இன்று மாலை, நமது @WTLFoundation சார்பில், பழனி நகரின் ஆன்மிகத்துடனும் மக்களின் வாழ்வாதாரத்துடனும் தொடர்புடைய, புனிதமான சண்முகா நதியைத் தூய்மைப்படுத்தி, மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து நாம் செய்து வரும் பணிகளில், வைகை நதி, சண்முகா நதி போன்ற நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், தூய்மைப்படுத்துவதும், இயற்கையையும் நமது பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான முக்கியமான பணியாகும். நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்திப் பாதுகாப்பதில் சகோதரர் திரு. நிமல் ராகவன் அவர்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கவை.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல், நமது சமூகப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, இயற்கையைப் பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறைக்கு வளமான தமிழகத்தை உருவாக்கும் நமது பயணம் தொடர்ந்து வெல்லட்டும்.
@Palanikanagaraj@being_nimal (1/2)
திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, ஐயா திரு. தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
திரு. தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Thank you, my dear leaders of @WTLFoundation and respected dignitaries, for making this day memorable!
Today, with the inauguration of the Dr APJ Abdul Kalam Centre for Ethics and Politics, we have begun our pursuit of creating righteous leaders who will nurture change at the grassroots level.
Here’s a glimpse of today’s event.
இந்தியாவில் முதன்முறையாக, 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் கற்றுத் தருவதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கம் தொடர முடியாமல் போய்விட்டது.
ஐயா அப்துல் கலாம் பெயரிலான Centre for Ethics & Politics குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, அவரது குடும்பத்தினரிடம் உரிய அனுமதியைப் பெற்றோம்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த அரசியல் கல்விச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்லாமல், சமூக மாற்றத்திற்கான வழியாகக் கருதும் புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.
நமது @WTLFoundation தலைவர்களின் எண்ணிக்கை, 21 லட்சத்தைக் கடந்து விட்டது. 30 லட்சம், 40 லட்சம் என வளர்ந்து, நிச்சயம் 50 லட்சத்தையும் கடப்போம். தொடக்கத்தில் நம்மிடம் இருந்த அதே உத்வேகம், அர்ப்பணிப்பு, போராட்டக் குணம் இறுதிவரை நம்மிடம் இருக்க வேண்டும்.
இது ஒரு புரட்சிகரமான இயக்கம். இந்த இயக்கத்தின் நோக்கத்தையும் உணர்வையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
மாற்றத்திற்கான இந்தப் பயணம் இன்னும் பல லட்சம் தலைவர்களை உருவாக்கட்டும்.
நமது @WTLFoundation அமைப்பின் அடிப்படைக் கோட்பாடு, அனைவரும் சமம் என்பதைக் கடந்து, அனைவரும் தலைவர்கள் என்பதே.
இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரின் உறுதுணையும், அர்ப்பணிப்பும் மிக அவசியம். புதிய தன்னார்வலர்களைத் தொடர்ந்து இணைத்து, எதிர்பார்ப்பில்லாத சமூகப் பணிகளின் மகத்துவத்தை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தி, சமூக மாற்றத்திற்கான இந்த மக்கள் இயக்கத்தை இன்னும் வலிமையாக்குவோம்.
யாரைப் பார்த்தும் நமக்குப் பயமில்லை. ஏனென்றால், நாம் வந்திருப்பது போட்டி அரசியல் செய்வதற்காக அல்ல. அரசியல் புரட்சியை உருவாக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்காக.
நமது பணிகள் பேச வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சமூகப் பணிகளைப் பார்த்து, மக்களுக்கும் நம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவாக வேண்டும்.
மக்களுக்காகப் பணியாற்றுவோம். மக்களுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
Happy to announce the release of my upcoming book, “Unfinished Hope”.
It is now available to pre-order on Amazon and will soon be available in the bookstores you frequent.
Here’s the pre-order link: https://t.co/1Jeb0GI2f5
Unfinished Hope is my endeavour to paint the picture of a country that has given me so much to be proud of, and yet leaves me with so many questions. The core inspiration for this book was a feeling I could not shake - that India has enormous promise, but too much of that promise remains unfinished.
I strongly believe that we all have a duty to come together to fulfil the aspirations of this great nation.
I also want to inform you that all proceeds from the sale of the book will be transferred to the causes undertaken by We The Leaders Foundation.
நமது @WTLFoundation அமைப்பின் Dr. APJ Abdul Kalam Centre for Ethics & Politics மையத்தை நேரில் பார்வையிட விரும்புகிறீர்களா?
https://t.co/dFlPf8akVS என்ற இணைய தளத்தில், உங்கள் We The Leaders உறுப்பினர் அடையாள எண்ணைப் (WTL ID) பதிவு செய்யுங்கள். உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, வருகையின் நோக்கத்தையும் உங்களுக்கு ஏற்ற தேதியையும் குறிப்பிடுங்கள். உங்கள் வருகைக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பின்னரே மையத்திற்கு வருகை தரவும்.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை நோக்கிய பயணம் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை உருவாக்கும் பொறுப்பும் கூட. வாருங்கள், ஐயா அப்துல் கலாம் அவர்கள் கண்ட கனவுகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அறநெறிகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் நாம் யாருக்காக வாக்களிக்கக் கேட்டோமோ, அவர்கள், வாக்களித்த மையின் ஈரம் காயும் முன்பாகவே, கட்சி மாறிச் சென்று விட்டார்கள். இது போன்ற மோசமான அரசியலை மாற்றவே நமது @WTLFoundation களத்தில் இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கும் நமது தலைவர்களை, உள்ளூரில் இருந்தே உருவாக்குவோம்.
வரும் அக்டோபர் 15, ஐயா அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் தொடங்கவிருக்கும் பயிற்சி மையத்தில், அரசியல் குறித்தும், இளைஞர்களின் தலைமைப் பண்பை வெளிக் கொண்டுவரும் விதத்திலும், பயிற்சிகள் வழங்கப்படும். அதன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது இளைஞர்கள், தங்களது பணிகள் குறித்து நன்கு தெரிந்து போட்டியிடுவார்கள்.
அரசியலுக்கு சினிமா நடிகர்கள் வருவது தவறல்ல. மக்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனால், வரும் 2031 தேர்தலில், எதற்காக வாக்களிக்கிறோம் என்பது தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அதற்கான பணிகளில்தான் நமது @WTLFoundation அமைப்பு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த, ‘நெல்லச்சன்’ என மக்களால் அன்போடு அழைக்கப்படும் பத்மஸ்ரீ திரு. செருவயல் கே. ராமன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
விவசாயத்தின் மீது கொண்ட ஆழ்ந்த பற்றாலும், அனுபவத்தாலும், 50-க்கும் மேற்பட்ட அரிய பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்தவர். இயற்கை விவசாயத்தையும் பாரம்பரிய விதைப் பாதுகாப்பையும் தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். தனது விளைச்சலில் ஒரு பகுதியை விதை தேடும் விவசாயிகளுக்காக ஒதுக்கி, நமது வேளாண் மரபை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றவர். அவர் பாதுகாத்த ஒவ்வொரு விதையும் நமது பாரம்பரியத்தின் உயிர்நாடி.
திரு. செருவயல் கே. ராமன் அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
அறிவியல், கல்வி, தேசப்பற்று என, தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டு முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த, முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், அவரது நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். அவரது கனவுகளும் சிந்தனைகளும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு, உயரிய சிந்தனைகளையும், அறம் சார்ந்த அரசியல் முன்னெடுப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், APJ Abdul Kalam Centre for Ethics and Politics இன்று தொடங்கப்படவிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம்: PSG iTech Convention Centre, நீலாம்பூர், கோயம்புத்தூர் – 641062
நாள்: 15 அக்டோபர் 2026
நேரம்: காலை 9.30 மணி
ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைச் செயலாக்கி, நேர்மையும், அறமும், மக்கள் சேவையும் நிறைந்த தலைவர்களை உருவாக்குவோம்.
நமது @WTLFoundation அமைப்பு அரசியல் இயக்கமாக மாறும்போது, இது போன்ற கட்சி நமக்கு வேண்டும் என்று மக்கள் கூறும்படி, நமது கட்சி உருவாக வேண்டும். தமிழகத்தில் உள்ள 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள, சுமார் 8 லட்சம் பஞ்சாயத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் முதலில் போட்டியிடுவோம். அதன் பின்னர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும், நமது அரசியல் இயக்கம் போட்டியிடும். ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவாகும் அடிப்படைப் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.