பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள்.
விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள்.
இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீத��மன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா?
உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்க��றார்களா?
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்?
இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்த���ல் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
இன்று (27/11/2026) காலை 8:00 மணி அளவில்,
கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
ஆவடி தெற்கு பகுதி, 35வது வார்டு வட்ட கழக செயலாளர் திரு யுவராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சியில்,
தூய்மை பணியாளர்களுக்க�� நலத்திட்ட உதவிகளாக போர்வை மற்றும் அறுசுவை உணவாக காலை சிற்றுண்டி வழங்கினோம்
உடன் நடுகுத்தகை திரு KJ ரமேஷ்,
திரு ஜி ராஜேந்திரன், வழக்கறிஞர் திரு பெ வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்
பல ஊடகவியலாளர்களும் தெரிவிக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் அளித்த புகா��ிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் @TVKVijayHQ தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?
உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி @Udhaystalin-க்குப் பிறந்தநா���் வாழ்த்துகள்!
சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.
கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்!
Let your work define you!
உழைப்பால் உயர்ந்திடு!
இலட்சியப் பாதையில் முன்னேறு!
கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு!
#HBDUdhay