பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
"முதல்வர் பெயர் என்ன?"
உடனே வந்த கோஷம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “தமிழக முதல்வர் யார்?” என்று ஆசிரியர் கேட்ட கேள்விக்கு, பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒரே குரலில் “விஜய்” என பதிலளித்தனர்.
#Theni#Bodinayakanur#Singappen#WomenSafety #ChildSafety # #Awareness #SchoolStudents#ThanthiTV
7 முறை MLA ஆக இருந்தும் தொகுதிக்கு ஒரு துரும்பும் கிள்ளாதவருக்கு, சட்டம் பாயும்போது மட்டும் மக்கள் அனுதாபம் கேட்கிறதா?
அதிகார பலத்தில் ஆடிய ஆட்டங்களுக்கு, "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்" என்பதே நிதர்சனம்!
#TVKVijay#AnithaRadhakrishnan
வாய் இருக்கிறது என்பதற்காக வரம்பு மீறிப் பேசுவதில், fake narrative திமுகவை யாராலும் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த வேலையை அச்சு பிறழாமல் செய்தால், திமுகவை மக்கள் நம்பிவிடுவர் என்ற நப்பாசையில் அவதூறு கழகத் தலைவராக மாறி, வெறும் வாயில் அவதூறுகளை மென்றுகொண்டே ஓர் அறிக்கை விட்டிருக்கிறார் ஸ்டாலின் சார்.
பொறுப்பானப் பதவியில் இருந்ததோடு, தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பை உணராமல் பேசியது குறித்து உயர்நீதிமன்றம் என்ன கூறியது என திமுக மற்றும் ஸ்டாலின் சாரின் செவிகளில் ஏறாமல் போனது ஏனோ? அனிதா ராதாகிருஷ்ணனா அல்லது அவதூறு கோதாகிருஷ்ணனா என்பது போன்று பேசியதை ஸ்டாலின் சார் வேண்டுமானால் மெச்சிக் கொள்ளலாம். ஏனெனில், திமுக அவதூறு கழகமாக மாறி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில், fake narrative அறிக்கை விட்டு, புனித பிம்பம் கட்டும் build up அரசியலை ஸ்டாலின் சார் செய்ய முற்பட்டுத் தோற்றிருக்கிறார்.
எந்தத் தவறும் செய்யாத பத்திரிகையாளர்கள் முதற்கொண்டு எத்தனையோ பேர் மீது அடக்குமுறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்த ஸ்டாலின் சார், இப்போது ஜனநாயகக் காவலர் வேஷம் போடுகிறார். கைது மாடல் அரசாகவே மாறி இருந்த கரப்ஷன் கபடதாரிகளான திமுகவினர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அரசு மீது கல்லெறிவது கயமைத்தனமன்றி வேறென்ன? மக்கள் தீர்ப்பை மதிக்காமல், ஆட்சி அதிகாரம் இழந்த ஆத்திரத்தில், மனசாட்சி உள்ள மக்களாட்சியான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கத் தன் கொத்தடிமைக் கூட்டத்து முன்னாள் அமைச்சரைத் தூண்டிவிட்ட ஸ்டாலின் சார், இரண்டு நாள்களாக எங்கிருந்தார் என்று தெரியவில்லை. இப்போது வந்து, வீட்டுக்குள் இருந்து, வெற்று அறிக்கை வெளியிடுகிறார். உப்பைத் தின்றால் சப்பாத்தியா சாப்பிட முடியும்?. தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும்.
குதிரை பேரம், ஒட்டக பேரம் முதல் அனைத்து அரசியல் மிருக பேரங்களையும் நடத்தத் தொடங்கி உள்ள திமுக, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதால் இப்போது ஜனநாயக வேஷம் போட்டு, அவதூறு கச்சேரியை ஆரம்பித்துள்ளது. திருட்டு மாடல் திமுக ஆட்சியின் ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துவிடுமே என்ற பயத்தில் உத்தமர் வேடம் போட்டு, மக்களை மீண்டும் ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் சார் ஈடுபட்டால், இதை மறந்துவிட வேண்டாம்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
@girlyy_speaks@venom1s Dumbo, why have you deleted the tweet? And even in this visible SM era, you are blatantly lying. How cunning and pathetic you are. Nauseating 🤮