நேபாளத்தின் எல்லை அருகே சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கையான தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இது உடைந்தால் 2ஆம் கட்ட வெள்ளப் பெருக்கு 72 மணி நேரத்தில் ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை
விடுத்துள்ளது.
நேபாளம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் உறவினர்கள்
வடக்கு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் சென்ற 148 பேர் கொண்ட குழுவினர் சாகா எனும் இடத்தில் பத்திரமாக இருக்கிறார்கள்
குழுவில் ஒருவரான தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டுள்ளார்
second flight has just taken off, carrying 37.5 tonnes of HADR material, medicines & food packets for Nepal.
India remains in close and continuous touch with the Nepalese authorities. We will continue to strongly support the ongoing relief efforts.
நேபாள திடீர் வெள்ளப் பெருக்கில் இதுவரை 157 பேர் உயிரிழப்பு.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம். இந்தியர்கள் பலர் உட்பட 400-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரம்.
ஒரு லட்சம் டாலர் பத்திரத்துக்கு அமெரிக்க கிரீன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமலானால் குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெறுவது மிக செலவுமிக்கதாகிவிடும். குடியேறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை அமல்படுத்த டிரம்ப் அரசு பரிசீலனை
தகேடா பார்மாசூடிக்கல்ஸ் இந்தியா நிறுவனம் டெங்குவுக்கு கியூடெங்கா (QDENGA) என்ற பெயரில் தடுப்பூசி தயாரிப்பு.
4 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பூசியை. ஏற்கனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கியூடெங்கா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம
கர்நாடக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மாநில முதலமைச்சர்கள் தனித்தனியாக சந்தித்துள்ளனர்
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக அண்மையில் பதவியேற்ற டி.கே சிவகுமார் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தனியாக சந்திப்பு
இல்லம் திரும்பினார் முதல்வர் விஜய்
நாட்டின் 11வது நிதி அயோக் கூட்டத்தில் சுமார் 8 மணி நேரங்களுக்கு மேல் முதல் முறையாக பங்கேற்ற பின்னர் தமிழ்நாடு அரசு இல்லம் திரும்பினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
Place : தமிழ்நாடு அரசு இல்லம் - டெல்லி
முதலமைச்சர் விஜய் செய்தியாளர் சந்திப்பு?
நாட்டின் மிக முக்கிய கூட்டமான நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்து டெல்லி தமிழ்நாடு அரசு இல்லதிற்கு முதல்வர் விஜய் திரும்பவுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்புக்கான வழக்கமான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
"பிரதமர்-முதல்வர்"
நேருக்கு நேர்
டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிர் வரிசையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் அமர வைக்கப்பட்டுள்ளார். 'ABCD' வரிசையில் முதல்வர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்கை குழு கூட்டத்தில் முதல்வர் விஜய்
நாட்டின் மிக முக்கியமான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றுள்ளார். தமிழக முதலமைச்சருடன் தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ் பங்கேற்றுள்ளார்.
தீ விபத்து
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லியில் தங்கியுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து. முதல்வர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களில் தீ விபத்து. ஏ.சி மின் கசிவு காரணமாக தீ விபத்து என முதற்கட்ட தகவல்.