தமிழ்நாடு நாளிலாவது,
தமிழுக்கே முதலிடம் என்பதை அரசு உறுதி செய்யுமா?
பெயர்ப்பலகை விதியை,
தமிழ்நாடு அரசு முழுமையாக அமல்படுத்துமா?
நவம்பர் 1 ஆம் தேதியைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டின் பொது வெளியில் தமிழுக்கு உரிய முதலிடம் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்ற வேண்டும் என இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
எனவே, இந்தத் தமிழ்நாடு நாளில், பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளைத் தீவிரமாகக் கண்காணித்து, விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு நாள் என்பது வெறும் விழாவாக மட்டும் அமையக் கூடாது. தமிழின் உரிமை, தமிழர்களின் அடையாளம், தமிழ்நாட்டின் தனித்துவம் ஆகியவற்றை நடைமுறையில் நிலைநாட்டும் நாளாகவும் அமைய வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பெயர்ப்பலகைகளிலும் “தமிழ் முதலில்” என்ற நிலையை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#TamilFirst #tamil #TamilRights
#தமிழ்நாடுநாள் #தமிழ்மொழி
காவிரி – வைகை – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்!
என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற கோரிக்கை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினேன்.
#காவிரி_வைகை_குண்டாறு
#நதிநீர்_இணைப்புத்_திட்டம்
#விவசாயிகள்_வாழ்வாதாரம்
#நீர்வள_மேலாண்மை
#தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி
தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெறுவதில் அரசுக்கு விருப்பம் இல்லையா?
நீர்வளத்துறை செயலாளராக வடமாநிலத்தவரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளோடும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும் தொடர்புடைய காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதில் தமிழ்நாடு அரசு காட்டி வரும் தாமதத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய செல்வராஜ் அவர்கள் கடந்த 28.06.2026 அன்று பதவியிலிருந்து விலகிய நிலையில், அந்தப் பொறுப்பு காலியானது. இதையடுத்து, அப்பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை கடந்த 09.10.2026 அன்று வெளியிட்ட அரசாணை எண் 71 மூலம், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதற்கான அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்புக்கு தற்போது பணியில் உள்ள நீர்வளத்துறை தலைமைப் பொறியாளரை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்பட்டு 17 நாட்கள் கடந்தும், துணைத்தலைவரின் பெயரை அரசு இதுவரை அறிவிக்காதது ஏன்?
அரசாணை பிறப்பிப்பதோடு நிர்வாகத்தின் கடமை முடிந்துவிடுகிறதா? நியமனத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் அப்பொறுப்பை நிரப்புவதில் மேலும் தாமதம் செய்வதன் நோக்கம் என்ன?
காவிரி தொழில்நுட்பக் குழுமம் தமிழ்நாட்டின் மாநிலங்களுக்கு இடையேயான நீர்விவகாரங்களில் தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கும் முக்கிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி உள்ளிட்ட நீர்விவகாரங்களில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பத் தரவுகள் மற்றும் ஆவணங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் இவ்வமைப்பின் பங்கு முக்கியமானது.
அப்படியிருக்க, இவ்வளவு முக்கியமான அமைப்பின் துணைத்தலைவர் பதவியை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னரும் நியமனத்தை நிறைவு செய்யாமல் இருப்பது ஏன்?
அரசாணை வெளியிட்ட பிறகும் ஒருவரை நியமிக்க முடியாத அளவுக்கு தமிழ்நாட்டின் நீருரிமை விவகாரங்கள் அரசுக்கு முக்கியத்துவம் இல்லாதவையா?
அரசாணை இருக்கிறது. அனுமதி இருக்கிறது. கூடுதல் நிதிச்சுமையும் இல்லை. அப்படியென்றால் தாமதம் ஏன்?
நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்களும்,
நீர்வளத்துறைச் செயலாளர் பிரசாந்த் எம். வட்நரே அவர்களும், அரசாணை எண் 71 வெளியிடப்பட்ட பிறகும் துணைத்தலைவர் நியமனத்தை நிறைவு செய்யாததற்கான காரணம் என்ன?
என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நீராதாரத் தேவையை உணர்ந்து தெரிந்த, தமிழ்நாட்டில் உள்ளவர்களை நீர்வளத்துறை செயலாளராக நியமிக்காமல், வட மாநிலத்தவரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
தமிழ்நாட்டின் நதிநீர் உரிமை என்பது ஒரு சாதாரண நிர்வாகப் பிரச்சினை அல்ல. அது விவசாயிகளின் வாழ்வாதாரம், குடிநீர்ப் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் நீர்வள எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கியமான பிரச்சினையாகும்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அரசாணை எண் 71-ன் அடிப்படையில் தகுதியான தலைமைப் பொறியாளரை காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பிரிவின் துணைத்தலைவராக காலதாமதமின்றி நியமிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#SaveTamilNaduWaterRights #CauveryWaterRights
#தமிழ்நாட்டின்_நீருரிமை #காவிரி_நீருரிமை
SIR இல் குழப்பம் நீங்காத நிலையில், SSR எதற்காக?
வாக்குரிமைக்காக வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு, மக்கள் நாள்தோறும் அலைய வேண்டுமா?
வாக்காளர் பட்டியலைச் சீரமைப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த SIR நடவடிக்கையில், தமிழ்நாட்டின் இறுதிப் பட்டியலில் சுமார் 70 லட்சம் வாக்காளர் பதிவுகள் நீக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் பதிவுகள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், SIR நடவடிக்கையில் எழுந்த அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் கிடைத்துவிட்டதா? தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படவில்லை என்பதற்கான உறுதி என்ன?
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அதன் உள்ளேயே ஆட்சேபனைகள் எழுந்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாதீனம் குறித்த கேள்விகளுக்கு ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டாமா?
SSR மூலம் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், விவரங்களைத் திருத்துதல், தகுதியற்ற பதிவுகளை உரிய நடைமுறையில் நீக்குதல் போன்ற பணிகள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அப்படியானால், SIR-ல் பெயர் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் அனைவரும் SSR மூலம் எந்தத் தடையும் இன்றி மீண்டும் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பதற்கான உத்தரவாதம் என்ன?
தவறான நீக்கம், தொழில்நுட்பப் பிழை அல்லது தரவுப் பொருத்தப் பிழையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அதைச் சரிசெய்வதற்கான எளிய நடைமுறை என்ன? அந்தத் தவறுக்கு பொறுப்பேற்பது யார்?
ஒரு தொழிலாளி, விவசாயி, கூலித் தொழிலாளி, சிறு வணிகர் அல்லது நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தனது வாழ்வாதாரத்திற்காக உழைக்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு புதிய நடைமுறைக்காகவும் ஆவணங்களைத் தூக்கிக்கொண்டு அலுவலகம் அலுவலகமாக அலைய வேண்டுமா?
அரசின் நடைமுறைகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக இருக்க வேண்டும். மக்களின் நேரத்தையும் உழைப்பையும் பறிப்பதற்காக அல்ல.
தேர்தல் ஆணையத்தின் சுயாதீனம் குறித்து அரசியல் தரப்புகளில் கேள்விகள் எழும் நிலையில், அதன் ஒவ்வொரு முக்கிய நடவடிக்கைக்கும் காரணம், நடைமுறை, பொறுப்பு ஆகியவற்றை வெளிப்படையாக விளக்க வேண்டிய கடமை ஆணையத்திற்கு உள்ளது.
ஒன்றிய அரசின் செல்வாக்கு அல்லது தலையீடு இருப்பதாக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோல், தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் மாநில அரசு நேரடியாக தலையிட முடியாது என்றாலும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படாமல் இருக்க சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இல்லையா?
மக்களின் வாக்குரிமை அரசின் கருணையால் வழங்கப்படும் சலுகை அல்ல. அது அரசியலமைப்பு வழங்கிய உரிமை.
எனவே, தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் ஒரு விஷயத்தில் தெளிவான உறுதியை வழங்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி.
#தேர்தல்ஆணையம் #வாக்காளர்உரிமை #வாக்குரிமைபாதுகாப்பு #வெளிப்படையானதேர்தல்
#ElectionCommission #VoterRights
#tamil
தமிழர் நிலங்களில் இன்னும் இராணுவம் எதற்காக?
இலங்கை அரசு, தமிழர் நிலங்களை இன்றும் விடுவிக்க மறுப்பது ஏன்?
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும், ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்க முடியாதா?
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான ஆயுதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், அந்தப் பேரவலத்திற்கு முன்னதாகத் தமிழர்களின் வீடுகளாகவும் விளைநிலங்களாகவும் வாழ்வாதாரமாகவும் விளங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இன்றளவும் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிடியிலேயே நீடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
2017-ஆம் ஆண்டிலேயே வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 30,000 ஏக்கர் தனியார் நிலங்கள் பாதுகாப்புப் படைகளின் வசமிருப்பதாக இலங்கை அரசே ஒப்புக்கொண்டது. குறிப்பாக, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டதை பல்வேறு கள ஆய்வுகள் பதிவு செய்துள்ளன.
2026-ஆம் ஆண்டிலும் "பாதுகாப்புக்குத் தேவையில்லாத நிலங்களை விடுவிக்க ஆய்வு செய்கிறோம்" என இலங்கை அரசு கூறுவது, இத்தனை ஆண்டுகளாய் நில மீட்பு முழுமையடையவில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது.
ஆயுத மோதல்கள் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?
தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் எந்த நிலம் தேவை, எது தேவையில்லை என்ற வெள்ளை அறிக்கையை இதுவரை வெளிப்படையாக வெளியிடாதது ஏன்?
தேவைப்படாத நிலங்களை விடுவிப்பதில் உள்ள தயக்கம், சொந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர் இனப்பாகுபாட்டையே காட்டுகிறது. இதற்கு இலங்கை அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
நிலத்தை இழப்பது என்பது ஒரு குடும்பத்தின் தலைமுறை அடையாளம், தொழில், பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகள் அனைத்தையும் இழப்பதாகும். மக்களின் விளைநிலங்களை இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்கும் செயலாகும்.
வடக்கு கிழக்கில் இராணுவப் பிடியிலுள்ள தமிழர்களின் தனியார் நிலங்கள் குறித்து விரிவான நிலவர அறிக்கையை இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோர வேண்டும். நிலங்களை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க இலங்கை அரசைத் தூதரக ரீதியாக வலியுறுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்சிக்குத் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறும் ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
இந்தியா–இலங்கை இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் நிலவுரிமை, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை முதன்மை நிபந்தனையாக முன்வைக்க வேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களின் பட்டியலைப் பெற்று, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவை மக்களிடம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.
தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படைச் சொத்துரிமையைக் காலவரையின்றிப் பறிக்க முடியாது. பாதுகாப்புக்குத் தொடர்பற்ற அனைத்து நிலங்களையும் தாமதமின்றி விடுவித்து, ஈழத்தமிழர்களின் நில உரிமை, வாழ்வாதாரம் மற்றும் மனித உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உறுதியான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#தமிழர்நிலம்தமிழருக்கே
#ஈழத்தமிழர்நிலவுரிமை
#ReleaseTamilLands #tamil
#EelamTamilLandRights
போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும், சொந்த வீடுகளுக்கும் விளைநிலங்களுக்கும் திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பது மிகுந்த கவலைக்குரியது. பாதுகாப்புக்குத் தேவையில்லாத நிலங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசு தெளிவான கால அட்டவணையை அறிவிக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் நிலவுரிமை என்பது வெறும் சொத்துப் பிரச்சினையல்ல; அது அவர்களின் வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் அடிப்படை மனித உரிமையுடன் தொடர்புடையது!
மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களே தங்களின் பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலை மாற வேண்டும். போராட்டங்களைத் தடுப்பதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து, நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்கு உறுதியான காலக்கெடுவுடன் தீர்வு வழங்குவதுதான் அரசின் பொறுப்பு. மருத்துவப் பணியாளர்களின் நலன் என்பது பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்போடும் தொடர்புடையது!
#மருத்துவப்பணியாளர்கள்உரிமை #HealthcareWorkersRights #பணிநிரந்தரம் #தொழிலாளர்_உரிமைகள் #TamilNadu
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும்!
மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது. இரு இனங்களுக்கு இடையே வன்முறை. மணிப்பூர் தலைநகர் இம்பால், அதை ஒட்டியுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் பழங்குடி அல்லாத மெய்த்தி மக்கள். மலைப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் குக்கி பழங்குடி மக்கள். மற்ற சிறுசிறு பிரிவு பழங்குடிகளும் உண்டு.
இந்நிலையில், மணிப்பூரில் குக்கி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கவலை அளிக்கிறது; பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும், ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த சம்பவம் அரங்கேறி 77 நாட்கள் ஆன பிறகே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றது கடும் வேதனை அளிக்கிறது. இதனை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை.
எனவே, பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ள நிலையில், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர, ஒன்றிய அரசும், அம்மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கும், தலா 30 இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற பல்வேறு குற்றங்கள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகிறது. ஆக, மணிப்பூர் வன்முறை குறித்து, விரிவான விசாரணை நடத்த ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தலைவர் @VelmuruganTVK அவர்கள் தலைமையிலான அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தலைவர் அவர்களின் தலைமையில் அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டம் இன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அப்போது ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் நிலுவையில் உள்ள அரசு உறுதி மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தலைதூக்கும் போதை கலச்சாரம் : சீரழியும் எதிர்கால தலைமுறை!போதைப்பொருட்கள் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பு,சமுதாய சீரழிவு குறித்தும் மதுவால் ஏற்படும் தீமை குறித்தும் அவர்களுக்கு புரிய வைப்பதோடு சீரழிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், காவல்துறைக்கு உள்ளது.
அரியலூரில் நடைபெறும் 14-ம் ஆண்டு,
"#மே18- முள்ளிவாய்க்கால்" நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கிறார் @tvkpaarty தலைவர் அண்ணன் @VelmuruganTVK அவர்கள்..
அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டம் இன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் நிலுவையில் உள்ள அரசு உறுதி மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான @VelmuruganTVK அவர்களை நியமனம் செய்த @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி.
அடுக்கடுக்காக நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி தமிழ்நாட்டின் விவசாயத்தை முற்றாக அழித்து பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி. அவர்களைக் கண்டித்து கருப்பு கொடி காட்டும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் போராட்டம் தற்போது துவங்கியது.