நம்ம சமூக நீதி காவலர்@drramadoss ஐயா 88ம் ஆண்டு பிறந்த நாள்! தமிழராக வணங்கி வாழ்த்துகிறோம் ஐயா!
இன்னும் பல பிறந்த நாள் கண்டு தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றுங்கள் ஐயா❤️🙏
இசையரசி எஸ். ஜானகி அம்மாள் மறைவுக்கு இரங்கல்
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி எஸ். ஜானகி அம்மையார் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர். கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ். ஜானகி அமமையார் அவர்கள் தான்.
4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர். இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான் பெரிய விருதாக மதித்தவர். அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு.
இசையரசி எஸ்.ஜானகி அம்மையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஜோசப் விஜய் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
@cmotamilnadu@aiadmkofficial
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ