காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் அவர்களின் மாநிலங்களவை (ராஜ்யசபா) தேர்தல் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராட்டை சத்தியாகிரகம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆர் ஜி பி ஆர் எஸ் சார்பில் நடைபெற்ற ராட்டை சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு,
இது ஒரு தனிநபருக்கான போராட்டம் அல்ல; அரசியலில் நீதியையும், ஜனநாயகத்தின் மாண்பையும் பாதுகாக்கும் போராட்டம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தோழர்களிடம் கேட்டுக்கொண்ட போது!!
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தமிழகத்திற்குத் தண்ணீர் தர இயலாது என்று மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். பருவமழை பொய்த்தது என்பது, கூட்டாட்சி ஒத்துழைப்பைப் புறக்கணிப்பதற்கோ அல்லது நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல!
உச்ச நீதிமன்றத்தின் 2018 இறுதித் தீர்ப்பை கர்நாடகாவிற்கு நினைவூட்டுகிறோம்:
"மாநிலங்களுக்கு இடையேயான நதியின் நீர்... ஒரு தேசிய சொத்து, எந்தவொரு தனி மாநிலமும் அதன் மீது பிரத்யேக உரிமையைக் கொண்டாட முடியாது." (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: பக்கம் 460)
மறுக்க முடியாத உண்மைகளும் தரவுகளும்:
தற்போதைய இலக்கு: காவிரி மேலாண்மை வாரியம் (CWMA) ஜூன் மாதத்திற்கு 9.91 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சி தண்ணீரைத் திறக்க தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
வறட்சிக் கால விதிமுறை: வறட்சிக் காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் (Pro-rata) தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளும் முறையை உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: பக்கம் 448). பற்றாக்குறை ஏற்படும் போது, அது ஒட்டுமொத்தப் படுகைக்கும் விகிதாச்சாரப்படியே பிரிக்கப்பட வேண்டும் - கர்நாடகா தன்னிச்சையாக அணைக் கதவுகளை மூட முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் (CWMA) குறிப்பிட்டுள்ள கால அட்டவணையைப் பின்பற்றி, தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்!
#Cauverywater #TNCongress
Hearty congratulations and a warm welcome to Shri Gulam Ahmed Mir on his appointment as the AICC General Secretary in charge of Tamil Nadu.
Under the dynamic leadership of PCC President Thiru Manickam Tagore, we are confident that the Indian National Congress will scale even greater heights in Tamil Nadu.
Together, let us strengthen the organisation and work tirelessly to uphold the values of democracy, justice, and inclusive development.
@GAMIR_INC
கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் காமராஜர் புகழ் பரப்பும் நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தயாரிக்கப்பட்ட பெருந்தலைவர் புகழ் ஒலிநாடா இன்று என்னால் வெளியிடப்பட்டு மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களால் பெறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
என்ன சார் இது நியாயமா? தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை மூடிமறைக்க இப்படி ஒரு தப்பியோடும் அறிக்கையா @nainarbjp?
கடந்த 12 ஆண்டுகளாக நீங்கள் அரசியல் பழிவாங்கலுக்காக உருட்டிய 'நேஷனல் ஹெரால்டு' புகாரை டெல்லி நீதிமன்றம் (Rouse Avenue Court) தூக்கி எறிந்துவிட்டதே, அது உங்களுக்குத் தெரியுமா? ED தாக்கல் செய்த புகாரை விசாரணைக்கே ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது நீதிமன்றம். இன்றுவரை எந்த ஒரு குற்றச்சாட்டோ, கிரிமினல் வழக்கோ நிரூபிக்கப்படாத நிலையில், இன்னும் எதை வைத்துப் பேசுகிறீர்கள்?
இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்' (MGNREGA) ஆன்மாவையே மொத்தமாகக் கொன்றுவிட்டு, அதற்குப் பெயர் மாற்றம் செய்து 'VBGRAM' என நாடகமாடுவது வேடிக்கையாக உள்ளது. மத்திய-மாநில நிதிப் பகிர்வை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 ஆக மாற்றி, தமிழகத்தின் மீது கூடுதலாக ₹5,000 கோடி நிதிச் சுமையைச் சுமத்துவதுடன், கிராமப்புற ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கும் இந்தத் திட்டம் "மகாத்மா காந்தியை இரண்டாவது முறை கொல்வதற்குச் சமம்!" இதுதான் நீங்கள் கூறும் 'அனைவருக்குமான வளர்ச்சியா'?
*கடந்த காலத்தைப் பற்றிப் பேசும் நீங்கள், 2015-ல் அருணாச்சல பிரதேசம் முதல் 2026-ல் தமிழ்நாடு வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை கலைக்க முற்பட்டதை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம் ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள், இதற்கு பெயர் 'மறைமுக எமர்ஜென்சி'* . ஆளுநர் மாளிகைகளை அரசியல் அலுவலகங்களாக மாற்றிவிட்டு கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
தமிழகம் கொடுக்கும் வரிப் பணத்தில் 29 பைசா மட்டுமே திரும்ப வருகிறது என்பது அதிகாரப்பூர்வ நிதித்துறை தரவு! இதை பொய் என்று மறுக்க உங்களால் முடியுமா?
பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் தினமும் ₹6-8 லட்சம் காணிக்கை பணம் திருடப்பட்டதாக SIT விசாரணையில் அம்பலமாகியுள்ளதே, இதுதான் உங்களின் 'ஊழலற்ற' லட்சணமா? தற்போதைய CAG அறிக்கைகள் அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே, ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் பற்றிப் பேச ஏன் நா எழவில்லை?
'வாட்ஸ்அப் பல்கலைக்கழக' கதைகளைப் பேசி தப்பிக்கப் பார்க்காமல், தமிழகத்திற்கு இழைக்கப்படும் தொடர் நிதி அநீதிக்கும், ராமர் கோவில் கொள்ளைக்கும் முதலில் பதில் சொல்லுங்கள்! மாநில சுயாட்சியைத் துண்டாட நினைக்கும் உங்கள் அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சாமல், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், கூட்டாட்சி தத்துவத்தைக் காக்கவும் காங்கிரஸ் பேரியக்கம் என்றும் தார்மீகத் தகுதியோடு, சமரசமற்ற தன்மானக் குரலாய் என்றும் ஒலிக்கும்!
🎵 “லஞ்சம் தவிர் – நெஞ்சம் நிமிர்” 🎵
பெருந்தலைவர் காமராஜரின் நேர்மை, எளிமை மற்றும் ஊழலற்ற ஆட்சியைப் போற்றும் இந்த சிறப்புப் பாடலை, இன்று நான் வெளியிட, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
📍 இடம்: சத்தியமூர்த்தி பவன்
🗓️ தேதி: 08.07.2026
🕚 நேரம்: காலை 11:00 மணி
🎼 Music: Thopputhurai Riyaz
✍️ Lyrics: Abdul Salam
🎬 Video Animation: Beo Celin Joseph
🤝 Coordination: K.T. Lakshmikanthan & Chinnathambi
🎥 Producer: Rajasakthi Maridhasan
@manickamtagore@INCTamilNadu
என்ன சார் இது நியாயமா?
‘அவதூறு’ன்னு அறிக்கை விட்டுட்டு இவ்வளவு பெரிய உண்மைகளை மறைக்கப் பார்க்கிறீங்களே @nainarbjp?
பழைய பல்லவியையே இன்னும் எத்தனை நாளைக்கு பாடுவீர்கள்?
நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட பழைய புகார்களைப் பேசும் உங்களுக்கு, தற்போதைய CAG அறிக்கைகள் அம்பலப்படுத்திய துவாரகா எக்ஸ்பிரஸ்வே, ஆயுஷ்மான் பாரத் முறைகேடுகள் பற்றிப் பேச ஏன் நா எழவில்லை?
தமிழக மக்கள் செலுத்தும் ஒவ்வொரு ₹1 வரிக்கும் வெறும் 29 பைசாவை மட்டும் திருப்பித் தரும் நிதி அநீதிக்கு என்ன பதில் இருக்கிறது?
கிராமப்புற ஏழைகளின் 100 நாள் வேலைத் திட்டத்தை (MGNREGA) முடக்கிவிட்டு, அதற்குப் பதிலாக கொண்டு வந்துள்ள 'VBGRAM' திட்டத்தில் மத்திய-மாநில நிதிப் பகிர்வை 90:10 என்ற விகிதத்திலிருந்து 60:40 ஆக மாற்றி, தமிழகத்தின் மீது கூடுதலாக ₹5,000 கோடி நிதிச் சுமையைச் சுமத்துவது தான் நீங்கள் கூறும் 'அனைவருக்குமான வளர்ச்சியா'?
பக்தி என்ற போர்வையில் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் அரங்கேறிய நில முறைகேடுகளும், லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கை திருட்டும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
இது ஊழல் இல்லையா?
மாநில உரிமைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் காங்கிரஸ் கட்சி எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்!
சாலை இணைத்தது ஊர்களை... வளர்ச்சி இணைத்தது மக்களை.
கிராமங்களையும் நகரங்களையும் சாலைகள் மூலம் இணைத்து, போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்திய தலைவர் பெருந்தலைவர் காமராஜர்.
உள்கட்டமைப்பே வளர்ச்சியின் முதுகெலும்பு என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த தொலைநோக்கு தலைவர்.
"லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர்!"
#Kamarajar #Infrastructure #RoadDevelopment #Transport #TamilNadu #Integrity #லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #vazhapadi
@INCIndia@INCTamilNadu@manickamtagore@PeterAlphonse7@AGopanna@TNCCITSMDept