#AMMKcelebratesAMMA74
மாண்புமிகு அம்மா அவர்களின��� பிறந்தநாள் விழா ...
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்களின் தலைமையில்
நாளை 24.02.22 காலை 11.00 மணியளவில், சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது ...
அனைவரும் வருக ...
தமிழர்களின் மாற்றுக்குறையாத வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று!. (1/4)
மாநகரங்களை அழகுபடுத்துவதாக கூறி தலைமுறை, தலைமுறையாக அங்கே வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல், கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்களை வெளியேற்றும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்���ுக் கொள்கிறேன். (1/3)
தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கிற முழு ஊரடங்கால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை- எளிய மக்கள் பசியால் பாதிக்கப்படாமல் இருக்க அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் கட்டணமின்றி தமிழக அரசு உணவு வழங்கிட வேண்டும்.
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் திரு.@mkstalin அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன்.
சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. (1/3)
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்���ுவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 11 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றன. (1/3)
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். தேர்தலில் களப்பணி ஆற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் திரு.விவேக் திகழ்ந்தார். “சனங்களின் கலைஞன்” எனக��� கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். 2/3
மருத்துவமனையில் சி���ிச்சை பெற்று வந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமே பேரிழப்பாகும். 1/3
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன். தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்துவந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன். @Actor_Vivek#PrayForViveksir