ஒரிஜினல் பகவதி கிளைமாக்ஸ் விஜய் முதலமைச்சர் ஆகுறது தான். அந்த டைம்ல ரஜினி சார் நடிச்ச 'பாபா' படம் வெளியாகியிருந்தது அதை நான் தியேட்டர்ல பார்த்தேன். ரஜினி சார் அந்த 7-வது மந்திரத்தை அவரு CM ஆகனும்னு யூஸ் பன்னுவாருன்னு நினைச்சேன் ஆனா,அவரு வேற ஒரு நேர்மையான அரசியல்வாதிக்கு பயன்படுத்திடுவாரு .. ரஜினி சாரே CM ஆக பயன்படுத்தல நாம எப்படி விஜய்க்கு பயன்படுத்துறதுன்னு கிளைமாக்ஸ் மாத்திட்டேன் அதுக்கு விஜய் ஒத்துக்கவே இல்லை பிறகு நான் சமாளிச்சு நடிக்க வைத்தேன் ~இயக்குனர் வெங்கடேஷ்.
#Rajinikanth #TVKVijay #Superstar_Rajinikanth #Thalaivar_Rajinikanth #Vijay #Baba #Bhagavathi
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
இந்த மனுஷனுக்கு தன்னோட சக்தியே என்னன்னு தெரியல
வெறும் 10-20% தான் ஜெயிப்போம்னு தன் ரசிகர்களை மட்டுமே வைச்சு முடிவு பண்ணிட்டாப்ல
ஒரு தற்குறிக்கே அவ்ளோ அள்ளி போட்டு இருக்கானுங்க..நீயெல்லாம் வந்திருந்தா எதிர்த்து நிக்க ஒருத்தன் இருந்திருக்க மாட்டான்...
அட போங்க சார் @rajinikanth
Ramarajan - MP - 1998 - 1999
T. Rajendar - MLA - 1996 - 2001
Sarath Kumar - MP - 2001–2006
Sarath Kumar - MLA - 2011 - 2016
Vijayakanth - MLA - 2011 - 2016
இவங்க எல்லாரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ரஜினிக்கு போட்டியா ரஜினியின் முந்திட்டேன்னு கூவிட்டு தான் இருந்தாங்க எதிர்த்து போட்டி போட முடியாமல் அரசியலுக்கு போய் MP MLAனு ஆனாங்க.. அப்ப கூட எந்த காலத்திலும் இவங்க மேல பொறாமையோ காழ் புணர்ச்சியோ அவர் காமிச்சதில்ல..
மாறாக அது எந்த காலத்து தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தாலும் பக்கத்து ஸ்டேட் CM-ஆ இருந்தாலும் ஏன் PM-ஆ இருந்தாலும் கூட ஏதோ ஒரு விழானா முதலமைச்சரோட பக்கத்து சீட்டு அது ரஜினி ஒருவருக்கு மட்டுமே அந்த அளவுக்கு ஆளுமை அவர்
இப்ப முளைச்ச காளான் இன்னும் தேர்தல் முடிவு கூட வரல இந்த தற்குரிய பார்த்து அவர் பொறாமை படுறாராம் சிரிப்பா தான் இருக்கு டோய்.
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வரிசை வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான், அமாவாசை மண்டபம் மற்றும், குங்கும கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு @mkstalin. கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது, திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.
பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.