மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
இராணிப்பேட்டை கிழக்கு, இராணிப்பேட்டை மேற்கு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே பாலியல் புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்
தற்போது தவெக இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் என்பவர், மகளிர் அணியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியும், வீடியோ காலில் தவறாக நடந்து கொண்டும் உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் அளித்து மூன்று நாட்களாகியும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படி சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எனப் பலர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியபோது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களா தமிழக பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் போகிறீர்கள்?
@CMOTamilNadu
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயமாகத் திகழும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் தமிழகத்தில் ஒவ்வொரு மூலையிலும் தவெக நிர்வாகிகளால் பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள். தமிழக வெற்றி கழகம் கருவின் குற்றம்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் தான் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு. P. ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி திரு. K. மோகன், சங்கரன்கோவில் தொகுதி டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர் 1/2
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!
எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.
ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன?
தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.
2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!
மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை!
சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu!
@AIADMKOfficial
ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் எங்கள் பாசமிகு அண்ணன் SM. சுகுமார் அவர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்
இன்று, எனது #எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், @AIADMKOfficial வேட்பாளராக களம் காணும் எனக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தொகுதிவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது கூட்டணியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், அன்பிற்கினிய சகோதரர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
பழனிசாமி என்ற எனது பெயர் எனக்கே மறக்கும் அளவிற்கு இந்த சட்டமன்றத் தொகுதியின் பெயரே “எடப்பாடியார்” என்ற எனக்கான அடையாளமாக மாறிவிட்டது.
உங்களோடு இருக்கும் எனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial பொதுச்செயலாளர் என்று உயர்வு வழங்கிய மக்களுக்கு எனது பணிவான நன்றி.
மீண்டும் மனிதப் பிறவி செய்தால், இதே மண்ணில், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறந்திடவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கின்றான்- இடைப்பட்ட காலத்திலேயே அவன் மக்களுக்காக செய்த சேவை தான் நிலைத்து நிற்கும்.
அப்படி தங்கள் மக்கள் நலச் சேவைகளால் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் நம் இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா!
இருபெரும் தலைவர்கள் வழியில் செயல்படும் எனக்கு காலம் அளித்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களுக்காக அயராது உழைப்பேன்! இது சத்தியம்!
#Vote4AIADMK 🌱