ஆராசா பெண்களை பற்றி பிற்போக்காக ஆபாச கவிதை எழுதுகிறார்
TR பாலு தெக்கத்தி காரங்க அருவாள் இல்லாம வர மாட்டாங்கன்னு பேசுறார்
RS பாரதி கோவணம் கட்டிணவன் எல்லாம் முதல்வர் ஆயிடுவான் என்கிறார். தேர்தலில் தோற்றால் பாதி மீசை எடுப்பேன் என்கிறார்
இதெல்லாம் வெறும் ஒரு மாதத்தில் பேசிய பேச்சுக்கள்.
ஒரு பண்ணைச் சமூகத்தை தாண்டிய சிந்தனை வராத இவர்களை எப்படி இவ்வளவு நாள் முற்போக்கு என்று நம்பிக் கொண்டிருந்தோம்?
அமலாக்கத்துறைக்கும் மோடி அரசுக்கும் உதவியாளராகச் செயல்படுவதை நிறுத்துங்கள்!
"யாரும் ராகுல் காந்தியை பினராயி விஜயனை கட்டியணைக்கச் சொல்லவில்லை. மாறாக, பினராயி விஜயன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்யக் கோருவதன் மூலம், அவர் அமலாக்கத்துறைக்கும் மோடி அரசுக்கும் ஒரு உதவியாளராகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். அது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை அல்ல."
தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், #CPIM #ED #ராகுல்காந்தி #ModiGovt
பெண்களுக்கெதிரான பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவெக உறுப்பினர்களாக, நிர்வாகிகளாக இருப்பதாகத் தகவல்.. கிரிமினல்களைக் கட்சிக்குள் வைத்துக் கொண்டு பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்? கட்சியிலும் அவர்கள் மீது நடவடிக்கை தேவை. Aidwa கண்டன பேரணி ஜூன் 23..
கௌரவம் என்ற பெயரில் குற்ற வரலாறு கொண்ட மாவட்டங்களை அடையாளப்படுத்த வேண்டும்! - ததீஒமு வலியுறுத்தல்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை கௌரவம் என்ற பெயரிலான குற்ற வரலாறு கொண்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், தெற்கு மயிலோடை கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள் அபிசெல்வி (19) என்பவரும், தலித் இளைஞர் ஹரிபிரசாத் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர். இக்காதலுக்கு சாதியின் பெயரால் எதிர்ப்பு தெரிவித்து வந்த அபிசெல்வியின் சகோதரர் சிவஞானம், அவரது தாய் எஸ்தர் பாலின், சித்தப்பா சங்கரலிங்கம் ஆகியோர் கடந்த 09.05.2026 அன்று அபிசெல்வியை அடித்துக் கொலை செய்துள்ளனர். இக்கொடூர சாதி ஆணவக் கொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 2 மாதங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 5 சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. சக்தி வாகினி எதிர் ஒன்றிய அரசு மற்றும் திலீப் குமார் எதிர் தமிழ்நாடு அரசு வழக்குகளில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையில் இம்மூன்று மாவட்டங்களையும் கௌரவம் என்ற பெயரிலான குற்ற வரலாறு கொண்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தி இக்குற்றங்களை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர் சுபாஷ் (16.04.2026), திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த சுரேஷ் (02.05.2026), தூத்துக்குடி மாவட்டம், கரடிக்குளத்தைச் சேர்ந்த சஞ்சய் (17.05.2026), திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த ராமலட்சுமி (09.06.2026) மற்றும் தற்போது தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்த அபிசெல்வி (09.06.2026) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த 5 வழக்குகளில் 1 வழக்கு மட்டுமே எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், அவர்களை காதலித்த அவர்களது இணையர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பதாலும், மற்ற 2 வழக்குகளில் ஒரே சாதியில் காதலித்தாலும் பொருளாதாரம், ஏற்றத்தாழ்வு, குடும்ப கௌரவம் உள்ளிட்ட காரணங்களால் படுகொலை செய்யப்பட்டதாலும் இந்த 4 படுகொலைகளில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்த வில்லை. இதன்மூலம் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தற்போதுள்ள குற்றவியல் நடைமுறை திருத்த சட்டமும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமும் போதுமானது இல்லை.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூகநீதி இயக்கங்களின் தொடர் வலியுறுத்தலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளை விரைந்து பெற்று சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.
@tnueforg
கரூரில் தலித் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து கொலை வெறி தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
தீண்டாமை கொடுமையால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வகுமாரை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்ட தலைவர் கெ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். பின்னர் அவர்கள் கூறியதாவது,
கரூர் மாவட்டம், வேடிச்சிபாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 37) இவருக்கு ஹரிஷ்வா என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹரிஷ்வா மற்றும் அவரது நண்பர்கள் அகிலேஷ், தளபதி, ராகவன் ஆகியோர் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் வேடிச்சிபாளையம் கடைவீதியில் பொது இடத்தில் இருக்கும் கட்சி கொடி கம்பங்களை சுற்றி விளையாடியுள்ளனர். அப்போது வன்னியர் சமூகத்தை சேர்ந்த கோவிந்தன் சிறுவர்களை பார்த்து இந்த பகுதியில் விளையாட கூடாது என்று கூறி விரட்டி உள்ளார். சிறுவர்கள் செல்லாமல் அதே பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத கோவிந்தன் ஹரிஷ்வாவை தனது செருப்பால் கன்னத்தில் அடித்துள்ளார். அடியை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டிற்கு சென்று தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். செல்வகுமார் கோவிந்தனிடம் தனது மகனை ஏன் செருப்பால் அடித்தீர்கள் என்று கேட்க சென்றபோது அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி பேசி உள்ளார்.
பின்னர் தனது வேலை சம்பந்தமாக திருச்சி மாவட்டம், சின்ன பள்ளிபாளையம் காலனி பகுதியில் செல்வகுமார் இருந்தபோது சுமார் இரவு 7 மணிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற வன்னியர் சமுதாய இளைஞர்கள் செல்வகுமாரை கடுமையாக தாக்கி இரண்டு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேடிச்சிபாளையத்திற்கு அழைத்து வந்து கடை வீதியில் உள்ள வேப்ப மரத்தில் கட்டி வைத்து பெண்கள், இளைஞர்கள், ஆண்கள் விளக்கமாறு, செருப்பு, இரும்பு கம்பிகள், கட்டையை கொண்டு கொலைவெறித் தாக்குதலை கண்மூடி தானமாக தாக்கி உள்ளனர்.
செல்வகுமார் மனைவி முத்து செல்வி, தாய் லெட்சுமி, சகோதரர் ராஜீவ்காந்தி, இவரது மனைவி கிருத்திகா ஆகியோர் செல்வக்குமாரை தாக்குதலில் இருந்து செல்வக்குமாரை மீட்பதற்காக சென்ற போது அவர்களையும் அந்த கும்பல் தாக்கி உள்ளனர்.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான செல்வக்குமாரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு இடது கால் எலும்பு உடைந்துள்ளது. மண்டை உடைந்து மூன்று தையல்கள் போடப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட செல்வகுமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
கரூர் மாவட்டம், வேடிச்சி பாளையத்தில் எதுவும் தெரியாத சிறுவர்கள் பொதுவெளியில் உள்ள கொடிக்கம்பங்களை சுற்றி விளையாடி வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சாதி வன்மத்துடன் வன்னியர் சமூகத்தை சேர்ந்த கோவிந்தன் சிறுவர்கள் என்றும் பாராமல் தனது செருப்பால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை கேட்க சென்ற தந்தையையும் ஊரே சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது. மனசாட்சி இல்லாத இந்த கொடூர செயலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கொலைவெறி தாக்கல் நடத்திய அனைவரும் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை வன்முறைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இச்செயலை கரூர் மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை கேட்டுக்கொள்கிறது என்று அவர்கள் கூறினர்.
இந்தப் படுகொலைகளைச் செய்பவர்களும் இளைஞர்கள், படுகொலை செய்யப்படுபவர்களும் இளைஞர்கள். சாதியப் பிடியில் சிக்கியிருக்கும் இளைஞர்களை ஒரு மாற்றத்தை நோக்கி நகர்த்துவது மிக முக்கியம். இதுபோன்ற சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசே முன்னின்று செய்ய வேண்டும்.
தோழர் Suganthi P,
பொதுச்செயலாளர், ததீஒமு
#TNUEF #DalitLivesMatter #CasteAtrocities #JusticeForDalits #TamilNaduPolitics #SocialJustice
More: https://t.co/0QuVe2cUEN
சமூக நீதித் துறை அமைச்சருக்கு open challenge @VanniTamizhVCK
உங்கள் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் தோறும் உள்ள சனாதனத்தின் எச்சமான இரட்டை சுடுகாடு/இடுகாடு முறையை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்ய முடியுமா? என்று சவால் விடுகிறேன். விஜய்க்கு சாதி, மதத்தைக் கடந்து வாக்களித்துள்ளனர் என்பது உண்மைனா விஜய் இரசிகர்கள் துணையுடன் இதனை நடத்திக் காட்டுங்கள். சவாலுக்குத் தயாரா?
சாதி ஆதிக்கவாதிகளால் கொல்லப்பட்ட இளம் கம்யூனிஸ்ட் தியாகி அசோக் நினைவு தினம்... சாதி ஆணவ வெறியை வேரறுக்க அசோக் குருதியின் மீது சபதமேற்போம்! #YoungCommunist#MartyrA