Visited Raana Semiconductors at FORT, Hosur, a young deep-tech team working on semiconductor single-crystal growth using the Czochralski process.
What impressed me most was seeing young minds from Tamil Nadu taking on foundational technologies that are difficult to build and critical to the semiconductor ecosystem.
The next generation of deep-tech companies can be built from Tamil Nadu for the world. Teams like Raana give us confidence that we have the talent and ambition to make that happen.
Interestingly, they are also working on Lithium Niobate crystals l, a material used in quantum photonics and emerging quantum computing technologies.
Wishing the team the very best as they scale. Proud to see this being built in Tamil Nadu! @TheStartupTN
Sir @CTR_Nirmalkumar many of our friends,common ppls are suffering a lot. As it's basic amenity we expect a faster action. Suffering of ppl at night is so exhausting. Consider this issue so sensitive and pls take warfoot measures asap.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது தியாகத்தையும் போராட்டத்தையும் போற்றி வணங்குகிறேன்.
சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க அவரது பாதையில் பயணிப்போம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில் இன்று கும்பகோணத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
@TVKVijayHQ | @TVKPartyHQ
சட்ட ஒழுங்கு சீரமைப்பிற்கான முக்கிய நகர்வு 👏
காவல்துறையில் 17 ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்வர் #விஜய்🔥
ஒரே கட்டமாக 29,108 புதிய காவல் பணியிடங்கள் 🔥🔥
ஒருகாலத்தில் தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்த தமிழ்நாட்டின் காவலர்–மக்கள் விகிதம், முந்தைய ஆட்சிகளின் போதிய மனிதவளத் திட்டமிடல் இல்லாததால் கடுமையாக சரிந்தது.
📊 2013:
🔸 தமிழ்நாடு: 198.07
🔸 தேசிய சராசரி: 185.25
📉 2024:
🔸 தமிழ்நாடு: 171.98
🔸 தேசிய சராசரி: 194.40
தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்த தமிழ்நாடு, பின்னர் தேசிய சராசரியை விட 22.42 புள்ளிகள் பின்தங்கியது.
அதுமட்டுமல்ல…
🔸கடந்த 6–7 ஆண்டுகளில் புதிய காவல் ஆணையரகங்கள், காவல் மாவட்டங்கள், சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டும் வெறும் 1,881 புதிய பணியிடங்களே உருவாக்கப்பட்டன.
🔸 இதனால் சுமார் 20,000 காவலர்கள் மறுபணியமர்த்தப்பட்டு, காவலர்களின் பணிச்சுமை மேலும் அதிகரித்தது.
🔸 2009-ல் கணக்கிடப்பட்ட தேவைக்கேற்ப 24,481 பணியிடங்கள் தேவைப்பட்ட நிலையில், 2011, 2013, 2018 காலகட்டங்களில் 16,014 பணியிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
🔸 அதாவது தேவையான எண்ணிக்கையில் 8,467 பணியிடங்கள் குறைவாகவே இருந்தன.
இதன் தாக்கம் குற்றத் தடுப்பு, குற்றக் கண்டறிதல், முக்கிய குற்றங்களின் விசாரணை மற்றும் அன்றாட காவல் பணிகள் வரை சென்றது.
17 ஆண்டுகளாக நீடித்த இந்தக் குறையை இப்போது சரிசெய்கிறார் முதல்வர் விஜய்‼️
🔸 ஒரே கட்டமாக 29,108 புதிய காவல் பணியிடங்கள்
🔸 Singappen Special Force மற்றும் Anti-Narcotics Task Force-க்கு 4,563 புதிய பணியிடங்கள்
🔸 காவலர்–மக்கள் விகிதத்தை தேசிய சராசரியை விட உயர்த்தும் நடவடிக்கை
🔸 புதிய வாகனங்கள் மூலம் அவசர அழைப்புகள் மற்றும் குற்றச் சம்பவ இடங்களுக்கு விரைவான சென்றடையும் திறன்
🔸 காவல்துறை நவீனமயமாக்கலுக்கு ₹212 கோடி
🔸 செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு
🔸 காவல் நிலையங்களின் அவசரகால மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கான நிதி பல மடங்கு உயர்வு (லஞ்சத்தை தவிர்க்கும் விதமாக)
🔸 2026–27 காவல்துறை ஒதுக்கீடு ₹4,477.58 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி ஆண்டு ஒதுக்கீட்டை விட 11.6 மடங்கு அதிகம்.
முந்தைய ஆட்சிகள் விட்டுச் சென்ற மனிதவளப் பற்றாக்குறையை கணக்குடன் சரிசெய்து, காவல்துறைக்கு தேவையான ஆட்கள், வாகனங்கள், தொழில்நுட்பம், நிதி என அனைத்தையும் வலுப்படுத்துகிறார் முதல்வர் விஜய்.
காவல்துறை வலுவாகும் போது,
மக்கள் பாதுகாப்பும் மேம்படும்.🔥
👉 https://t.co/Sg629wibzF
#TVK #Vijay
மதுரமங்கலம் சிப்காட் தொடர்பாக பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தும் பட்டியலில் உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவலாகும்.
பரந்தூரில் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படயிருந்த பகுதிக்கும், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமையும் பகுதிக்கும் தொடர்பில்லை. 2024ஆம் ஆண்டு நிர்வாக அனுமதி அரசாணை வெளியிடப்பட்டு நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக 2026 -27 வரவு - செலவு கூட்டத் தொடரில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். தற்பொழுது வெளியிடப்பட்ட அரசிதழ், மேற்கொள்ளப்பட்டு வரும் நில எடுப்பு பணியின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.
#IID #TNIID
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீரழிந்த சட்டம்-ஒழுங்கை சீரமைக்கும் முதல்வர்!
மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், தலைநகரில் 180-க்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் குறிவைத்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆட்சியில் தலைநகரில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கிடந்தது அனைவரும் அறிந்ததே!
அதனைச் சீரமைக்க, பதவியேற்ற நாள் முதலே போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை, சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை, சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகளைக் கண்காணித்தல் மற்றும் கைது செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை, காவல்துறையை காவல்துறையாக செயல்படவிட்டு, முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
குற்றங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவை நிகழ்வதற்கான காரணிகளைக் கண்டறிந்து களைவது, போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என அனைத்திலும் துரித நடவடிக்கைகளுடன், குற்றங்களை உளவியல் ரீதியாக அணுகும் முயற்சிகளையும் காவல்துறை மூலமாக முன்னெடுத்து வருகிறார்.
சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிலும் எந்த சமரசமும் இல்லை என்ற உறுதியோடு செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர்!
நீலாங்கரை முதல் மெரினா வரை பாலம் கட்டும் திமுகவின் திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் போராடினார்கள்.
CPI , CPM எதிர்த்து கேள்வி கூட கேட்கல , இப்ப பட்டிணம்பாக்கம் தலைமை செயலகம் கட்ட தூக்கிட்டு வரானுங்க.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார் அவர்கள்.
சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!
நாடக கம்பெனி திமுக!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து சென்றதை விமர்சிக்கும் உத்தம சிகாமணிகளே!
2022-ல் அரசு செலவில் துபாய் சென்றபோது, கொளத்தூர் கொத்து பரோட்டா தனது குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றதை மட்டும் வசதியாக மறைக்கும் இந்த வெட்கங்கெட்டத்தனம் எதற்கு?
துபாய்க்கு அரசுமுறைப் பயணமா? குடும்பச் சுற்றுலாவா? என்று பயணத்தின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் இயல்பாகவே இந்தக் கேள்வி எழும்.
அரசுப் பணத்தில் குடும்பமே சொகுசு சுற்றுலாச் சென்று குதூகலித்து விட்டு, தனி விமானப் பயணம் வேறு!
பயணச் செலவு மற்றும் விவரங்கள் குறித்து RTI மூலம் கேட்கப்பட்டபோது, எங்கே உண்மைகள் அம்பலமாகிவிடுமோ என்ற பயத்தில் பதிலளிக்க மறுத்து ஓட்டம் பிடித்த வீர(ண)ர்களே!
Photoshoot நடத்துவதும், sunrise பார்ப்பதுமாக இருந்துவிட்டு, “ஈர்த்த முதலீடுகள் எங்கே? உருவான வேலைவாய்ப்புகள் எங்கே?” என்று கேட்டால் வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பிக்கும் அறிவு இருக்கிறதே… அடடா! அடடா!
சரி…
வெளிநாடு முதலீடா?
இல்லை… வெளிநாட்டில் முதலீடா?
கட்டுமரக் கதைகளைக் கட்டாமல், உண்மையைச் சொல்லத் திராணி இருக்கிறதா?
⚡சத்தமில்லாமல் சாதிப்பது… இதுதான் புதிய தமிழ்நாடு 🔥
#VETTRI Tamil Nadu Investment Conclave 2026-ல் முதல்வர் #விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட MoU-வின் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி, சூளகிரி SIPCOT-ல் Ultraviolette Automotive நிறுவனத்தின் பிரம்மாண்ட BIGGA Factory உருவாகிறது. 🚀
🔸 ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி
🔸 எதிர்காலத்தில் 5 லட்சம் வாகனங்களாக விரிவுபடுத்தும் திறன்
🔸 Industry 4.0 தொழில்நுட்பத்தில் நவீன உற்பத்தி
மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முதலீடு. ⚡
புதியதோர் தமிழ்நாடு படைப்போம்🚀
#TVK #Vijay #InvestInTN #MakeInTN #ThriveInTN
@UltravioletteEV@SIPCOTTN@Keerthana4VNR@CMOTamilnadu
The most beautiful conversation with Thalapathi Our CM, The moment I told him we miss the Boopathi of Vaseegara… he burst out laughing… so kind and he melted my heart. A true super star - Co passenger #Ashok