உன்கிட்ட பேசுனா
நல்லாருக்கும்ன்னு
தோணுச்சு
அதான் வந்தேன் என்று
நம்மிடம் சொல்வதற்கும்,
நாம் சென்று சொல்வதற்கும்
யாரேனும் இருந்துவிட்டால்
போதும் இந்த வாழ்வுக்கு.
-யாத்திரி
நடந்ததைப் பேச
நடப்பதை ஆலோசிக்க
ஒருவரைத் தேடுகிறபோது
அவருடைய நேசத்தின்
அளவு புரிகிறது
நெருக்கத்தில் விலகியும்
தயக்கத்தில் பழகியும்
முடியவே முடியாத உறவைத்தான்
காதலென்று சொல்கிறோமா?
-யுகபாரதி
அவன் ஏளனச்சிரிப்பு…
மாற்றத்தை நம்பி ஏமாந்த
மானங்கெட்ட என் இனமே..
என் எலும்பை பார்த்தாவது
எம்மை தவிர
எவன் ஆட்சிக்கு வந்தாலும்
எதுவும் நடக்காது….
அழித்தவனிடமும்
ஆயுதமளித்தவனிடமும்
ஆதரவளித்தவனிடமும்
நீதி எங்கே கிடைக்கும் என்று
ஓர் ஏளனச்சிரிப்பு..