த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்கள், போராடும் தூய்மைப் பணியாளர்களை இதுவரை சந்தித்துப் பேசாதது ஏன்? 15 நாட்களைத் தாண்டித் தொடரும் போராட்டத்திற்கு உடனடித் தீர்வு என்ன?
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
கட்சியில் கீழிருந்து வளர்த்தவனை மறந்து...
புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பதவி...
பணம் படைத்தவர்களுக்கும் ஜாதி பலம் படைத்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பதவி...
நல்ல மாற்றம் @TVKVijayHQ#TVKFails
நூறு நாட்களுக்கு முன் துணை முதலமைச்சர்.
ரிமாண்ட் செய்ய முடியாத வழக்கில் விசாரணைக்காக இன்று 7-8 மணி நேரம் அலைக்கழிப்பு.
கைது செய்து சிறையில் அடைக்க முடியாத போது என்ன செய்ய வேண்டும் ?
இயற்கை உபாதைகளுக்கோ, உணவு உண்ணவோ கூட அனுமதிக்க மறுக்க வேண்டும். அந்த வீடியோவை மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஸினிமா ஸர்க்கார் ஆட்சி.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று முதல் பரிசினை வென்ற வளரும் விளையாட்டு நட்சத்திரம் வீரர்
திரு.M.பரிஷித்ராஜ் அவர்கள் வெற்றி பெற்ற பதக்கம் மற்றும் சான்றிதழ் உடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதே போல் பல்வேறு போட்டிகளை கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பகிர்ந்து கொண்டேன். #TamilNadu
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.
காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும்,
*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,
*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,
*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்
எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.
Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever.
Wishing you good health, happiness and many more years of success.
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
தன்னிகரில்லா குடும்ப தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கழக அரசின் சாதனைகளை மக்களிடையே எடுத்துரைத்து சேலத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்ற வருகை புரிந்த தலைவர் அவர்களை வரவேற்ற மகிழ்வான தருணம்.
நம்ம வீரபாண்டியில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #Vote4Tharun #Tharun4Veerapandi #DMK4Veerapandi