தியாகமுத்திரம் ஊராட்சி அண்டக்குடி கிராமத்தின் மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி கொண்டிருந்தது. இதனால் சாலை பழுதடைந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
நேற்று இரவு நடந்த விபத்தை சுட்டிக்காட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் இன்று தண்ணீர் குழாய் சரி செய்யப்ப்ட்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்கப்பட்டது.
சாலை சீர் செய்யப்படும் உறுதி செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் ஒன்றியம்
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
சேலம் மாநகராட்சி = Suez தனியார் நிறுவனம்
எதற்கு குடிநீர் விநியோகத்தைத் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்ப்பதா....?
அண்ணன் சீமான் ✊🏻💥💥💥
@Seeman4TN@_ITWingNTK
🟢🇰🇬🐯🐅 தமிழ்நாடு மக்கள் கார்ப்பரேட்களை எதிர்த்து களமாட இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்திருக்கலாம். மீண்டும் அவருக்கான ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது | FreeMason Elite களுக்கு எதிராக 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan
மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!
@CMOTamilnadu@TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின் கையைக் கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனிதப் பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா?
பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது?
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக்கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது. போதைப்பொருள் ஒழிப்பு நாளில் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே ஒழிந்துவிடாது முதல்வர் அவர்களே! டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்? சட்டம் ஒழுங்கை சீரழித்து, சமூகத்தின் அனைத்து குற்றச்செயலுக்கும் காரணமான மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும்.
ஆகவே, அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தவெக அரசின் காவல்துறை தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்பு பிள்ளைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன். கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராகச் சிறிய வயதிலும் சமூகப் பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி