@KasthuriShankar When Modi can become Prime Minister and Vijay can become Chief Minister, you really start to wonder—what exactly is impossible in this country? 😂
ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣
கள_ ஆய்வு
புரிதலின்றி டிவிட்டரில் பகிரப்படும் கருத்துகள் குறித்து ஒரு சில விளக்கங்கள்.
(நீளமான போஸ்ட்தான்)
1. இது பொதுமக்களிடம் போய் ஏன் ஓட்டு போடலைன்னு கேட்கப் போகும் ஆய்வு இல்லை. மக்களின் தீர்ப்பு எதுவாகினும் அதை தலைவணங்கி ஏற்பதே ஜனநாயகம். அதை கழகத் தலைவர் முடிவு வந்த நாளன்றே ஏற்றுக் கொண்டு மக்களுக்கு நன்றியும் சொல்லிவிட்டார்.
2. அடுத்த நூறாண்டுகளுக்கு கட்சி உயிர்ப்புடன் இருக்கும்படி முழுமையாக சீரமைப்பேன் என கழகத் தலைவர் உறுதி அளித்துள்ளார். அதற்காக கட்சி நிர்வாகிகளிடம் உரையாடி ஒரு சில data points, directions கொண்டு வரும் வேலைதான் இந்த ஆய்வு.
3. இது முழுக்க முழுக்க கட்சியின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகளை தனி தனியே சந்தித்து அவரவர் கருத்துக்களை நேரில் பதிவு செய்ய வேண்டியதும், அதை விருப்பு, வெறுப்பின்றி தொகுத்து தலைவரிடம் வழங்க வேண்டியதுமான வேலை.
4. ஆய்வின் போது மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய, நகரக் கழகச் செயலாளர்கள் யாருக்கும் உடனிருக்க அனுமதி இல்லை. இந்த ஆய்வே அவர்களின் செய்தது, செய்யத் தவறியது குறித்துதான்.
5. என் மீதே குற்றம் குறைகள் சொன்னால் கூட அதையும் பொறுமையுடன் கேட்டு பதிவு செய்து வாருங்கள் என்று கழகத் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதால் தலைவரை விஞ்சிய அதிகாரம் கொண்டவர்கள் இங்கே யாரும் இல்லை.
6. ஒரு தொகுதிக்கு ஒரு நாள்தானா?, அறிவிப்பில் ஏன் மாவட்டச் செயலாளர் படம் போன்ற கேள்விகள் are above my position.
7. கட்சியில் எங்களது முந்தைய செயல்பாடுகள், பணிகளை கவனித்து கழகத் தலைவர் இந்தப் பொறுப்பில் எங்களை நியமித்துள்ளார். அவரது நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு.
8. திமுகவுக்கு தோல்வி புதிதல்ல!மீண்டும் வேகமாக எழுந்து வரும் என்பது திமுகவின் அரசியல் எதிர்களுக்குக் கூட தெரியும்.
ஆனால், கட்சியின் அனுதாபிகளாக, தொண்டர்களாக, சமூகவலைதளக் குரல்களாக இருப்பவர்களில் சிலர் இத்தனை மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துவதுதான் வேதனை.
9. உண்மையிலேயே திமுக மீது அக்கறை கொண்டோர், வெவ்வேறு காரணங்களுக்காக வன்மம் கொண்டு நேரம் பார்த்து அவற்றை விஷமாக கக்குவோர் எல்லோருக்கும் சமூகவலைதளத்தில் ஒரே முகமுடிதான்.
அவர்கள் அனைவருமே சக உடன்பிறப்புகள்தான் என்பதால்தான் அயராமல் தொடர்ந்து விளக்கங்களை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
10. இத்தனை வன்மத் தாக்குதல்களையும், நக்கல் நையாண்டிகளையும் நான் மட்டும் தனியாக நின்று எதிர் கொள்வது மனச்சோர்வாகதான் உள்ளது.
வெற்றியின் போதல்ல! தோல்விகளின் போது எனது தலைவரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு அவருடன் நிற்பது எனது கடமை.
அது தலைவர் கலைஞருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன்.
நாளை முதல் களத்தில்...
Big Breaking....🚨🚨
Tamil Nadu for the second consecutive year, has recorded a double-digit real economic growth rate of 10.83% for 2025-26 as per Centre's MOSPI Data. Current GSDP stands at ₹35.29 Lakh Crs. Well done @mkstalin@TRBRajaa 👏👍
Link 🔗 : https://t.co/uSVO8g98Lh