Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்நாட்டில் யாரை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று சிங்கப்பூர் மற்றும் மலேசியா அறிவியல் தொடர்பாளர். முனைவர் பட்டம் பெற்றவர். உலகில் உயிரித்தொழில்நுட்பத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவரான
Ts. Dr. Mahaletchumy Arujanan
அறிவுரை கூறியுள்ளார்.
கொடநாடு கொலை வழக்கை தீவிரப்படுத்தி எடப்பாடியை விசாரணைக்கு அழைத்திருந்தால்...
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் ஒரு நான்கு பேரை கைது செய்து உள்ளே வைத்திருந்தால்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அந்த அமைச்சர் மகனையும் சேர்த்திருந்தால்...
கரூர் விவகாரத்தில் விஜய் பெயரையும் FIR இல் சேர்ந்து விசாரணை செய்திருந்தால்...
சிபிஐ என்கெயிரி கேட்டு தீர்ப்பு வரும் வரை விடாமல் புஸ்ஸி ஆனந்தை கைது செய்திருந்தால்...
Vck உள்ளே இருந்து குழி தோண்டியதற்காக, லாட்டரி கேசை வைத்து ஆதவ் அர்ஜுனாவை கைது செய்திருந்தால்...
வெறும் ரிலீஸ் வெறிக்காக கரூர் விவகாரத்தில் பழி போட்ட, திமுக தீய சக்தி என பிரச்சாரம் செய்த, முதல்வரை மரியாதை குறைவாக பேசிய ஒரு நாலு இன்ஃப்ளுன்சர்களை கைது செய்து உள்ளே போட்டிருந்தால்...
பெண்ணை வீடு புகுந்து தாக்கிய, கஞ்சா வியாபாரியாக இருந்த, சிறு பிள்ளைகளை விஜய் பார்க்க வைக்க பாலியல் வன்கொடுமை செய்ததற்குறிகளை கைது செய்திருந்தால்...
நேற்று முளைத்த கட்சி மாவட்ட செயலாளர்கள் தெருவில் அட்டகாசம் செய்யும் போது 10 வழக்கு போட்டிருந்தால்..
களம் வேறு மாதிரி இருந்திருக்குமோ என்னவோ 😔😔😔 அடிக்க தேவையில்லை தற்காப்புகாவது சில விஷயங்கள் செய்திருக்கலாம், தலைவரின் பெருந்தன்மையும் நாகரீகமும் இவனுங்களை எல்லாம் யோக்கியன் ஆக்கி ஜெயிக்க வைத்திருக்கிறது 🤦🤦🤦
I support DMK for its educated leadership, strong communication, and clear values, something many other parties lack. Tamil Nadu’s growth and development reflect governance under M.K.Stalin, focused on real progress for people.
My support is rooted in what I see, what I experience, and what I believe in. My vote is not just a choice and it is only for DMK 🖤❤️
Only 2 days left. Cast your vote for growth and progress, not for fandom or experiments.
#VoteForDMK
ஸ்மார்த்த சங்கராச்சாரியை கும்பகோணம் கோயிலுக்குள் வரைந்துள்ளீர்கள். இது எந்த ஆகமத்தின் கீழ் வரும் ?
ஆகமம் கற்ற, பூஜைகளை கற்ற, கடவுள் நம்பிக்கையுடைய அனைத்து ஜாதி இந்துக்களை அர்ச்சகர் ஆக்கினால் அது ஆகமத்திற்கு எதிரானது என்கிறீர்கள்
என்ன பித்தலாட்டம் இது …
நான் மிக சாதாரணமானவன் ! என் அறிவு ,சுய மரியாதை, தன்னம்பிக்கையை தவிர வேறு எந்த பெரிய பின்புலம் எனக்கு இல்லை.
ஆனால் என் இலக்கு பெரியது !
ஆம், உலகம் முழுவதும் உள்ள பட்டியல் இளைஞர்களை ஒருங்கிணைக்க போகிறேன்.
நான் விமர்சனத்திற்கு உள்ளாக்கபடலாம், கேலி செய்யப்படலாம் , அவதூறு பரப்பபடலாம் ஆனால் இவை எதுவும் என்னை எதுவும் செய்யாது.
ஏனெனில்
ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து தான் என் வாழ்வு துவங்கியது. இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை
ஆனால் அடைவதற்கு ஒரு லட்சியம் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களுக்கே, அச்சுறுத்தல் எனில் , சாதாரண மக்களின் நிலை என்ன ? அவர் பட்டியல் இனம் சாராதா நபராக இருந்து இருந்தால் அவர் மீது இந்த தாக்குதல் நடத்த தைரியம் வந்து இருக்குமா ?
அரசியல் அமைப்பின் மீதான மத நம்பிக்கையின் தாக்குதல் என்பது பிற நாடுகளில் கண்ட மத தீவிரவாதத்தின் இந்திய வடிவம்.
உடல் வலிமை உள்ளவர்கள் மீது சட்ட ரீதியான அடக்கு முறையும்
சட்ட பாதுகாப்பு உள்ளவர்களுக்கு உடல் ரீதியான அச்சுறுதல் என்று
இருமுனை தாக்குதல் நடைபெறுகிறது.
இதை விட மோசமான சூழல் உருவாகாமல் தடுக்க ஒருங்கிணைந்த அறிவு சார் மற்றும் உடல் வலிமை சார் செயல்திட்டம் அவசியம்.
நான் துவங்குகிறேன். சகோதரத்துவத்துடன் உடன் இயங்க விரும்புகிறவர்களை வரவேற்கிறேன்.
ஜெய் பீம்.
@Kennithrajanbu
CEO , TRANSEN DYNAMICS.
Robotics and AI Development Company.