@SparkPluz_@TVKVijayHQ@ThanthiTV@MalaimurasuTv@ITamilTVNews
திமுக ஆட்சில யாராவது தப்பு பண்ணி கைது பண்ணா என்ன சொல்லுவீங்க.
Arrest பண்ணா போதுமா..!? தப்பு பண்றதுக்கு முன்னாடியே தடுக்காம போலீஸ் என்ன பண்ணிட்டு இருந்தாங்க...
இந்த மாதிரி தப்பே இனி நடக்காத மாதிரி செய்யணும்னு சொல்லுவிங்களே...எங்க இப்ப சொல்லுங்க பாப்போம்.
#shiblivoice #mohamedshibli #shiblivlogs #TVKVijayFails #TVKVijay #TVKVijayHQ