💐 'கில்லி' படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நான்சி ஜெனிஃபருக்கு இன்று திருமணம் நடந்தது!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 'வள்ளி', 'சித்தி 2' சீரியல்களிலும் நடித்திருக்கிறார். திருமண வீடியோவை நடிகை ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.
வாழ்த்துகள் நான்சி 🎉
#NancyJennifer #Ghilli #Vijay
�� swetha_subramanian92
💕 ��ாளிதாஸ் ஜெயராமின் 'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்'
'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' வெப் சீரிஸ் இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கியிருக்கும் ரொமான்ஸ் காமெடி படம் இது. காளிதாஸுக்கு ஜோடியாக லட்சுமி ஜோதிஷ் நடித்திருக்கிறார். லால் முக்கிய வேடத்தில் வருகிறார்.
நம்மைச் சுற்றியுள்ள உறவுகளும் நெருக்கமானவர்களும் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய எமோஷனல் கதை என்கிறது படக்குழு.
🎵 இசை: ���ோவிந்த் வசந்தா
📅 டிசம்பர் 4 முதல் தமிழ், மலையாளத்தில் வெளியாகிறது.
#ManyManyHappyReturns #KalidasJayaram #GovindVasantha
💑 கிருஷ்ண வம்சியுடன் விவாகரத்தா? ரம்யா கிருஷ்ணன் விளக்கம்
"நாங்கள் இப்போதும் 100% கணவன் மனைவிதான்" என்று சொல்லியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
ரம்யா சென்னையில், கிருஷ்ண வம்சி ஹைதராபாத்தில் வசிக்கிறார்கள். சீரியலில் நடிக்கத் தொடங்கியபோது, 15 நாளுக்கு ஒருமுறை ஷூட்டிங் முடித்து ஹைதராபாத் சென்று வந்தாராம். அவர் ஒவ்வொரு முறை கிளம்பும்போதும் மகனுக்கு உடம்பு சரியில்லா���ல் போனது. அதனால் இருவரும் சேர்ந்து மகனை சென்னை பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.
"தனித்தனியாக இருப்பதால் இப்போது நாங்கள் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். சண்டையும் குறைந்துவிட்டது" என்று சிரித்தபடி சொல்லியிருக்கிறார் 😄
image: filmibeat
#RamyaKrishnan #KrishnaVamsi
🎬 'சண்டியர்' தலைப்பு சர்ச்சை: தயாரிப்பாளர் சங்கம் விளக்கம்
“13 ஆண்டுகளுக்கு முன்பே 'சண்டியர்' என்ற பெயரில் ஒரு படம் வெளியாகிவிட்டது. அப்போது யாரும் எதிர்க்கவில்லை” என்று சங்கத் தலைவர் தமிழ்குமரன் கூறியிருக்கிறார்.
சங்கத்தில் பதிவு செய்யப்படும் தலைப்பு 10 ஆண்டுகள் அந்தத் தயாரிப்பாளரிடம் இருக்கும். அதன் பிறகு, அவரது அனுமதியுடன் மற்றவர்களும் அந்தத் தலைப்பைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
🙏 முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அமைச்சர் ராஜ்மோகனுக்கும் சங்கம் நன்றி தெரிவித்தது. காரணங்கள்:
• 2015–2022 காலத்தில் வெளியான 224 படங்களுக்கு தலா ₹7 லட்சம் மானியம். மொத்தம் ₹15.64 கோடி.
• காலை 6 மணி சிறப்புக் காட்சி உட்பட, தினமும் 6 காட்சிகள் திரையிட ஒரே உத்தரவில் அனுமதி.
🏆 2027 பொங்கலு���்கு பிரம்மாண்ட விழா நடத்தி, மூத்த தயாரிப்பாளர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கவும் சங்கம் திட்டமிட்டிருக்கிறது.
#Sandiyar #CMVijay #TamilCinema
🎬 #BlackGold விமர்சனம்
கோயிலில் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்படும் தலைமுடி தான் இந்த 'பிளாக் கோல்ட்'. கோடிக்கணக்கான மதிப்புள்ள முடியை ஏற்றிச் சென்ற லாரி, டிரைவரோடு காணாமல் போகிறது. அப்பாவைத் தேடிக் கிளம்புகிறார் மகன் வெற்றி.
👍 தமிழ் சினிமாவுக்குப் புதிதான கதைக்களம். டிரைவராக வரும் லிவிங்ஸ்டனின் நடிப்பு. அருள் டி. சங்கரின் சுருள்வாள் சண்டைக் காட்சி. கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை.
👎 மெதுவாக நகரும் முதல் பாதி. ஹீரோ வெற்றியின் நடிப்பில் உயிரில்லை. க்ரைம் த்ரில்லருக்கான வேகமும் விறுவிறுப்பும் இல்லை.
மொத்தத்தில் நல்ல கதைக்களத்தைச் சொன்ன விதத்தில் சொதப்பியிருக்கிறார்கள் ⭐ 2/5
#Vetri #Livingston
🏆 துரந்தர், ஹனுமான் அன்ஷ் படங்கள��ப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் என்ட்ரியாகத் தேர்வான மராத்திப் படம் 'கோந்தல்' இப்போது தமிழிலும் வெளியாகியுள்ளது!
1970களின் மகாராஷ்டிர கிராமத்தில், குலதெய்வத்துக்காக இரவு முழுவதும் நடக்கும் 'கோந்தல்' சடங்கின் நடுவே ஒரு திருமணம். அந்த ஒரே இரவில் நடக்கும் காதல், துரோகம், பழிவாங்கலே கதை.
👍 ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் 25 நிமிடங்கள், இளையராஜாவின் இசை, ஒளிப்பதிவு, இஷிதாவின் நடிப்பு.
👎 தமிழ் டப்பிங்கில் கிராமத்து ஸ்லாங் ஒட்டவில்லை.
மொத்தத்தில் மராத்தியில் இருந்து வந்திருக்கும் ஒரு 'காந்தாரா' ⭐ 3/5
#Gondhal #Oscars #Ilaiyaraaja
🎬 #Gondhal விமர்சனம்
1970களின் மகாராஷ்டிர கிராமம். குலதெய்வத்துக்காக இரவு முழுவதும் நடக்கும் 'கோந்தல்' சடங்கின் நடுவே ஒரு திருமணம். மணப்பெண்ணை அடைய நினைக்கும் ஊர் பெரிய மனிதரின் மகன், அவளைக் கூட்டிச் செல்லக் காத்திருக்கும் காதலன், நடுவில் சிக்கும் அப்பாவி மாப்பிள்ளை. அந்த ஒரே இரவில் என்ன நடக்கிறது என்பதே கதை.
👍 ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் 25 நிமிடங்கள். மின்சாரம் இல்லாத காலத்து இரவை அழகாகக் காட்டும் ஒளிப்பதிவு. இளையராஜாவின் இசை. மணப்பெண்ணாக வரும் இஷிதாவின் நடிப்பு, குறிப்பாக கிளைமாக்ஸில்.
👎 தமிழ் டப்பிங்கில் கிராமத்து ஸ்லாங் ஒட்டவில்லை. கதாபாத்திரங்க���் அதிகம்.
மொத்தத்தில் மராத்தியில் இருந்து வந்திருக்கும் ஒரு 'காந்தாரா' ⭐ 3/5
🎬 #Flag விமர்சனம்
டெல்லியில் தேசியக் கொடி ஏற்றுவதைப் பார்க்க வேண்டும் என்பது தா��்தாவின் ஆசை. அதை நிறைவேற்ற ஒரு சிறுவன் தனியாக ரயிலில் டெல்லிக்குப் புறப்படுகிறான். வழி தவறி பல மாநிலங்களுக்குச் சுற்றும் அவனை, ஒரு பக்கம் உளவுத்துறையும் இன்னொரு பக்கம் தீவிரவாதிகளும் தேடுகிறார்கள்.
👍 சிறுவன் தீஹனின் துறுதுறு நடிப்பு. தாஜ்மஹால் முதல் திருவள்ளுவர் சிலை வரை, ஒரே படத்தில் இந்தியாவைச் சுற்றிப் பார்த்த உணர்வு தரும் ஒளிப்பதிவு. காதல், மசாலா இல்லாமல் தேசப்பற்று பேசும் முயற்சி.
👎 செயற்கையான வில்லன்கள். பட்ஜெட் குறைவு அப்பட்டமாகத் தெரிகிறது. கிளைமாக்ஸ் கொடியேற்றக் காட்சி கிராபிக்ஸில் ஏமாற்றுகிறது. சில இடங்களில் ஆவணப்படம் பார்க்கும் உணர்வு.
மொத்தத்தில் குழந்தைகளோடு குடும்பமாகப் பார்க்கலாம் ⭐ 2.5/5
#FlagMovie #TamilCinema
💪 "எனக்குப் பிடிக்காத எந்தக் கதாபாத்திரத்துக்கும் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்"
சினிமா குடும்பப் பின்னணி இல்லாமல் வந்ததால், ஒவ்வொரு படத்திலும் தன் திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார் அதிதி ராவ் ஹைத��ி.
சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கத் தயார் என்றும், மனதுக்குப் பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்வதாகவும் ச��ல்லியிருக்கிறார் ✨
#AditiRaoHydari
🏠 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புதுமுகங்கள் நடிக்கும் 'கூடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஷால்!
"பெரிய இதயம் கொண்ட ஒரு அழகான சிறிய கதை" என்று இந்தப் படத்தைப் பாராட்டியிருக்கிறார். அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்குகிறார் ✨
#Koodu#Vishal
கனடா திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் 'பத்தா' (Baththa) படத்துக்கு Best Film விருது🔥
கனடாவில் நடந்த Indian Film Festival of Alberta-வில் பாலாஜி தரணிதரன் இயக்கிய 'பத்தா' சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கிறது. படத்தில் நடித்த சிறுவன் சாய் பிரித்வி ராஜுக்கு Best Actor (Special Mention) விருதும் கிடைத்திருக்கிறது.
#Baththa #VijaySethupathi #BalajiTharanidharan #IFFA
கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் 2 தமிழ் படங்கள்
நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடக்கும் 57வது IFFI-ல், Indian Panorama பிரிவில் ராதிகா நடித்த 'தாய் கிழவி' (Thaai Kizhavi), சத்யசிவா இயக்கிய 'அறிவு' (Arivu) ஆகிய இரண்டு தமிழ் படங்களும் தேர்வாகியிருக்கின்றன. 'அறிவு' டிசம்பர் 11 அன்று Release ஆகிறது.
#IFFI2026 #ThaaiKizhavi #Arivu #IndianPanorama
"இந்திய சினிமா வருமானத்தில் 70% தெலுங்கு மக்களிடம் இருந்துதான் வருகிறது" – ராணா
விசாகப்பட்டினத்தில் நடந்த CII மாநாட்டில் பேசிய ராணா, "இந்திய மக்கள் தொகையில் தெலுங்கு ��ேசுபவர்கள் 10% தான். ஆனால் சினிமா வருமானத்தில் கிட்டத்தட்ட 70% நாங்கள்தான் கொடுக்கிறோம்" என்றார். இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'துரந்தர் 2' (Dhurandhar 2) 1600 கோடி வசூலித்ததைச் சுட்டிக்காட்டி ஹிந்தி ரசிகர்கள் இதை மறுத்து வருகின்றனர்.
#RanaDaggubati #TeluguCinema #Dhurandhar2
பண்டிகை Release-க்கு வாரத்��ுக்கு 6 Show அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி சொன்னது தயாரிப்பாளர் சங்கம்.
2015 முதல் 2022 வரை வந்த 224 படங்களுக்கான மானியம் 8 வருஷமா கிடைக்காமல் இருந்தது. அதுவும் தீபாவளிக்கு முன்பே கிடைத்துவிட்டது. "சினிமா துறையில் இருந்து சென்றதால் எங்கள் கஷ்டம் அவருக்கு தெரியும்" என்று முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்னார் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன்.
#TFPC #Vijay #TamilCinema
தொடர் தோல்விகளில் நயன்தாரா... ரஜினியின் 'தர்மன்' (Dharman) கைகொடுக்குமா?
மலையாளத்தில் 'பேட்ரியாட்' (Patriot), கன்னடத்தில் 'டாக்சிக்' (Toxic) இரண்டுமே பெரிய அளவில் சறுக்கின. தமிழில் 'ஹாய்' (Hai) சுமாரான வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு வந்த 'மூக்குத்தி அம்மன் 2' (Mookuthi Amman 2)-ம் கைகொடுக்கவில்லை. சமீபத்தில் அவருக்கு ஹிட் என்று சொல்லக்கூடியது 'ஜவான்' (Jawan) மட்டும்தான்.
இப்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் 'தர்மன்' மீதுதான் எல்லா நம்பிக்கையும் இருக்கிறது. அஷ்வத் சரியாகக் கையாண்டால் நயனுக்கு கம்பேக் நிச்சயம் என்கிறார்கள்.
#Nayanthara #Dharman #Rajinikanth #AshwathMarimuthu
'ஓம்' டிரெய்லர்
செம்மரக் கடத்தல் கும்பல் தலைவனா�� மிரட்டுகிறார் மம்முட்டி.
அந்த கும்பலுக்குள் அண்டர்கவராக ஊடுருவும் அதிகாரியாக தனுஷ் வருகிறார். கடைசியில் அவரே போலீசுக்கு எதிராகத் திரும்புவது போல டிரெய்லர் முடிகிறது.
சாய் அபயங்கரின் பின்னணி இசை டிரெய்லருக்குக் கூடுதல் பலம்.
11 மணி நேரத்தில் 1 கோடி பார்வைகளைத் தாண்டி டிரெண்டிங்கில் உள்ளது. போஸ்டர்களில் 'Chapter 1' என்று இருப்பதால் இரண்டாம் பாகமும் உண்டு என்கிறார்கள். நவம்பர் 20 ர��லீஸ்.
#OMTrailer #Dhanush #Mammootty #SaiPallavi #Sreeleela
Bollywood-ல் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்
மலையாள 'அங்கமாலி டைரீஸ்' படத்தை ஹிந்தியில் இயக்கியிருக்கிறார் மதுமிதா. இதில் அர்ஜுன் தாஸ்தான் ஹீரோ. ஹிந்தி டப்பிங்கையும் அவரே பேசியிருக்கிறார். "இது ரீமேக் அல்ல, நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம்" என்கிறார் மதுமிதா.
#ArjunDas #AngamalyDiaries #Bollywood