தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
கருத்து கணிப்புகள் எல்லாம் தி.மு.கழகத்தின் வெற்றியைக் கட்டியம் கூறுகிறது. சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி!
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! 🌄
#VoteForDMK
தேனி மாவட்டம் கரகபொட்டலில் 53 பழங்குடியினருக்கு நில ஒதுக்கீடு செய்து, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணையும் பட்டாக்களையும் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.🖤❤️
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் சேந்தன்குடி ஜெய நகரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகிற ஜூலை 7ம் தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு,திருக்கோயிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வின்போது.,
வலிமையான நம் தி.மு.கழகத்திற்கு மேலும் வலுசேர்த்திடும் வகையில் செயலாற்றி வரும் 23 சார்பு அணி நிர்வாகிகளை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து கலந்துரையாடி வருகிறோம்.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணி நிர்வாகிகளை திருப்பத்தூர் மண்ணில் இன்று சந்தித்து ஆலோசனைகளை வழங்கினோம்.
எந்த ஆதிக்கத்துக்கும் அடங்காத வரலாற்றைக் கொண்டது சிவகங்கை மண் என்பதை நிரூபிக்கும் வகையில், அடிமைகள் - பாசிஸ்டுகளின் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்திட வேண்டும் என்று உரையாற்றினோம்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெல்ல சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தச் சாதனையை படைக்க சார்பு அணி நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தோம்!
@OfficeOfKRP@TamilarasiMLA@GprMadurai
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்ற போது, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள் பங்கேற்றார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேற்பனைக்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள அரசினர் சீர்மரபினர் மாணவியர் நலவிடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்த நிகழ்வின்போது.,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி,
“திராவிட மாடல்” ஆட்சியில் சீர்மிகு திட்டங்களில்,
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற,தனியார் பேருந்து நிறுவனங்களுடன் இணைந்து மினி பஸ் பேருந்து சேவையினை துவக்கி வைக்கும் விழாவில் கலந்துகொண்டு பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்த நிகழ்வின்போது.,உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி.மு.அருணா இ.ஆ.பணி அவர்கள்,அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள்,
மினி பஸ் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள்,கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு மற்றும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் புதுக்கோட்டை அலுவலர் மன்ற வளாகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக,திராவிட இயக்க பேச்சாளர்,
எழுத்தாளர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களுடன் கருத்தரங்கம்-சொல் வீச்சரங்கம் மற்றும்
பட்டிமன்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய நிகழ்வின்போது.,
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், கழக மாநில இலக்கிய அணி துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள்,கலைஞர் தமிழ்ச் சங்கம் புதுக்கோட்டை செயலாளர் திரு.த.சந்திரசேகரன் அவர்கள், கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்,தாட்கோ தலைவர திரு.நா.இளையராஜா அவர்கள் மற்றும் கழக மாநில-மாவட்ட-மாநகர-ஒன்றிய-
நகர பேரூர் கழக நிர்வாகிகள்,சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள்,ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில், கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும் - தமிழ்நாட்டின் உரிமை & வளர்ச்சிக்காகவும், இச்சிறப்புக்குரிய பொதுக்குழுவில் 27 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை செயல்படுத்திட, சிறப்பு தீர்மானத்தை நம் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது 30% வாக்காளர்களை 2 மாதங்களில் பூத் கமிட்டிகள் மூலம் கழக உறுப்பினர்களாக்கிட நம் முதலமைச்சர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார்கள்.
கல்வியாளர் அணி - மாற்றுத்திறனாளிகள் அணி என கழகத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முடிவுகளும் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
கழகத்தின் கொள்கைகள் - திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் கழக கூட்டணியை 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்லச் செய்ய பொதுக்குழுவில் உறுதியேற்றோம்.
2026-இல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்!
#திமுகபொதுக்குழு2025
நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், ‘#தூய்மை_Mission’ திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
‘தூய்மை Mission’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய வாழ்வியல் அங்கம்!
நம்முடைய உலகம் என்றும் நமக்கானதாக இருக்க, மக்கும் குப்பை - மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும்!
#தூய்மை_Mission #TNgovt #IdhuKuppaMatterIlla
தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்!
#கலைஞர்102
தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்!
முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!
#கலைஞர்102 🖤♥
கோடானு கோடி கருப்பு - சிவப்பு தொண்டர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் இன்று.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இந்நாளை #செம்மொழிநாள் என அறிவித்துள்ளார்கள்.
கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை, கலைஞர் அவர்கள் வகுத்தச் சட்டங்களும், தீட்டிய திட்டங்களும் , உருவாக்கிய கட்டமைப்புகளும் தான் இன்றைய தமிழ்நாட்டின் அடையாளம்.
தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களின் சாதனைச் சுவடுகள் பதிந்த இடங்களில் எல்லாம் 102 நிகழ்ச்சிகளை கழகம் இன்று நடத்துகிறது.
இன எதிரிகளை தமிழ்நாட்டுக்கு வெளியே நிறுத்த - துரோகிகளை வீழ்த்த, கலைஞர் அவர்கள் கற்றுத் தந்த 'அரசியல் வியூகம்' தான் பாசிசத்தையும் - அடிமைகளையும் பதற வைக்கிறது.
மண்-மொழி-மானம் காத்திட
மதுரை பொதுக்குழுவில் நம் கழகத்தலைவர் அறிவித்த, ‘ஓரணியில் தமிழ்நாடு' எனும் உறுப்பினர் சேர்க்கையை திறம்பட நிறைவேற்றுவதே கலைஞர் அவர்களுக்கு உடன்பிறப்புகள் நாம் அளிக்கும் உன்னதமான பிறந்த நாள் பரிசு.
2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல உறுதியேற்போம்!
கலைஞரின் கரம்பற்றி பேரலையாய் எழுவோம் - தமிழ்நாடு காப்போம்!!
#கலைஞர்102
களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றியை மட்டுமே பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினோம்.
தனிப்பெரும் வீரத்தாலும் - தமிழ் மொழியின் சிறப்பை பாதுகாத்த காரணத்தாலும் வரலாற்றில் என்றும் அவர் நிலைத்திருப்பார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
@KN_NEHRU