தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மக்கள் நலன் சார்ந்து தாங்கள் எடுக்கும் முயற்சிகளும் வெற்றிப் பெறவும், தாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு நீடுழி வாழவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
Heartiest birthday wishes to Brother Vijay, the Hon’ble Chief Minister of Tamil Nadu. May you be blessed with good health and success in all your endeavors.
@TVKVijayHQ
MGR's legacy in Vijay's style | From the silver screen to the corridors of power, many see parallels between MGR and Vijay.
Tune in to the report for more details
#TamilNadu#TVK#Vijay | @Sriya_Kundu
திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைக்க எங்களது அழைப்பை தங்களது இடைவிடாத பணிகளுக்கு மத்தியில் ஏற்று வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @SuVe4Madurai அவர்களுக்கும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @manickamtagore அவர்களுக்கும் எனது சார்பாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏
என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக உங்களுடன் இருப்பதே பெருமையாக நினைக்கிறேன். ❤️
மக்கள் சேவை வெளிப்படைத் தன்மை நேர்மையான நிர்வாகம் வழங்கிக் கொண்டிருக்கும் எங்கள் நிரந்தர முதல்வர் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
#HBDCMJosephVijay
Wishing the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay a very happy birthday today.
My best wishes, always.
@TVKVijayHQ@CMOTamilnadu@INCTamilNadu
மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!
இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.
"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.
உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @cmotamilnadu அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாமை துவங்கி வைத்தேன்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள், தோழர்களும் தோழிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
@TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
Happy to share this beautifully crafted birthday mashup by @skremix_offl, dedicated to Hon'ble Chief Minister Vijay avargal on his special day💥
Watch ▶️https://t.co/ZkIXTYzY6w
#HBDCMVijay
தன்னிகரற்று வளர்ந்தவர் இல்லை... தன்னை விமர்சனத்துக்குட்படுத்தி சரிப்படுத்தி வென்று வந்தவர். தடைக்கற்களை உடைத்தெறியவே நீண்ட காலம் பிடித்தது. அன்று சினிமாவிலும் சரி இன்று அரசியலிலும் சரி.. முதல்வராக இருக்கிறார். நிறைகுறைகளை கூவுவதை விடவும் அவரின் நேர்மையைவிட வேறொன்றும் மக்களுக்குத் தேவையில்லை. கழிவு நீரை நன்னீராக்கப் பெரு மழையோ பெரு வெள்ளமோ தேவைப்படும்.
மக்கள் மீதான அன்பு பெருகட்டும். கழிவு நீரை அகற்றும் பெரு மழையாகவோ பெரு வெள்ளமாகவோ அவரது பயணம் அமையட்டும். சரியான தலைமையின் கீழ் இளைஞர்களின் கையில் உள்ள இவ்வாட்சி நல்லாட்சியாகட்டும். தமிழ்நாடு உங்களின் நடவடிக்கைகளில் சிறக்கட்டும். உடல் நலமும் ஆரோக்கியமும் நிறைந்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு. முதல்வராய் முதல் பிறந்த நாள். இனிக்கட்டும் இந்நாள்.@CMOTamilnadu@actorvijay@TVKVijayHQ
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூகப் பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி சந்தோஷ் MLA அவர்கள்.
என்றும் மக்கள் பணியில்
திருமதி.கனிமொழி சந்தோஷ் MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்.
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாசு நகரான சிவகாசியில் ஒரு மணி நேரம் இடைவிடாது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது... நடிகர் ஜெய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா வானவேடிக்கையை கண்டு ரசித்தனர்
#Keerthana | #TVK | #Jai | #CMVijay | #Sivakasi