ஒரு முறை நடந்தால் திருத்திக் கொள்ள சொல்லலாம். மீண்டும் மீண்டும் நடந்தால்..?
தமிழக அரசின் உத்தரவை மீறும் தைரியம் பொள்ளாச்சி நீர்வளத்துறை பொறியாளருக்கு எப்படி வந்தது?
ஒப்பந்ததாரர்களை நேரில் சந்திப்பதை தடுக்கவும், குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் லிமிட்டெட் டெண்டர்களை தடை செய்தும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா? என்ன செய்ய போகிறார் WRD அமைச்சர் ஆனந்த் அவர்கள்?
இந்த 28 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு இனியும் இந்த திருட்டு தொடராமல் இருக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உத்தரவிடுவாரா?
@TVKVijayHQ@CMOTamilnadu@BussyAnand@CmcellTamilNadu@Chief_Secy_TN
@VigneshTvkCbe பாட்டிலுக்கு பத்து ரூபாய் இல்ல 20 ,30 வரைக்கும் வாங்கிட்டு தான் இருக்காங்க இங்க எதுவுமே மாறல வாரத்துக்கு ஒரு டைம் சஸ்பெண்ட்னு மட்டும் செய்தி போட்டுகிட்டு இருக்கீங்க இதை ஒரு முடிவு கொண்டு வாங்க ,மீறி வசூலிப்பவர்களை சஸ்பெண்ட் இல்ல டிஸ்மிஸ் பண்ணுங்க தன்னால இது சரி ஆகும்.
டெல்டா மாவட்ட காவிரி பாசன வாய்க்கால்களில் தூர்வாரியதை ஆய்வு செய்ய அரசு விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் சி.டி. வாய்க்கால்களைத் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எத்தனை கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்பட்டுள்ளது? முழுமையாகத் தூர்வார எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை அறிய விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முழுமையான ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும்.இதற்காக டெல்டா மாவட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்ய தனிக் குழுவை அமைக்க அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தின் மொத்த உணவுத் தேவையில் மூன்றில் இரு பங்கை விளைவிப்பது டெல்டா மாவட்டங்கள்தான். டெல்டாவின் உணவு உற்பத்திக்கு முக்கியத் தேவையாக உள்ளது காவிரி நீர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனையை காவிரியே தீர்க்கிறது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளன.
கடந்த 2025ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றில் 1,380 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 இடங்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முழுமையாக தூர்வாரப்படவில்லை.
தேர்தலுக்கு முன்பு 24 மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள கடந்த அரசு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியைத் தொடங்கியது. இப்பணிகள் அந்தந்த பகுதி விவசாயிகளின் ஒப்புதலுடன் நடைபெறவில்லை. ஒப்பந்ததாரர்கள் தமது இஷ்டத்துக்கு பணிகளைச் செய்துள்ளனர். பிரதான ஆறுகளில் பல இடங்களில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மணல் திட்டுகள் மண்டிக் கிடக்கின்றன.
மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முழுமையான தூர்வாருக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,000 கோடி தேவைப்படுகிறது.
வடிகால் வாய்க்கால்களை வருவாய்த் துறையின் பதிவேட்டின்படி சர்வே செய்து பணிகளைத் தொடங்க வேண்டும். இதற்காக அந்தந்த பகுதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்தத் தொகையை மாநில அரசு மத்திய அரசிடம் நிதி கோர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் சி.டி. வாய்க்கால்களைத் தூர்வார அரசு வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் கண்துடைப்பாக ஒரு சில வாய்க்கால்களை மட்டும் தூர்வாரிவிட்டு, பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக ஆவணங்களில் பதிவேற்றுகின்றனர். இதற்காக ஒதுக்கப்படும் நிதி அரசு அலுவலர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளுக்கு இடையே பங்கு பிரிக்கப்படுகிறது.
வேளாண் துறை மூலம் ஊராட்சி வாரியாக எந்தெந்த வாய்க்கால்கள் எத்தனை கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்பட்டன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
காவிரி நீரைப் பெறுவதில் சட்டச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டும் அரசு, தண்ணீர் வரும்போது அதனை முழுமையாக பாசனத்திற்குக் கொண்டு செல்லும் வாய்க்கால்களைத் தூர்வாருவதில் அக்கறை இல்லாமல் உள்ளது வேதனை அளிக்கிறது என டெல்டா மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் வேதனைப்படுகின்றனர்.
எனவே, கடந்த காலங்களில் சி.டி. வாய்க்கால்களைத் தூர்வார ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எத்தனை கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்பட்டுள்ளது? முழுமையாகத் தூர்வார எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை அறிய விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து முழுமையான ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும்.இதற்காக டெல்டா மாவட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்ய தனிக் குழுவை அமைக்க அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
யார் இந்த நாராயணன்?
தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பல கல்லூரிகள் அடங்கிய பவானி கல்விக்குழும தாளாளர் நாராயணன் அவர்களை, கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்?
அவர் ஒரு திமுக உறுப்பினர். திமுக கல்வியாளர் அணியின் துணைத்தலைவர். கட்சி உறுப்பினரை ஒரு பல்கலைக்கழக convenor கமிட்டி உறுப்பினராக நியமித்தது ஏன்? ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் கூட பல்கலைக்கழகத்தில் இல்லாத அவல நிலையில் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் தங்கள் கட்சி உறுப்பினரை உயர் பொறுப்பில் நியமித்து அதன் மூலம் என்ன சாதிக்க முயற்சி செய்தார் முன்னாள் முதல்வர் ஸ்டாலின்?
பல்கலைக்கழக convenor கமிட்டிகளில் 3 அல்லது 4 உறுப்பினர்களாவது இருப்பார்கள். ஆனால் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் திமுகவின் நாராயணன் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா என்பதும் மர்மமாகவே இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வியும் ஒழுக்கமும் சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கல்லூரிகளை நடத்துவதில் ஸ்டாலின் அரசு எத்தனை அலட்சியம் காட்டி இருக்கிறது என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
விஜய் அரசு இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறது? திமுக உறுப்பினரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடர்ந்து சீரழிய அனுமதிக்க போகிறதா? உடனடியாக சீர் செய்ய வேண்டிய இந்த விஷயத்தை பற்றி இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? யாரை காப்பாற்ற இந்த மவுனம்?
@Viswanathan_INC@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ
நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம்.
எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg@TNHealthDept@Chief_Secy_TN@CmcellTamilNadu
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் 680 தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கே படித்து தேர்ச்சி பெறுபவர்கள் தான் நமது மாணவர்களுக்கு கல்வியை சொல்லித்தருகிறார்கள்.
ஆனால் இந்த கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் கல்வித்தகுதி இந்த கல்லூரிகளை நிர்வகிக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கே தெரியாது.
இந்த பல்கலைக்கழக பதிவாளர் பல முறை கடிதங்கள் எழுதியும் இது வரை பேராசிரியர்களின் பட்டியல் மற்றும் கல்வித்தகுதி இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. பதிவாளர் கூட அவராக இதை கேட்கவில்லை. அறப்போர் இயக்கம் இரண்டு வருடங்களாக இந்த பட்டியலை வெளியிடக்கோரி பல்வேறு புகார் மனுக்களையும், RTI மனுக்களையும் போட்டுக் கொண்டே இருந்ததால் கேட்டிருக்கிறார். மற்றபடி அவருக்கு பேராசிரியர்கள் கல்வித்தகுதி பற்றி எல்லாம் துளி கூட அக்கறை இல்லை.
இதற்கு அடுத்தபடியாக இந்த பல்கலைக்கழகத்தின் கமிட்டி உறுப்பினரே ஒரு தனியார் பயிற்சி கல்லூரியின் முதலாளி என்பது தான் அதிர்ச்சி தரும் தகவல். திமுக ஆட்சியில் இவரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் கமிட்டி உறுப்பினராக நியமித்துள்ளார்கள். அதாவது ஒரு பல்கலைக்கழகத்தையே தனியாருக்கு தாரை வார்த்து விட்டு சென்றுள்ளார்கள் திமுக ஆட்சியாளர்கள்.
கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் பட்டியலை வெளியிட கூட திராணி இல்லாத, தனியார் முதலாளியிடம் தாரை வார்க்கப்பட்ட, பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு பெருமையா? அவமானமா?
@CMOTamilnadu@Chief_Secy_TN@TVKVijayHQ@Viswanathan_INC@imrajmohan
ஊழல் செய்து குற்றப்பத்திரிக்கையில் பெயரை பதித்துள்ள IAS அதிகாரியை வைத்து தான் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த போகிறீர்களா? @TVKVijayHQ@srinathtvk
இது தான் ஒரே வாரத்தில் ஊழலை ஒழிப்பதா? @AadhavArjuna
முதல்வர் விஜய் அவர்களே,
உங்கள் கட்சி உறுப்பினர்களின் சுயவிளம்பர வெறிக்கு இவ்வாறு சாலைகளையும் நடைபாதைகளையும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். சொல்லில் அல்ல செயலில் காண்பிப்போம் என்று சொன்னீர்களே.. இது தான் அந்த செயலா?
மக்கள் நலனில் அக்கறை இல்லாத சமூக விரோதிகள் தானே இது போல மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், சட்ட விரோதமாக சாலைகளிலும் நடைபாதைகளிலும் பேனர் வைப்பார்கள். அப்போ உங்க கட்சியினர் சமூக விரோதிகளா?
அறிவே இல்லாதவர்கள் தானே, வண்டிகள் செல்லும் சாலையிலும், மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளையும் மறித்து பேனர் வைப்பார்கள். அப்போ உங்க கட்சியினர் அறிவு கெட்டவர்களா?
சாலைகளில் உங்கள் கட்சியினர் பேனர் வைப்பதை கூட உங்களால் தடுக்க முடியவில்லையே... நீங்கள் எப்படி முன்னாள் ADMK அமைச்சர் வேலுமணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போகிறீர்கள் என்று மக்கள் கேட்பது உங்கள் காதில் விழுகிறதா?
@TVKVijayHQ@CMOTamilnadu@CityTirunelveli@TirunelveliCorp
இடம் - திருநெல்வேலி
படம் - @thinak_
தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஒரு மண்டலத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு மாற்றபட்டுள்ளனர்.
இரண்டு கிராமபுற அலுவலகத்தில் மட்டும் ₹3000 கோடி வரிஏய்ப்பு என்றால் சென்னையில் உள்ள 78 அலுவலகத்தில் எத்தனை லட்சம் கோடி ஏமாற்றியிருப்பார்கள்.
ஏதற்காக வருமான வரித்துறை ரெய்டு நடந்துவரும் நிலையில் அவசர அவசரமாக பணியிட மாற்றம்?
முறைகேடு காரணமாக கட்டாய பணி ஓய்வில் அனுப்பப்பட்ட காசி என்ற நபரை திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணியில் அமர்த்தி அவரிடம் மின்சார வாரியத்திற்கு Transformer வாங்கும் பணியை ஒப்படைத்ததில் கூட்டுச்சதி.
ஆரோக்கியமான போட்டி உருவாகி அரசுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் போடப்பட்ட transformer வாங்கும் டெண்டர்களில் போட்டியிட்ட 35 ஒப்பந்ததாரர்களும் ஒரே விலைக்கு டெண்டர் கேட்டிருந்தும், அந்த டெண்டரை ரத்து செய்யாமல் அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்ததில் கூட்டுச்சதி.
டெண்டரில் ஒப்பந்ததாரர்களால் கொடுக்கப்பட்ட தொகை சந்தை விலையை விட மிக மிக அதிகம் என்று தெரிந்திருந்தும் அந்த டெண்டர்களை ரத்து செய்யாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் டெண்டர்களை சமமாக பிரித்து கொடுத்ததில் கூட்டுச்சதி.
இப்படியாக அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் இணைந்து கூட்டுச்சதி செய்ததால் தமிழக மக்களின் வரிப்பணம் 400 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொள்ளையை சரிக்கட்ட பொது மக்களின் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளது திமுக அரசு. மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்து அந்த பணத்தை கொள்ளை அடிக்க காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
ஊழல் குறித்த விரிவான வீடியோ; https://t.co/YDggxMHHsx
#Arappor #Tangedco #TransformerScam #DmkGovt #MKStalin #SenthilBalaji #Kasi #RajeshLakani
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அமைச்சருக்கும் கிடைத்திடாத சிறப்புமிக்க இடம் PTR க்கு மக்கள் மனதில் கிடைத்துள்ளது
பொதுவாக அமைச்சரவை மாற்றத்தை just like that னு கடந்து செல்லும் மக்கள் க்கு மத்தியில் PTR யின் துறை மாற்றத்தை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் இது தான் PTR யின் வெற்றி
இந்த வரவேற்பு எதிர்காலத்தில் வேறு ஒரு அமைச்சருக்கு கிடைக்குமா என்றால் சந்தேகம் தான்
Miss You @ptrmadurai ❤️
#ptrpalanivelthiyagarajan