மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை வெல்லத் திராணியில்லை..
மக்கள் முன் உண்மையை எதிர்கொள்ளத் துணிவில்லை..
காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள இந்த நேரத்தில், அதற்குத் தீர்வு காண வேண்டிய ரீல்ஸ் அரசு, மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் மட்டமான நாடக அரசியலில் இறங்கியுள்ளது..
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்ய முயல்வது, சட்டத்தை நிலைநாட்டுவதற்காக அல்ல; சட்டமன்றத்தில் அவர் காவிரி, விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ஆணித்தரமாக எழுப்புவதைத் தடுக்கவே.
விவாதத்தில் வெல்ல முடியாதவர்கள், கைது அரசியலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்..
கொள்கையால் பதிலளிக்க முடியாதவர்கள், பொய்யான சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.
காவிரி பிரச்சினையைத் தீர்க்க முடியாத சோபா மாடல் அரசு, எதிர்க்கட்சியை இலக்காக மாற்றி தன் தோல்வியை தற்காலிகமாக மறைக்க முயல்கிறது.
தமிழகத்தின் உரிமையைக் காக்க வேண்டிய நேரத்தில், மக்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தின் மீதும், தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்காலத்தின் மீதும் கோழைகளால் நடத்தப்படும் தாக்குதலாகவே வரலாறு பதிவு செய்யும்.
The politically motivated defamatory news on the LoP is a clear move to divert away from the plight of #Delta#farmers. Instead of debating those questions, critics are trying to manufacture a controversy !
Debate politics. Debate policy. Don’t replace substance with selective fake news !
The tvk govt is clearly deviating away from the Cauvery issue !!!
The outrage over LoP's speech says more about his critics than about his words.
They don't want him to come to the Assembly and ask difficult questions. Hence this manufactured hatred !
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
நீ கேட்டியே அப்பாவை காணோம்னு...
இது தான் அந்த அப்பாவோட அப்பா கட்டிய பாலம். நல்லா பாரு.....
அது மேல நின்னு தான்டா ரீல்ஸ் எடுத்துட்டு இருக்குற பொட்டு மாமா.....
புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியின் நிறைவுக் கேள்வியாக நெறியாளர், ஆளூர் ஷா நவாஸ்-யை பார்த்து இப்படி கேட்கிறார்..
ஒரு மணி நேரத்தில் நீங்க சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் திமுகவின் பக்கம் நிற்கிறீர்களோ என்று தோன்றுகிறது என்றார்..
அதற்கு நான் "நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?