மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும்!
கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.
கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 64% ஆகும். கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் அணையில் 42% நீர் உள்ளது. ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.
ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைக்கு 10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட அதிகமாக14470 கன அடி நீரை திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் சேமித்து வைக்கிறது. ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின் அதன் உபரி நீரையும் கிருஷ்ணராஜசாகர் அணையில் தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.
கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும். மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும். அதனால் தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைமைப் பொதுக்குழுவில் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது. மேலும் பொதுச்செயலாளராக வடிவேல் இராவணன் அவர்களும், பொருளாளராக திலகபாமா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உடன் பாமக சட்டமன்ற குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள்.!
கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: நிரந்தரத் தடை - சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
தமிழ்நாட்டிலிருந்து கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து சில குவாரிகளுக்கு கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும் கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக அந்த சாலையில் கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை விதித்த போதிலும் கடத்தல் குறையவில்லை. மாறாக மாற்றுப்பாதையில் கடத்தல் தொடர்ந்தது. அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு காமிராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
🏆2026 உலகக்கோப்பையின் சிறந்த கோல் எதுவென்று தெரியுமா?🤔
🏆 🇦🇷அர்ஜென்டினாவுக்கு எதிராக 🇨🇻கேப் வெர்டே (Cabo Verde) வீரர் சிட்னி லோபஸ் கப்ரால் அடித்த அந்த மிரட்டலான கோல்தான் ஃபிஃபா (FIFA) அமைப்பால் போட்டியின் சிறந்த கோலாக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது! 🤯🔥
உலகையே அதிர வைத்த அந்த வேறமாரி மாஸ் ஷாட்டை பார்த்தீர்களா?💥
சிலிர்க்க வைக்கும் அற்புதம்! ⚽✨
#FIFAWorldCup2026 #GoalOfTheTournament #CaboVerde #FootballMadness #ViralVideo #fifaworldcupfootball #futboholikcup #fifadünyakupası
Manickam Tagore அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று நேற்றல்ல, இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது முதலே பேசிக்கொண்டு தான் இருக்கிறார்
2015 இல் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒற்றைத் தமிழக உறுப்பினராக கர்ஜித்த போது
#PMK#AnbumaniRamadoss
வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai
#SavePallikaranaiWetland
#AnbumaniRamadoss
வரத்தை சாபமாக்கலாமா? இயற்கையின் கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்கலாமா?
ஒரு லட்சம் கோடி செலவழித்தாலும் உருவாக்க முடியாத இயற்கையின் வரம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சென்னையின் உயிர்நாடி, இயற்கையின் கொடை, வெள்ளக் காவலன் என எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் அதற்கு சூட்டலாம்.
ஆனால், இத்தகைய பொக்கிஷத்தை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும், கட்டுமானங்களை நிகழ்த்தியும் அழிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
அந்த நிலம் இல்லாவிட்டால் சென்னை மாநகரம் என்னவாகும்?
அறிந்து கொள்ளுங்கள்.... இந்தக் காணொலியிலிருந்து......
#pallikaranai #marshland #wetlands
#PasumaiThayagam #PMK #Chennai
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர், ஐயா @drramadoss அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் நாற்பதாண்டு காலமாக, மக்கள் நலன், சமூக நீதி, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில், மக்களின் குரலாக தொடர்ந்து செயல்பட்டு வரும் மருத்துவர் ஐயா @drramadoss அவர்கள், நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று, தனது மக்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள இறைவனை வேண்டுகிறேன்.
#WATCH | FIFA கால்பந்து உலக கோப்பை வென்று நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த லட்சக் கணக்கான மக்கள்.
#SunNews | #Spain | #FIFAWorldCup2026
தடுமாறிய ஆர்ஜென்டினா - ஆதிக்கம் செலுத்தி கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின்
கால்பந்து உலகக்கோப்பையை ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது.
#FIFAWorldCup#Spain#Argentina