மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் நாளை காலை 10 மணிக்கு IndiGo விமானம் மூலம் தமிழகம் வருகை தந்து, மகாபலிபுரம் செல்கிறார்.
மகாபலிபுரத்தில் உள்ள TTDC-யில் நடைபெற்று வரும் 10 நாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, 74 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களிடையே உரையாற்றுகிறார்.
NEET வினாத்தாள் கசிவால் தங்கள் அன்புக்குரிய குழந்தைகளை இழந்த குடும்பங்களையும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சந்திக்கிறார். ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நான் நேரில் சென்று அந்தக் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துயரில் பங்கேற்றேன். அந்தக் குடும்பங்களை திரு.ராகுல் காந்தி அவர்கள் சந்திப்பது, மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதற்கான உறுதியான செய்தியாக அமையும்.
தொடர்ந்து, 74 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் குடும்பப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் மாலை 4 மணி வரை விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்.
அதன்பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் TNCC தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் AICC செயலாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலப் பாதை குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மாலை 7 மணிக்கு விமான நிலையம் சென்று, IndiGo விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
இது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்சினைகளில் உறுதியாகக் குரல் கொடுப்பதற்கும், எதிர்கால அரசியல் சவால்களை எதிர்கொள்ள வலுவான அமைப்பை உருவாக்குவதற்குமான முக்கியமான பயணம்.
தமிழ்நாடு காங்கிரஸ் — ஒன்றுபட்டது, வலிமையானது, உறுதியானது! 🇮🇳
வருக தலைவா ..
#RahulGandhi #TamilNaduCongress #Congress #DCCTrainingCamp #Mahabalipuram
🇮🇳மாணவர்களுக்கு எதிராக செயல்படும் மோசடி மோடி அரசை கண்டித்து மக்கள் நேசர் டெல்டாவின் தளபதி அண்ணன் K.மகேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்றைய தினம் பட்டுக்கோட்டையில் மெழுகுவர்த்தி பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது🔥💪
#NEETPaperLeak@RahulGandhi@manickamtagore@iycmahe jii
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @manickamtagore அவர்களின் வழிகாட்டுதலில், “லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்…” என்ற உறுதிமொழியுடன் மாநிலம் முழுவதும் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் எளிமை, நேர்மை, மக்கள் சேவை என்ற உயரிய கொள்கைகளையும், எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் மக்கள் மைய அரசியல் பார்வையையும் முன்னெடுத்து வலிமையான தமிழகத்தை உருவாக்குவோம்.
@INCTamilNadu
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #Kamarajar123