Bro is moving like JJ in vendetta politics. Tough time for DMK hereafter. Your Inability in handling the Karur incident will forever haunt you @arivalayam
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
நாகரிக அரசியலின் விளைவாக , எத்தனையோ வீண் பொய் பழிகளை சுமந்த திமுக இனி கரூர் பழியையும் சுமக்கும். ஓடி ஒழிந்தவர்கள் எல்லாம் கதை சொல்லும் காலம்.
Misplaced mercy is just masked danger.
நாகரிக அரசியலின் விளைவாக , எத்தனையோ வீண் பொய் பழிகளை சுமந்த திமுக இனி கரூர் பழியையும் சுமக்கும். ஓடி ஒழிந்தவர்கள் எல்லாம் கதை சொல்லும் காலம்.
Misplaced mercy is just masked danger.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
கம்யூனிஸம் என்பது,
காலையில் தஞ்சாவூரில் பருத்தி கொள்முதல் விலையை உயர்த்த சொல்லி போராடி விட்டு,
மாலை கோவையில் நூல் விலையை குறைக்க சொல்லி போராட்டம் நடத்துவது... 😏
வேலை கத்துக்கனும் அதுக்கு தேவையான effortலாம் போடுறதில்ல. பேர் மேல வரனும், குத்து வெளக்கு மொதல்ல ஏத்தனும்ன்ற அறிவு மட்டும் தான் மொத்த கூட்டத்துக்கும் இருக்கு 😭
சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்; மக்கள் மனதில் பதிந்திருக்கிறான் இந்த மு.க.ஸ்டாலின்: உங்க அப்பா எங்கப்பா காணோம் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கிண்டலடித்து இருந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட கோப்புகளை பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான்; கோட்டையில் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்குள்ள கோப்புகளை பாருங்கள் என மு.க ஸ்டாலின் பேச்சு!
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
Heavy payment from #TVK I guess.
Planning for his next house. Don’t question the ruling government keep spewing venom at the opposition party. Some journalist you are 😵💫
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.