நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் முழங்கியுள்ள "தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன்" தீர்மான உறுதி ஏற்புக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. அனை��ரும் ஓரணியில் நின்று ஆதிக்க சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.
#தமிழ்நாடு_தலைகுனியாது
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கழக உடன்பிறப்புகளை சந்தித்���ு ஊக்கப்படுத்துகிறார்.
இந்த சுற்றுப்பயண��்தில் இளந் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட கழகத் தொண்டர்களை கௌரவிக்கிறார், தன்னார்வலர்களோடு கலந்துரையாட உள்ளார்!
#DyCMUdhay
Emergency-யும் கலைஞரின் ஜனநாயகப் போராட்டமும்!
#திராவிட_மாதம் தொடரின் இப்பகுதியில், இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியான நெருக்கடி நிலைக் காலத்தையும் (Emergency Period), அந்த சர்வாதிகார இருளை எதிர்த்துத் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ஏற்றிவைத்த ஒளிச்சுடரையும் பற்றி காண்போம். 1975-ல், நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகள�� நசுக்கப்பட்டு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டு, தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மௌனித்து நின்றன. ஆனால், தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்ற ஜனநாயகத்தின் கடைசிப் புகலிடமாக விளங்கியது. அதற்காக, ஆட்சியையும், எண்ணற்ற உடன்பிறப்புகளின் இன்னுயிரையும் விலையாகக் கொடுத���தது.
சர்வாதிகாரத்திற்கு எதிரான முதல் குரல்
1975, ஜூன் 25 அன்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அன்றைய கழகத் தலைவர் கலைஞர், கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார். ஜூன் 27 அன்று, "சர்வாதிகாரத்தின் தொடக்க விழா" என நெருக்கடி நிலையை வர்ணித்து, அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெருக்கடி நிலை சட்டங்களைத் தனது மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மறுத்த கலைஞர் தலைமையிலான அ���சு, தமிழ்நாட்டை ஜனநாயகவாதிகளின் புகலிடமாக மாற்றியது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களை "மிசா" சட்டத்தில் கைது செய்யுமாறு நடுவண் அரசு பணித்தபோது, முதலமைச்சர் கலைஞர் அதனை ஏற்க உறுதியாக மறுத்தார்.
ஆட்சியிழப்பும், மிசாவின் கொடுங்கரங்களும்
திமுக அரசின் இந்த ஜனநாயகப் பிடிவாதம், நடுவண் அரசை ஆத்திரமூட்டியது. நெருக்கடி நிலையை எதிர்த்து, ஜனவரி 30, 1976 அன்று சென்னையில் திமுக மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தியது. அதற்கு அடுத்த நாள், ஜனவரி 31, 1976 அன்று, இல்லாத ஊழல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசிய��மைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் கலைக்கப்பட்டது.
ஆட்சிக் கலைப்பைத் தொடர்ந்து, அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. முதலமைச்சராக இருந்த கலைஞர், தன் மகன் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பியதும், "ஸ்டாலின் வந்துவிட்டார், கைது செய்துகொள்ளுங்கள்" என காவல்துறையிடம் தெரிவிக்கும் மன உறுதியுடன் நின்றார். அன்றைய தினம், தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முரசொலி மாறன் அவர்கள் உள்ளிட்��� 500-க்கும் மேற்பட்ட திமுக தலைவர்கள் "மிசா" சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மத்திய சிறைச்சாலை, ஒரு "சித்திரவதைக் கூடமாக" மாறியது. அப்போது 23 வயது இளைஞராக இருந்த தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், சிறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ஆயுள் தண்டனைக் கைதிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கப்பட்டனர். "என் கையில் இருக்கும் இந்த வடு, அன்று நாங்கள் சிறையில் அனுபவித்த சித்திரவதையின் அடையாளம்" என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தலைவர் @mkstalin அவர்கள் பின்னாளில் குறிப்பிட்டார். இந்த சித்திரவதைகளின் உச்சமாக, தன் மீது விழுந்த அடிகளைத் தாங்கிக்கொண்டு, இளம் தலைவர் ஸ்டாலின��க் காப்பாற்றத் தன் உடலைக் கேடயமாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு, சிறையிலேயே வீரமரணம் எய்தினார். அவரைப் போலவே, சாத்தூர் பாலகிருஷ்ணன் என்ற மற்றொரு திமுக முன்னோடியும் இன்னுயிர் நீத்தார்.
எதிர்ப்பின் கருவிகள்: 'முரசொலி'யும் கலைஞரின் எழுத்தும்
ஆட்சி பறிக்கப்பட்டபோதும், அடக்குமுறை உச்சத்தில் இருந்தபோதும், கலைஞர் தனது எழுத்தாற்றலை ஜனநாயகத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்த��னார். திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான 'முரசொலி', தணிக்கையை மீறி உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது. ஹிட்லரின் கதைகளை உருவகமாகச் சொல்வது, குறியீட்டுச் சித்திரங்களை வெளியிடுவது, கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை மறைமுகமாகத் தெரிவிப்பது எனப் பல உத்திகளைக் கையாண்டு, தணிக்கை அதிகாரிகளைத் திணறடித்தது 'முரசொலி'.
கலைஞரின் எழுத்துக்கள், கழகத்தினருக்கு நம்பிக்கையூட்டும் அருமருந்தா��� விளங்கின. "எந்தக் கையில் வாளைப் பிடிக்க வேண்டும், எந்தக் கையில் கேடயத்தைப் பிடிக்க வேண்டும்" என்பதை விளக்கி அவர் எழுதிய "வாள் கேடயம்" என்�� சிறு வெளியீடு, அரசால் தடை செய்யப்பட்டபோதும், ரகசியமாகப் பல்லாயிரக்கணக்கில் நகலெடுக்கப்பட்டு, உடன்பிறப்புகளிடம் பரவியது.
1/2
தந்தை பெரியார் அவர்கள் ஏற்றிய சமூகநீதி எனும் பெருநெருப்பையும், பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட இலட்சிய பெர��ங் கனவையும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நின்று மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நிறைவேற்றி வருகிறார். தமிழ்நாட்டின் சமூகநீதிச் சுடரை பாதுகாக்கும் திராவிட நாயகரை கண்டு நம் இன எதிரிகள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
#CMStalinInEurope
உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க இருக்கிறேன்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#Periyar#DMK4TN
காலை உணவுத் திட்டத்தின் மூலம் இலட்சோபலட்ச குழந்தைகளின் பசிப்பிணி நீக்கி அவர்களுக்கு தந��தையாய், தாயாய் இருக்கிறார் 'திராவிட நாயகர்' மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
திராவிட நாயகரின் சீர்மிகு திட்டங்களால் குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்! தமிழ்நாடு செழிக்கும்!
#CMBreakfastScheme
The interview by the #CEC is raising more questions than providing answers to the issues highlighted by the #INDIA bloc.
The following questions arise:
https://t.co/yN3OFgzEbk can there be so many deletions of eligible voters when house-to-house enumeration was undertaken?
2.The enrolment of new voters is abnormally low. Were these young voters enumerated? Has any database been compiled to show how many youngsters who turned 18 on the qualifying date were included?
3.The procedure for enquiry and two appeals, along with their timelines as contemplated under the Registration of Electors Rules, 1960, may exclude a huge number of voters in the forthcoming elections in Bihar. Is the ECI going to address this issue?
4.Will the #ECI take these practical difficulties into account while conducting #SIR in other States?
5.On 17/07/2025, we requested the ECI to delete the names of deceased voters from the rolls by undertaking the exercise contemplated in its 01/05/2025 notification. When will this be done?
6.What prevents the ECI from enlisting Aadhaar as one of the acceptable documents to prove a voter’s claim?
7.If “Fair Elections” is truly the aim of the ECI, why can’t it be more transparent and voter-friendly?
#VoteTheft
இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு.
பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண��டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காள���்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?
தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி - வேலைவாய்ப்பு -பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் ப���ரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் #InternationalYouthDay வாழ்த்துகள்!
இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமா��ல் அரசு என்றும் துணை நிற்கும்.
எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு, அயராது உழைப்போம்.
💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!
🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…
📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!
🌄 இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!
👑 2030-ஆம் ஆண்டுக்குள் #OneTrillionDollar பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
😎 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)
💥 Tamil Nadu’s #DravidianModel Government stands tall as the only State in India to achieve double-digit economic growth!
🔝 We proudly declared that Tamil Nadu led the nation with a growth rate of 9.69%.
📈 Now, that too has been surpassed. As per the revised estimates of the Union Government, Tamil Nadu has recorded a staggering growth rate of 11.19% — the highest in the country!
🌄 The last time we touched double-digit growth was in 2010–11, under the leadership of Kalaignar. Today, the #DravidianModel Government, walking the path shown by Thalaivar #Kalaignar, has repeated that feat. Both times, it was the #DMK Government at the helm!
👑 When we set the target of becoming a One Trillion Dollar Economy by 2030, many raised their eyebrows. “It’s too ambitious,” they said. But with growth like this, what once seemed distant is now well within reach!
😎 “Those who plan with clarity achieve their goal if they act with determination.” — Kural 666
#TamilNaduRising