16-7-2026 அன்று, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இந்த துயர சம்பவத்தின் 22 வது நினைவு நாளில், பள்ளிக்கு சென்று, அங்கே வைக்கப்பட்டிருந்த திருவுருவங்கள் அடங்கிய பதாகைக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
கும்பகோணம் தில்லையம்பூர் ஊராட்சி கீழத்தெருவை சேர்ந்த பவுன்ராஜ்- லலிதா இவர்களின் மகன் வினோத் அவர்கள் மின்சார கம்பத்தில் வேலை பார்க்கும் போது மின்சாரம் தாக்கி இறந்து விட்டார்.அவர் இறந்த போது நமது சாக்கோட்டை க. அன்பழகன் EX MLA அமெரிக்காவில் இருந்தார்.வெளிநாட்டியிலிருந்து வந்த உடன் 15/7/2026 அன்று நமது தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் EX MLA அவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நிதி வழங்கி அவரது துணைவியாருக்கும்,தாயாருக்கும் ஆறுதல் கூறினார்.அருகில் தில்லையம்பூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் T.N.கரிகாலன் அவர்கள்,பெரும்பாண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் கே பாஸ்கர் அவர்கள்,மு.ஒ.குழு.உறுப்பினர் பாண்டியன், கிளைக் கழகச் செயலாளர் ஆனந்த், ராஜ்மோகன், ராஜசேகர், சாமிநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
எளிமை, நேர்மை, தியாகம், மக்கள் சேவை – இவற்றின் மறுபெயர் பெருந்தலைவர் காமராஜர்.
கல்வியின் ஒளியை ஏற்றிய கர்மவீரரின் உயரிய சிந்தனைகளும், மக்கள் நலப் பணிகளும் என்றும் நம் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
#காமராஜர் #Kamarajar
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் "பாப்பா" (Baby) என்று மிகத் தெளிவாகவும், மீண்டும் வலியுறுத்தியும் பேசிய பிறகும்,
அதை வேண்டுமென்றே சாதிய ரீதியாகத் திரித்து, 'விக்டிம் கார்டு' மூலம் சமூகப் பதற்றத்தை உண்டாக்கப் பார்க்கும் அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது!
அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு, இவ்வளவு மலிவான அரசியலைச் செய்யும் உங்களுக்கு அந்த இருக்கையில் அமரும் தகுதிதான் இருக்கிறதா?
வாயைத் திறந்தாலே பச்சைப்பொய்களையும், வதந்திகளையும் கொட்டி மக்களைக் குழப்பும் இந்த 'தமிழக விக்டிம் கார்டு கழகத்தின்' (Tamilaga Victimcard Kazhagam) அழுகுனி நாடகங்கள் இனியும் எடுபடாது!
SRM விவகாரத்தில் நீங்கள் செய்ததாக அங்கும், உங்கள் வீடு அமைந்துள்ள மறைமலை நகர் பகுதி மக்களும் உங்களைப் பற்றித் துப்பிக் கொட்டும் உண்மைகளும் திமுகவுக்கு தெரிந்து விட்டதே என்பது உங்களுக்கு வலிக்கத் தானே செய்யும்!
26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, இன்று (30.6.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அவர் முதலமைச்சராக இருந்தபோது, மாற்றுத் திறனாளிகளை சிறப்பிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக நியமித்து உத்தரவிட்டு, அதன்படி உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கொண்ட “தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற உறுப்பினர் நலச் சங்க”த்தின் மாநில நிர்வாகிகளான கோவை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான சா.குமாரராஜபாண்டியன், சென்னை மாநகராட்சி மன்ற நியமன உறுப்பினரான பி.ஜான்சிஉமா, கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ஆர்.எம்.சாகுல், செங்கல்பட்டு நியமன உறுப்பினரான எம்.சிவலிங்கம், காட்பாடி நகராட்சி மன்ற நியமன உறுப்பினரான ரங்கசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்ற நியமன உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அத்துடன், தி.மு.க. மாற்றுத்திறனாளிகள் அணி மாநில செயலாளர் பேராசிரியர் டி.எம்.என்.தீபக், மாநில தலைவர் ரெ.தங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சந்தித்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் உடனிருந்தனர்.