மூளைச்சலவை செய்யப்பட்ட தற்குறி Cult கூட்டம்!
ஆட்சில இருக்கிறது உங்க கட்சி தவெக. CM இந்த Cult-ன் leader விஜய்! உங்கள சொந்த கட்சி கூட்டத்துக்கே விடாம தடுக்குறது உங்க தலைவன் கிட்ட இருக்கிற போலீஸ்! ஆனா, வெட்கமே இல்லாம 'திமுக ஒழிக'னு கத்துறீங்க!
சுயபுத்தியே இல்லாம மந்தைங்க மாதிரி கத்துற உங்கள 'தற்குறி'னு சொன்னா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது!
முதல்ல என்ன மேட்ச், எந்த டீம்க்கு எதிரா ஆடுறோம்னு உங்க Cult Leader கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு வந்து கத்துங்க!
#TVKFails
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவச் சிந்தனையைச் செயலால் தமிழ்நாட்டில் விதைத்த நம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் இன்று.
கலைஞரை நாம் கொண்டாடக் கொண்டாட, சமூகநீதியும் சமத்துவமும் வளரும்.
கொண்டாடுவோம்!
RSS அடிமையே! அடக்கு வாயை!
கொரோனா காலத்தில் கொள்ளையடித்தது பத்தாது என்று, கஜானாவையும் காலிசெய்து ஓடிய எடப்பாடி பழனிசாமி கொரானாவிலுருந்து மக்களை காத்தாராம். கொரோனா பற்றி கழகப்பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் எச்சரித்தபோது நக்கலடித்த எடப்பாடி பழனிசாமி, போதிய அளவு ஆக்ஸிஜனுக்கு கூட ஏற்பாடு செய்யாமல் மக்களை தவிக்கவிட்டுச் சென்றதை மக்கள் மறக்கமாட்டார்கள்.
அப்போது தொழிற்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்கள் பல நாடுகளிடம் பேசி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியும், புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களைத் தொடங்கியும் மக்கள் உயிர்களைக் காத்தார்கள்.
கொரோனா உச்சத்தில் இருந்தபோது பிபிஇ கிட் அணிந்து நோயாளிகளை நேரில் சந்தித்து எங்கள் தலைவர் @mkstalin அவர்கள் நலம் விசாரித்ததை, மாமனார் வீட்டு விருந்துக்குப் போன எடுபிடி பழனிசாமி மறந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள்.
தான் ஒரு முன்னாள் முதலமைச்சர், இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கட்சிக்குப் பொதுச்செயலாளர் என்பதை மறந்து கீழ்த்தரமாக பேசும் அடிமை பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை.
மிசாவையே பார்த்தவர் எங்கள் தலைவர். கொரோனாவுக்கா அஞ்சுவார். தோல்வி பயத்தில் பிதற்றித் திரியும் பத்து தோல்வி பழனிசாமி, பதினோராவது தோல்வியை சந்திக்கும் முன் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது!
#SayNoToNDA
மகாராஷ்டிர முதலமைச்சர் அவர்களே...
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் ஒரு முதலமைச்சருக்கு அழகா?
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற பாஜக எவ்வளவு முயன்றாலும், திமுக இருக்கும்வரை அது நடக்காது.
மகளிர் முன்னேற்றத்தைத் தடுப்பது, விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது, தமிழை அழிப்பது ஆகியவை தான் பாஜக மற்றும் மோடியின் கொள்கைகள்.
அவர்களின் திட்டம் தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது.
டெல்லியின் அதிகாரத் திமிரையும், மொழித் திணிப்பு எனும் வஞ்சக நஞ்சையும் தமிழ் மண்ணில் வேரூன்ற விடமாட்டோம்! எங்கள் பிள்ளைகளின் கல்வி உரிமையைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்தைச் சூறையாடத் துடிக்கும் ஆதிக்கச் சக்திகளுக்கு மண்டியிட இது அடிமைகளின் மண்ணல்ல.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி, வரிப்பணத்தைச் சுரண்டி, எம் மாநில உரிமைகளை அடகு வைக்க நினைக்கும் டெல்லியின் வஞ்சகப் போக்கைச் சுட்டெரிப்போம். கல்விப் பறிப்பு, பொருளாதார ஒடுக்குமுறை என எம்மண்ணின் இறையாண்மையைச் சிதைக்கத் துடிக்கும் எவரையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மாநில சுயாட்சி காக்கவும், நம் சந்ததியினரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், தமிழர்களின் எஃகுக் கோட்டையாம் கழகத்தின் உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிப்போம்!
எழட்டும் சூரியன்! வீழட்டும் ஆதிக்கம்!
வாக்களிப்பீர் உதயசூரியன்
#VoteForDMK
"பெண்கள் பாதுகாப்பு" என்று நாடகமாடிக் கொண்டு வீதிக்கு வரும் அதிமுகவினரின் உண்மையான வக்கிர முகத்தை, சி.வி. சண்முகத்தின் அருவருப்பான பேச்சுகள் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளன.
ஒரு பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர், பொதுமேடையில் நின்று கொண்டு "எனக்கு ஒரு நடிகை வேண்டும், முதலமைச்சர் நிறைவேற்றுவாரா?" என்று தரம்தாழ்ந்து பிதற்றுவது அவரது அருவருப்பான மனநிலையைக் காட்டுகிறது. இதற்கு முன்பு "திமுக ஆட்சியில் மனைவியையும் இலவசமாகக் கொடுப்பார்கள்" என்று பெண்களை மிகக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியவரும் இதே சண்முகம் தான். தரம் என்று ஒன்று இருந்தால் தானே தாழ்வதற்கு?
ஒரு பெண்ணைத் தலைவராக ஏற்றுக்கொண்ட இயக்கம் என்று மார்தட்டிக்கொள்ளும் அதிமுகவில், பெண்களை இவ்வளவு கேவலமாக இழிவுபடுத்தும் ஒருவரை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மேடைகளில் பேசவிடுவது ஏன்? சண்முகத்தின் இந்த வக்கிரமான பேச்சுகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் மௌனமே பச்சைக்கொடி காட்டுகிறதா?
தமிழ்நாட்டுப் பெண்களுக்குத் தங்களின் சுயமரியாதையைக் காக்கும் உண்மையான அரண் யார் என்பது மிக நன்றாகவே தெரியும். அதனால்தான், பெண்களைப் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதியாகவும் தலைநிமிரச் செய்யும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் கரங்களை அவர்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றனர். அதே சமயம், எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர் தோல்விகளை மட்டுமே பரிசளித்து வருகின்றனர்.
பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் சண்முகம் போன்றவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, பொதுவெளியில் பெண்ணுரிமை பேசும் அருகதை அதிமுகவிற்கு சிறிதும் இல்லை. இதற்கு சண்முகமும் எடப்பாடி பழனிசாமியும் தமிழ்நாட்டுப் பெண்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!