SIR அழுத்தம் மற்றும் திமுக நிர்வாகி மிரட்டல் காரணமாக மேலும் ஒரு தற்கொலையா???
SIR பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மிகுந்த பணிச்சுமை காரணமாக மன அழுத்ததில் உள்ளனர் என்று நாம் தொடர்ந்து குரலெழுப்பி வந்த நிலையில், கள்ளக்குறிச��சி மாவட்டம் திருக்கோவலூர் அருகே அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருகின்றன?
அவசர கதியில் நடத்தப்படும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிகாரிகளுக்கு அதிக பணிச்சுமையும் கொடுத்து வருகிறது. இதை மாநிலத்தை ஆளு��் திறனற்ற திமுக அரசு தடுக்க தவறியதோடு, BLO அதிகாரிகளுக்கு திமுக ஆதரவாக செயல்படுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. நேற்று நடந்த சம்பவமும் ஆளுங்கட்சியினரின் அழுத்ததில் நடந்திருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதை குறித்த முழுமையான விசாரணை வெளி வர வேண்டும்.
இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க போகிறது SIR? இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், அரசு அதிகாரிகளின் ம���தான பணிசுமை குறைக்கும் பொருட்டும், தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய முன் வர வேண்டும். மேலும் BLO அதிகாரிகளின் மீதான அரசியல் கட்சிகளின் தலையீட்டை உடனடியாக தடுக்க வேண்டும்.