எங்க தாண்டா இருக்கு அந்த இரும்பு கரம் பெண் பிள்ளைகளை பெத்தவுங்க யாராவது திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?
ஓட்டுப் போடும் முன் இந்தக் குழந்தையும் நம்ம மகள் தான் னு நினைச்சுப் பாருங்க...
பக்கத்து வீட்டில் தானே தீ எரியுதுனு வேடிக்கை பாத்தா நம்ம வீடு எரியும் போது காப்பாற்ற யாரும்???
விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது @AIADMKOfficial.
களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு ��ோக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான @KanimozhiDMK அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்
திரு. @mkstalin அவர்களே?
காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?
இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
@NainarBJP @draramadoss @TTVDhinakaran @GK__Vasan
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தவறிய
விடியா திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில்
அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன போராட்டம்
மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு 🔥
நம் மண்ணைக் கொள்ளையடித்த,
மலையைக் கொள்ளையடித்த,
தற்போது கிட்னியையும் கொள்ளையடிகின்ற
திமுக ஆட்சியை மன்னிக்காதீர்கள்.
இந்த ��ொடூரமான,
மக்களுக்கு எதிரான,
பெண்களுக்கு எதிரான கொடுங்கோல் திமுக ஆட்சியை,
ஊழல் திமுக ஆட்சியை ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றுவோம்.
நம் கூட்டணியின் தலைவர் @epstamilnadu அவர்களை முதலமைச்சராக்குவோம்.
-பாமக தலைவர் @draramadoss அவர்கள்.
#Epsfor2026
எனது புவனகிரி தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று 12.3.2026 வியாழக்கிழமை காலை 09.30 மணி முதல்,
கம்மாபுரம் ஒன்றியம்,
✌🏻கார்கூடலில் சிமெண்ட் சாலையும்,
✌🏻வி.குமாரமங்கலத்தில் நாடக மேடை கட்டிடமும்,
✌🏻பெருவரப்பூரில் பயணியர் நிழற்குடை கட்டிடமும்,
✌🏻மும்முடிசோழகனில் காத்திருப்போர் கூட கட்டிடமும்,
கீரப்பாளையம் ஒன்றியம்,
✌🏻பாளையஞ்சேர்ந்தகுடியில் காத்திருப்போர் கூட கட்டிடமும்,
கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தோம்.
🌱நலத்திட்ட உதவிகள் ��ழங்கப்பட்டன.
🌱மாற்றுக்கட்சியினர் பலர் கழகத்தில் இணைந்தனர்.
கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 1/2
கழகப் பொதுச் செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-���து பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 10.03.2026 செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியளவில்,
🌱புவனகிரி ஒன்றியம், வீரமுடையாநத்தம் ஊராட்சியில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
🌱மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்தனர்.
மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர�� கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வரும் தேர்தலில் மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்��ளின் @AIADMKOfficial அரசு தான் அமையப்போகிறது என்பது தெரிந்ததால் தான், முதல்வரை மாற்றப் போகிறார்கள் என்று பூச்சாண்டி காட்ட ஆரம்பித்துவிட்டார்.
அம்மா ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்,
"தேர்தல் அறிவிப்பதற்கு முன்னாலேயே மாண்புமிகு பொம்மை முதலமைச்சர் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்!"
நீங்க நல்லா பயப்படுங்க @mkstalin. மக்கள் யாரும் உங்களோட இல்ல!
#ByeByeStalin
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்தும்; ��ோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#ADMK_VPM
எனது புவனகிரி தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று 07.03.2026 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல்,
புவனகிரி ஒன்றியம்,
✌🏻தட்டானோடையில் சிமெண்ட் சாலையும்,
புவனகிரி பேரூராட்சி,
✌🏻தாமரை குளத் தெருவில் நியாயவிலை கடை கட்டிடமும்,
புவனகிரி ஒன்றியம்,
✌🏻சித்தேரியில் நாடக மேடை கட்டிடமும��,
கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தோம்.
🌱நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
🌱சித்தேரியில் மாற்றுக்கட்சியினர் பலர் கழகத்தில் இணைந்தனர்.
கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுராந்தகம் அருகே அதிவேகமாக வந்த திமுகக் கொடி பொருத்திய கார் மோதி, மோனிகா என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்தில்,விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்ற நபர், திமுக பிரமுகர் என்பதால், சிசிடிவி மற்றும் டாஷ்கேம் ஆதாரங்கள் இருந்தபோதிலும், காவல்துறையை இயக்கும் அந்த மர்ம ‘சார்’ அழுத்தத்தால் அவர் விடுவிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.
தவறு செய்யும் உடன்பிறப்புகளை காப்பதே ‘திராவிட மாடல்’ அடிப்படை கொள்கையா @arivalayam? ஆளும் கட்சியைச் சேர்ந்த குற்றவாளிகளை காவல்துறையே பாதுகாப்பது சட்டத்தின் ஆட்சியா, அல்லது சண்டித்தனத்தின�� ஆட்சியா?
அதிகார மிரட்டலால் உண்மையை மறைக்க முயற்சிக்காதீர்கள். மக்கள் மன்றம் உங்களுக்குப் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!
மீண்டும் கேட்கிறோம்: விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற திமுகவைச் சேர்ந்த குற்றவாளியை காப்பாற்ற முயன்ற அந்த ‘சார்’ யார்?
#Justice_for_Monica
#யார்_அந்த_SIR
எம்மை ஈன்றெடுத்த அன்புத் தாயார் பிறந்த #அந்தியூர் மண்ணின் அன்பிற்கினிய மக்களிடையே எழுச்சிப்பயணப் பொதுக���கூட்டத்தில் உரையாற்றினேன்.
கொடுத்தவை பொய் வாக்குறுதிகள்; செய்தவை அரைகுறை திட்டங்கள்; திறந்தவை யாவும் @AIADMKOfficial திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்; ஆனால், விளம்பரம் மட்டும் பிரம்மாண்டம்- இது தான் ஸ்டாலின் மாடல்!
இதுவா ஆட்சிக்கான மாடல்?
இதுவா அரசுக்கு இலக்கணம்?
அரசின் வேலையை மறந்து,
PR MACHINERY-யாக மட்டுமே இயங்கும் திமுக அரசை வீழ்த்தி, மீண்டும் மக்களுக்கான செயல்கள் மூலம், திட்டங்கள் மூலம் மக்களை மகிழ்விக்கும் அஇஅதிமுக அரசை தமிழக மக்கள் நிறுவப் போகும் தேர்தலே வருகின���ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
எனது புவனகிரி தொகுதியில் கீரப்பாளையம் ஒன்றியம், ஒரத்தூரில் தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதமான, பாதிக்கப்பட்ட க��டும்பத்தினரை இன்று 3.3.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு, நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினோம். அப்போது கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் உடனிருந்தனர்.
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது,திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது.
வருகின்ற தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக க��ட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அஇஅதிமுக ஆட்சி அமைக்கும்.
-டெல்லியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
இன்று 2.3.2026 திங்கள்கிழமை காலை 10.30 மணக்கு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தகுதி உடைய 68 அருந்ததியர் குடும்பங்களுக்கு ஒரு அரசு நிகழ்ச்சியில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, இதுவரை அவர்களுக்கு இடம் அளவீடு செய்து கொடுக்கப்படாமல் இருப்பதை கண்டித்து, 68 குடும்பங்களும் சம்பந்தப்பட்ட அதே இடத்தில் குடிசை அமைத்து சமையல் செய்து அங்கேயே தங்கி, பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து ஒப்படைக்க வேண்டுமென போராடி வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து, கேட்டறிந்து உரிய அதிகாரிகளிடத்தில் உடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.
கழகப் பொதுச் செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று 27.2.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு விருத்தாசலம் பைபாஸ் சாலையில் உள்ள வெற்றி மஹாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,
கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடம் புதிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டு, த��ர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
புவனகிரி ஒன்றியம், அகர ஆலம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான திரு ஆர்.சங்கர் அவர்கள் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கழகப் பொதுச் செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 28.02.2026 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல்,
ஶ்ரீமுஷ்��ம் ஒன்றியம்,
🌱மேலப்பாலையூரில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விருத்தாசலம் வடக்கு ஒன்றியம்,
🌱விஜயமாநகரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
விருத்தாசலம் வடக்கு ஒன்றியம்,
🌱விஜயமாநகரத்தில்,
அம்மா பேரவை மற்றும் மருத்துவ அணி இணைந்து நடத்திய மருத்துவ முகாம்,
🌱அம்மா பேரவை மற்றும் கலைப்பிரிவு இணைந்து நடத்திய நாட்டுப்புற கலைநிகழ்ச்சி,
🌱அம்மா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,
ஆகிய நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்றன. கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#என்றென்றும்_அம்மா