ஏப்ரல்-14
புரட்சியாளர்
டாக்டர்:#அம்பேத்கர்💙💥⚡👑❤️🔥
அவர்களின்.
134-வது பிறந்தநாள்.
#சமத்துவ_நாள்.
"சாதிதான் சமூகம் என்றால்.
வீசும் காற்றில் விஷம் பரவட்டும்"
@thirumaofficial
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் தொகுதி திருவாய்ப்பாடி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை அமைக்க இன்று அடிக்கல் நாட்டினேன்!
கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக நுழைவு வாயிலில் உள்ள புரட்சியாளர் #அம்பேத்கர் தந்தை #பெரியார் திருவுருவச்சிலைகளை சீரமைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சாக்கோட்டை அன்பழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு நானும் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம்! மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
அதிகாலையில் தலைவர் எழுச்சித்தமிழரிடமிருந்து அழைப்பு வந்தது.
புதுதில்லியிலிருந்து கொச்சின் வந்தடைந்து விமானநிலையத்திலிருந்து வெளிவந்தவுடன் அழைப்பதாக தலைவர் சொன்னார்.
கனிந்தகுரலில் தோழமை ததும்ப எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொன்னார். அந்த குரலின் தாயன்பில் கரைந்து கொண்டிருக்கிறேன்.
@thirumaofficial
நான் பெரிதும் நேசிக்கக்கூடிய அன்பிற்கும் மரியாதைக்கும் கூறிய
பொதுச் செயலாளர் கருத்தியல் ஆளுமை. சட்டமன்ற குழு தலைவர்:அண்ணன்
@sinthanaivck..👑❤️🔥அவர்களுக்கு.
என் நெஞ்சம் நிறைந்த
இனிய 💐🎂#பிறந்தநாள்🎂💐 நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!
'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.
தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.
தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.
கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்…
ஆதவ(ன்) மறைவதில்லை!