தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவராக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தி. வேல்முருகன்.அவர்களை மீண்டும் .
நியமனம் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி.
ஒன்றிய அரசின் புதிய விமான நிலைய அமைக்கப்பட உள்ள பரந்தூர்,ஏகணாபுரம் பகுதிகளைச்சேர்ந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் @VelmuruganTVK சந்தித்து தங்களுக்காக தொடர்ந்து சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பி வருவதற்காக நன்றி தெரிவித்தனர்.
@VelmuruganTVK அவர்கள்
உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சிறப்பு சட்டமியற்றி மீண்டும் நடைமுறை படுத்துதல் குறித்து விவாதிக்க வேண்டி பேரவைக்கு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றி பெற்றுள்ள திரு. நவாஸ் கனி.MP அவர்கள் @VelmuruganTVK அவர்களை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான @VelmuruganTVK அவர்கள்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சாவுகள் குறித்து இன்று சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
தலைவர் @VelmuruganTVK
அவர்களை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றி பெற்றுள்ள திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன்.MP அவர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
பாலாற்றில் மேலும் ஒரு தடுப்பணையைக் கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயலும் ஆந்திர அரசைக் கண்டித்து தற்போது காஞ்சிபுரத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் @VelmuruganTVK
அவர்கள் பங்கேற்றுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணையின் போது நாட்டின் பொருளாதாரம் குறித்து கவலை கொள்ளும் உச்சநீதிமன்றம் அப்பகுதி மக்களின் உடல்நலம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் கவலை கொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது.
வேதாந்தா நிறுவனம் அப்பகுதி மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து எந்த அக்கறையுமின்றி செயல்பட்டதால்தான் அந்நிறுவனம் மூடப்பட்டது அதை மீண்டும் திறக்கும் நோக்கில் குழு அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த பிறகும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் இக்கருத்து மக்கள் விரோதமானது.
எனவே @CMOTamilnadu அவர்கள் நடைபெறும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்க்கு எதிராக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசினர் தீர்மானத்திற்கு வரவேற்று தெரிவித்து பேசியது குறித்து பத்திரிகையாளர்களிடம் தலைவர் @VelmuruganTVK அவர்கள் .
தேமுதிக நிறுவனத் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான திரு.விஜயகாந்த்.அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து தலைவர் @VelmuruganTVK அவர்கள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
#VijayakanthRIP
தேமுதிக நிறுவனத் தலைவரும் புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான திரு.விஜயகாந்த்.அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்கின்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திரு.விஜயகாந்த்.அவர்களது மறைவிற்கு தலைவர் @VelmuruganTVK அவர்கள் இரங்கல்.
#vijayakanth
வரி என்கின்ற பெயரில் எங்கள் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை அள்ளிக் கொண்டு போய் தாங்கள் ஆளும் மாநிலங்களில் வாரி வழங்கும் வேலையைத்தான் ஒன்றிய அரசும் நிதி அமைச்சரும் செய்கின்றனர். தலைவர் @VelmuruganTVK அவர்கள் நேர்காணல்.
அன்பு,கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி.
மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.ராஜு. அவர்களின் தந்தையார் . சிவக்கொழுந்து.அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானதையடுத்து விருத்தாசலத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று தலைவர் @VelmuruganTVK அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தலைவர் @VelmuruganTVK அவர்கள் பண்ருட்டி நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிவைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
எண்ணூர் கழிமுக எண்ணெய் கசிவிற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் : சுற்றுச்சூழலுக்கும், மீனவ மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை தேவை! தலைவர் @VelmuruganTVK அவர்கள் அறிக்கை.
#cpcl