தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020@kuratpdk
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020@kuratpdk
அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொருளாளர் சகோதரர் எல்.கே. சுதீஷ் எம்.பி. அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஶ்ரீயையும், மணமகன் அகில் ரவிக்குமாரையும் வாழ்த்தினேன்.
ஒருவருக்கொருவர் துணையாகவும், ஒருவரின் கனவுக்கு மற்றவர் தோளாகவும், எல்லா நலன்களும் பெற்று மகிழ்வோடு வாழ்க மணமக்கள்!
சகோதரி @PremallathaDmdk, தம்பி விஜய பிரபாகரன், சகோதரர் @lksudhish ஆகியோர் பொழிந்த பாசத்தில், கேப்டன் இன்னும் நம்மோடு இருப்பதுபோன்ற உணர்வு நெஞ்சை நிறைத்தது! ♥️
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️
#KaviyaAnirudhReception
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார், நவம்பர் 13ஆம் தேதிதான் FIR ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் 14ஆம் தேதிதான் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் காவல்துறையிடம், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் இல்லை. சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் ஊடகங்களில் கசிந்தது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தனை சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்த இந்த மரணம் குறித்து முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு மௌனம் காக்கப் போகிறார்? காவல்துறை உண்மையில் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?
இந்த மரணம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிதியுதவியையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
ஓடியாங்க ஓடியாங்க...!
இந்த @madan3 தே.மவன், இதுவரை நடந்த போதைப் பொருள் தயாரிப்பு கடத்தல்
@FinMinIndia DRI பிடித்த 1000கோடி மெத் பெட்டமைன் போதை பொருள், 300 கோடி ஹெராயின் போதைப் பொருள் பிடித்தத பற்றியோ,
தினமும் 17 கொலைகள் பற்றியோ
கலெக்டர் பத்மஜா TVK MLA Arulஆபாச msgபற்றி பேசல
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
வீடு, கடை, வாகனம் என எத்தனையோவற்றை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவர்கள் உண்டு.
ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழைப்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!
திருப்பரங் குன்றம் தூணில் தீபம் ஏற்ற 5 பேர் மட்டும் செல்லவேண்டுமாம். அந்த 5 பேர் கொண்ட குழுவிற்கு அமைச்சர் ஷாஜகானை தலைமை தாங்க சொல்லுங்கள். நன்றாக மேற்பார்வை செய்வார்.
போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம். அதற்கு தேர்தலில் Tvkக்கு வாக்களித்த எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள்/இளைஞிகள் உள்ளார்கள். அவர்களை மலையடிவாரத்தில் நிற்க சொல்லி பாதுகாப்பு கொடுக்க வையுங்கள்.
இது டிரைலர்தான். சிறுபான்மையினர் @arivalayam support இல்லாமல் சந்திக்க வேண்டிய கூத்துக்கள் இன்னும் நிறைய இருக்கிறது.
@mkstalin அவர்கள் இதுபோன்று சிறுபான்மையினருக்கு எதிராக நடப்பதற்கு கருத்துக்கள் கூட கூறாமல் இருப்பது நல்லது.
இதுபோன்ற விஷயங்களில் ஏற்கெனவே பலமுறை போராடியதற்கு உங்களுக்கு சரியான கௌரவம் அளிக்கப்படவில்லை.
மனசாட்சிய தொட்டு சொல்லுங்கடா அந்த மனுஷன் இன்னிக்கி தான் இறந்தாருனு..
என்ன தம்பி செய்ய நாம ஒன்னு நெனச்சா கோர்ட் ஒன்னு நினைக்குது.
#vsbabupassedaway#VSBabu
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails