அடுத்தவர் வாழ்வைக் கண்டு நம் வாழ்க்கை அது போல இல்லையே என ஏக்கத்தில் ஆரம்பித்து..அடுத்தவர் கஷ்டத்தை கண்டு நம் வாழ்க்கையே பரவாயில்லை என திருப்தியில் முடிகிறது மனிதனின் ஆசைகள்.
எவன் ஒருவன் ஃபோன் இல்லாத சமயங்களில் பேசிக் கொண்டிருக்கிறானோ....செல்பி எடுக்காத சமயங்களில் சிரி���்துக் கொண்டிருக்கிறானோ..அவனே இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
ஞாயிறு அசைவம் எடுத்து அதிகப்படியாய் செலவழித்ததை.. மறுநாள் ரசம் பொரியல் வைத்து சரி செய்��ும் அம்மாக்கள் பொரியல் வல்லுநர் மட்டுமல்ல.. பொருளியல் வல்லுநரும் கூட...
எங்க அப்பா
யார் தெரியுமா..?
எங்க அப்பா
எப்படி தெரியுமா..!
கேள்விக்குறி
ஆச்சரியக் குறியாய்
மாறும்
இடைப்பட்ட காலத்தில்
வார்த்தை
செலவில்லாமல்
வாழ்ந்து காட்டி
வாழ்வை பற்றி
புரிய வைத்திருப்பார்
அப்பா..
இந்த மிடில்கிளாஸ ஈஸியா கண்டுபிடிச்சுடலாம் சார்..
பத்து பொருள் வாங்கினாலும் கடைக்காரர் எவ்வளவு ரூபானு சொல்றதுக்கு முன்னாடியே..கையில காசை கரெக்டா வச்சுருப்பான்..