இண்டியா கூட்டணி கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் விசிக சார்பில் நான் முன் கருத்துகள். (ஆங்கிலத்தில்..)
Greetings to all the leaders of the INDIA Alliance parties. Vanakkam.
The future of India’s students has been gravely jeopardized by the BJP government’s mishandling of the education sector. A series of question paper leaks has led to the cancellation and re-conduct of major examinations, exposing widespread irregularities and systemic failures. Lakhs of students have suffered as a result, yet no one in the BJP government has accepted responsibility. The Union Education Minister, Shri Dharmendra Pradhan, who ought to be accountable, has remained conspicuously silent.
In response, students and young people across the country have spontaneously taken to the streets in protest. This development should serve as a wake-up call for all political parties. The present situation has arisen in part because we, as political forces, have failed to consistently mobilise and fight for the issues confronting the youth. We should not regard Cockroach Janta Party an organisation that raise the concerns of young people as adversary. Instead, the INDIA Alliance must take up these issues on a broader platform, amplify the voices of the youth, and launch coordinated nationwide protests.
The Narendra Modi government’s flawed economic and foreign policy decisions have pushed the country towards a deep financial crisis. Our foreign exchange reserves have witnessed a steep decline, causing widespread concern. Rather than presenting a credible roadmap to address the situation, the Prime Minister appears content with merely urging citizens to tighten their belts. Just as the government’s incompetence during the COVID-19 pandemic resulted in immense suffering and the loss of countless lives, a major economic crisis is now unfolding that threatens the livelihoods of crores of Indians. It is our duty to expose this reality and spearhead a nationwide movement against the failures of the Narendra Modi government.
To effectively carry forward such struggles, mutual trust, understanding, and unity among opposition parties are indispensable. The approach adopted by the Congress party during the recent elections has caused dissatisfaction among several constituents of the INDIA Alliance. In particular, the Congress party’s electoral strategy in Kerala, West Bengal, and Tamil Nadu weakened parties that have been among the strongest pillars of this alliance, including the Trinamool Congress, the Communist Party of India (Marxist), and the DMK. This is neither desirable nor beneficial to the larger cause of opposition unity. The Congress party must therefore undertake a sincere reassessment of its approach and explore ways to further strengthen and consolidate the alliance.
The INDIA Alliance brings together both national and regional parties. Differences of opinion are natural in such a broad coalition. However, such differences must not be allowed to escalate into divisions. The responsibility for maintaining unity rests not only with regional parties but equally with national parties. At a time when Centre–State relations are under unprecedented strain, national parties must re-evaluate their positions through the lens of federalism and cooperative governance.
In this context, the INDIA Alliance must adopt a clear and unequivocal position on the three-language policy being promoted by the BJP-led Union Government. Furthermore, I urge the Alliance to examine and deliberate upon the recommendations submitted by the Justice Kurian Joseph Commission to the Government of Tamil Nadu on Centre–State relations. Such discussions will contribute significantly to strengthening federal principles and safeguarding the rights of the states within the Indian Union.
Kind Regards..
Dr.Thirumaavalavan MP
இன்று புது தில்லியிலுள்ள 'கான்ஸ்டிட்யூசன் க்ளப்'பில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் விசிக சார்பில் நானும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் அவர்களும் பங்கேற்றோம்.
அதில் நான் முன்வைத்த கருத்துகளின் தமிழாக்கம் பின்வருமாறு:
-------------------------
இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம் !
பாஜக அரசின் தவறான அணுகுமுறையால் இந்தியாவின் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் பேப்பர் லீக் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு பாஜக அரசில் எவருமே பொறுப்பேற்கவில்லை. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மௌனமாக இருக்கிறார். இதன் காரணமாக மாணவர்கள் இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தி உள்ளனர். இது அரசியல் கட்சிகள் அனைவருக்கும் எச்சரிக்கை மணியாகும். இளைஞர்களுடைய பிரச்சனைகளுக்காக நாம் தெருவில் இறங்கி போராடாத காரணத்தினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் குரலை வெளிப்படுத்துகிற காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை நாம் எதிர்நிலையில் வைத்து பார்க்கக் கூடாது. அவர்கள் எழுப்பும் பிரச்சனைகளை இன்னும் விரிவான தளத்தில் இந்தியா கூட்டணி முன்னெடுக்க வேண்டும். அதற்காக நாடு தழுவிய போராட்டங்களை நாம் அறிவிக்க வேண்டும்.
நரேந்திர மோடி அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் இப்போது நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என தெரியாத பிரதமரோ மக்களெல்லாம் சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுரை சொல்கிறார். கோவிட் காலத்தில் எப்படி திறமையற்ற இந்த அரசால் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தார்களோ அதே போல இப்போதும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அம்பலப்படுத்தி நாடு தழுவிய அளவில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் போராட்டங்களை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இயல்பாகவே தேசியக் கட்சிகளுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே முரண்களும் இருக்கும். அவற்றை கூர்மைப்படுத்தக்கூடாது. அந்தப் பொறுப்பு மாநில கட்சிகளுக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகளுக்கும் உள்ளது. இப்போது மத்திய மாநில உறவுகள் மிக மிக சீர்கேடு அடைந்துள்ள சூழலில் தேசியக் கட்சிகள் கூட்டாட்சி என்ற அடிப்படையில் தங்களது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும்.. இதன் ஒரு அங்கமாக ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மும்மொழிக் கொள்கையைப் பற்றி தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கூட்டணி எடுக்க வேண்டும். அது போலவே மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நீதிபதி குரியன் ஜோசப் ஆணையம் முன் வைத்துள்ள பரிந்துரைகளையும் இந்தியா கூட்டணி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தம்பி வன்னிஅரசு அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த திண்டிவனம் தொகுதி மக்களை சந்தித்து இன்று நானும் தம்பி வன்னிஅரசு அவர்களும் நன்றி தெரிவித்தோம்!
புதுச்சேரி வேட்பாளர்கள்
புதுச்சேரி மாநிலத்தில் விசிக சார்பில் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்
தோழர் அரிமா தமிழன் : ஊசுடு
தோழர் அமுதவன் : நெட்டப்பாக்கம்
திருமதி செல்வ புஷ்பலதா: உழவர்கரை
ஆகியோரை வாழ்த்தினேன்
ஒரே ஒரு அறிவிப்பு தான் பல பேரோட துக்கத்தை கெடுத்துடுச்சு... ஆனா விசிக தொண்டர்கள் முழுவதும் சந்தோஷமாக இருக்கிறோம் எங்க தலைவரை சட்டமன்றத்தில் பார்ப்பீங்கடா @thirumaofficial@vckitwingoffi@VanniTamizhVCK
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்..!
வாக்காளிப்பர் பானை சின்னத்தில், நமது சின்னம் பானை #vck#arakkonam
வாக்காளிப்பர் பானை சின்னத்தில், நமது சின்னம் நமது பானை 👍🏻
அரக்கோணம் உங்கள் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர்.எழில் கரோலின் அவர்களுக்கு
💙❤️
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்..! 👍🏻
ஓசூரில் விசிக ச.தொ. மா.செ. அண்ணன்
Dr. M. இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி B.R. கவாய் அவர்களின் மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் ராக்கேஷ் கிஷோரை வன்கொடுமை தடுப்பு (PoA) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
21.09.2025
“வாழும் புரட்சியாளர்” எழுச்சித்தமிழர் அண்ணன்
Dr. @thirumaofficial M.P., அவர்களை பெங்களூரில்
ஓசூர் தொண்டரணி அமைப்பாளர் “நீல படை தளபதி” அண்ணன்
K.R. சூரியவளவன் https://t.co/LAZBMzUp59., அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
@sajanbaraj@VckRajinikanth#VCK#Banglore
17.08.2025 - எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு அசைவ உணவு (பிரியாணி), குடிநீர், லட்டு மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
ஒருங்கிணைப்பு:
K.R. சூரியவளவன் https://t.co/LAZBMzTRfB.,
தொண்டரணி அமைப்பாளர், ஓசூர்.
சாதனைப் படைத்த மகன்கள் மற்றும் மகள்களின் தாய்மார்களை சிறப்பிப்பதற்காக Naturals மற்றும் IBC மங்கை சார்பில் இந்தியாவின் சிறந்த தாய்க்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் ஒருங்கிணைப்பில் இன்று (28-06-2025) சென்னையில் இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் எனது அம்மா #தொல்_பெரியம்மாள் அவர்களுக்கு #Mother_of_India_Award விருது வழங்கி சிறப்பித்தனர்.
சூன் 20, 2025 - அண்ணன் “எழுச்சித்தமிழர்” அவர்கள் ஓசூர் தொண்டரணி அமைப்பாளர் அண்ணன்
K.R. சூரியவளவன் https://t.co/LAZBMzTRfB., L.L.B., அவர்களின் புதிய மகிழுந்து (Car) ற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் கொடியினை அணிவித்தார்.
@thirumaofficial@kaviikanna@Rajkumarrlaksmi
விசிக விருதுகள் வழங்கும் விழா 2025
~~~~~~~~
விசிக விருதுகள் வழங்கும் விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
அம்பேத்கர் சுடர் -
முனைவர் திரு.கே.எஸ்.சலம்
மேனாள் துணைவேந்தர், திராவிடப் பல்கலைக் கழகம், ஆந்திரா
பெரியார் ஒளி -
திரு.சத்யராஜ்
திரைப்படக் கலைஞர்
மார்க்ஸ் மாமணி -
திரு.தியாகு
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்,
காமராசர் கதிர் - திரு.வெ.வைத்திலிங்கம் எம்.பி
மேனாள் முதலமைச்சர், புதுச்சேரி
அயோத்திதாசர் ஆதவன் -
முனைவர் பா.ஜம்புலிங்கம்
பௌத்த ஆய்வறிஞர்
காயிதேமில்லத் பிறை -
திரு.பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி
தலைவர், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை
செம்மொழி ஞாயிறு -
பேராசிரியர் அ.சண்முகதாஸ்
தமிழறிஞர், யாழ்ப்பாணம்
ஆகிய சான்றோர்களுக்கு விசிக விருதுகள் வழங்கப்பட்டது.
விசிக விருதுகள் வழங்கும் விழா 2025
~~~~~~~~
இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விசிக விருதுகள் வழங்கும் விழாவில்
ஆந்திரா திராவிடப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் திரு.கே.எஸ்.சலம் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.