தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!
வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்கு எல்லாமுமாக இருந்த என்னுயிர் அண்ணன்!
நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர், என்னுடைய பேரன்பிற்குரிய அண்ணன், சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்கள், தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை உயிரென சுமந்த இன விடுதலை எனும் புனிதக்கனவை நிறைவேற்ற, நம்முடைய மதிப்பிற்குரிய மூத்தவரின் மூன்றாமாண்டு நினைவு நாளில், வழிவழியே வருகி��்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் அயராது உழைப்போம் என உறுதியேற்போம்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
"நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது...
உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறி விடுவது என் கடமை..!
எவன் ஒருவன் தானே சரணடையாமல்,
மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல்,
அனை��்தையும் சோதனைக்கு உட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ?
அவனே சுதந்திர மனிதன்!" - என்கிறார் புரட்சியாளர் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர்.
"சுதந்திரம் இல்லாத நாட்டிற்கு எந்தப் பெருமையும் இல்லை!" - என்கிறார் ரூசோ.
"சுதந்திரம் இல்லாத நாடு; வெறும் காடு!" - என்கிறார் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
"சுதந்திரம் என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாத உயிர்களுக்கும் சுதந்திரம் ��ேவைப்படுகிறது!" - என்கிறார் ஹோ சே மார்த்தி.
"சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை!" - என்கிறார் பால கங்காதர திலகர்.
"கொஞ்சம் இரத்தம் தாருங்கள்; நிறைய சுதந்திரம் தருகிறேன்!" - என்கிறார் மாவீரன் சுபாஷ் சந்திர போஸ்.
"சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை, புரட்சி என்பது மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை." என்கிறார் புரட்சியாளர் பகத்சிங்
"சுதந்திரமற்ற மனித வாழ்க்கை அர்த்தம���்றது!" - என்கிறார் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
அப்படி பல்லாயிரம் வீரமறவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, செக்கடியிலும் சிறைச்சாலையிலும் வதைபட்டு, மிதிபட்டு, அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இன்று அனைவருக்கும் சரியாக, சமமாக இருக்கிறதா? கிடைக்கிறதா?
எந்த நோக்கத்திற்காக இந்த நாடு விடுதலைப்பெற்றதோ? அந்த இலட்சியம் நிறைவேறிவிட்டதா?
கல்லூரியில் படிக்கும் பெண் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவர் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள்,
வீட்டருகே விளையாடும் பெண் குழந்தைகூட வன்புணர்ச்சி ���ெய்யப்படுகிறாள்.
படிக்க வசதியற்ற குழந்தைகள்...
போதையில் தள்ளாடும் இளைய தலைமுறை...
ஆதரவற்று நிற்கும் பெண்கள்...
வறுமையில் வாடும் முதியோர்கள்...
வியாபாரப் பண்டம் போல் விற்கப்படும் மருந்துவம், கல்வி...
லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்,
ஊழலில் திளைக்கும் ஆட்சியாளர்கள்,
மது விற்கும் அரசு என எதுவொன்று இங்கு சரியாக, முறையாக இருக்கிறது? இயங்குகிறது?
அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கி,
தனியார் முதலாளிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று கட்டமைக்கும் அரசு,
அரசின் தவறுகளை எதிர்த்துப் போராடினால், கேள்வி கேட்டால் கொடுஞ்சிறை என்றால்
எங்கே இருக்கிறது கருத்து சுதந்திரம்?
எங்கே இருக்கிறது பேச்சு சுதந்திரம்?
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு,
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு,
மணிப்பூரில் மதக்கலவரம்,
பஞ்சாப்பில் பதற்றமான சூழல்,
ஆந்திராவில் அடக்குமுறை,
கர்நாடகாவில் காவிரி நீர் தர மறுத்து கடையடைப்பு,
குஜராத்தில் குண்டுவெடிப்பு,
கொல்கத்தாவில் கொடூரக் கொலைகள்,
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்��ேடு
என சுடுகாடாய் மாறி நிற்கும் நாட்டில் எங்கே இருக்கிறது சுதந்திரம்?
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ?
நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப்போமோ?
ஆண்பிள்ளைகள் அல்லமோ? உயிர் -வெல்லமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரை கண்ணீராற் காத்தோம்! கருகத்திருவுளமோ?
என்ற மகாகவி பாரதியின் வார்த்தைகள் உள்ள வலி நம் உள்ளத்திலும் ஆறாமல் அப்படியே இருக்கிறது.
பசி-பஞ்சம���்ற, ஊழல்-இலஞ்சமற்ற, பாலியல் வன்புணர்வு, பெண் அடிமைத்தனமற்ற, வர்க்க பேதமற்ற, சாதிய இழிவு தீண்டாமையற்ற, அடக்குமுறை-ஒடுக்குமுறையற்ற, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் பொருளாதார விடுதலைப்பெற்ற சமத்துவ சமுதாயம் பெறுவது எப்போது? அமைப்பது யார்?
பாலுக்கு அழாத குழந்தை..,
கல்விக்கு ஏங்காத மாணவன்..,
வேலைக்கு அலையாத இளைஞன்..,
இதுவே என்னுடைய கனவு இந்தியா..!
அடிமை இந்தியாவில் அன்று மாவீரன் பகத்சிங் கண்ட கனவு
சுதந்திர இந்தியாவில��� இன்றும் நிறைவேறாமல் அப்படியே இருக்கிறது!
அந்தக் கனவை நிறைவேற்றி உண்மையான சுதந்திரத்தை நாம் ஒன்றுகூடி போராடிப் பெற்றிட விடுதலை திருநாளில் உறுதியேற்போம்!
விடுதலைக்கு வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
அனைவருக்கும் விடுதலை திருநாள் வாழ்த்துகள்!
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் மேடை பேச்சு இல்லை என்றால் சமூக வலைதளங்களில் பார்வையாளர் விகிதாச்சாரமே குறைந்துவிடும்
இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் அதே சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கொண்ட அனல் பேச்சு ...
ம��ற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
மாறுவோம்!மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
புரட்சிகர அரசியலை நோக்கி
நாம் தமிழர் கட்சியில் புதிய உறவுகள் இணைந்த விழா
பல்லாவரம் | 02-08-2026
https://t.co/ydDyXaft0J
காவிரி நதிநீர் பங்கீட்டுக்காக, கர்நாடகத்திற்குச் சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்��ுவதா? போராடிப் பெற்ற உரிமையைத் தாரைவார்க்கும் பெருந்துரோகம்!
@CMOTamilnadu @TVKVijayHQ
காவிரி நதிநீர் உரிமைக்காக கர்நாடகாவுக்குச் சென்றுப் பேச்சுவார்த்தை நடத்த முனையும் முதல்வர் விஜய் அவர்களின் செயல் பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இப்போக்கு பன்னெடுங்காலமாகப் பலகட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு சட்டப்பூர்வமாகப் பெற்றிருக்கும் குற���ந்தபட்ச உரிமையையும் மொத்தமாகத் தாரைவார்க்கும் கொடுஞ்செயலாகும். கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை என இறங்கிச் சென்று, தமிழ்நாட்டின் பக்கமிருக்கும் சட்டப்பூர்வ நியாயங்களைப் பறிகொடுக்கத் துடிக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காவிரி நதிநீர் உரிமை விவகாரத்தில் கர்நாடகா அரசு எந்தக் காலத்திலும் நதிநீர் பங்கீட்டு விதிகளையோ, ஒப்பந்தங்களையோ, சட்டப்பூர்வமானத் தீர்ப்புகளையோ மதித்ததில்லை. காவிரி நதிநீர் தங்களுக்கு மட்டுமே சொந்தமெனத் தன்முனைப்பின் உச்சமாகச் செயல்பட்டு, தமிழ்நாட்டுக்கானத் தார்மீக உரிமையை மறுத்து வருகிறது என்பதே மறுக்கவியலா பேருண்மை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டிப் பாசனம் செய்து வந்த தமிழ்நாடு, காவிரியுடன் கொண்டிருக்கும் வரலாற்று வழிப்பட்ட உறவையும், சட்டப்பூர்வ உரிமையையும் கர்நாடக அரசு ஒர���நாளும் ஏற்றதில்லை. முந்தையக் காலங்களில், காவிரி நதிநீருக்காக எத்தனையோ முறை தமிழ்நாட்டு அரசின் சார்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்தத் தீர்வும் இதுவரை எட்டப்பட்டதில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் காவிரிச் சிக்கலைத் தீர்க்க முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956ன்படி, காவிரி நடுவர் மன்றம் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறியது. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது, அதனையும் 177.25 டி.எம்.சி. எனும் அளவில் குறைத்து, தமிழ்நாட்டுக்கான பங்கீட்டு உரிமையாக ஆக்கியது. இருந்தபோதிலும், அந்தக் குறைந்த அளவிலான நதிநீர்ப் பங்கீட்டையும் தர மறுத்து, அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு. உச்ச நீதிமன்ற உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையுமென சட்டத்தையே மதிக்காது, சண்டித��தனம் செய்யும் கர்நாடக அரசைப் பேச்சுவார்த்தையின் மூலம் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியுமென தவெக அரசு நினைத்தால், அதனைப் போல மடமைத்தனம் வேறில்லை.
கபினி, ஏமாவதி, ஏரங்கி என விதிகளை மீறி அணைகளைக் கட்டிய கர்நாடகா, அதேபோல தற்போது மேகத���துவிலும் அணை கட்ட முயன்று வருகிறது. மேகதாதுவில் அணைகட்டினால் தமிழர்களுக்கும், காவிரிக்குமுள்ள வரலாற்றுவழிப்பட்ட உயிர்த்தொடர்பு முற்றாக அறுந்துபோகும்; காவிரிப்படுகைப் பாலைவனமாக மாறும். கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவைத் திரும்பப் பெறச் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்? காவிரி நதிநீரிலும், தென்பெண்ணையா��்றிலும் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடக அரசின் படுபாதகச் செயல்பாட்டை நிறுத்தச் செய்வாரா? இப்பேச்சுவார்த்தையின் மூலம் என்ன சாதித்துவிட முடியும்? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குள்ள சட்டப்பூர்வ உரிமையை முழுமையாக மறுக்கும் கர்நாடக அரசிடம் பேசுவதற்கு இனியென்ன இருக்கிறது? உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் சொல்லிக் கேட்காத கர்நாடக அரசு, முதல்வர் விஜய் சொன்னவுடன் கேட்டுவிடுமா? காவிரி நதிநீர்ப்பங்கீட்டில் சட்டமும், நியாயமும் தமிழ்நாட்டின் பக்கமிருக்கையில், பேச்சுவார்த்தை என இறங்கிப் போவது போராடிப் பெற்றிருக்கும் குறைந்தபட்ச உரிமையையும் இழக்கச் செய்யும் துரோகமில்லையா? உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2012ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கர்நாடகத்தின் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தப் பயனும், தீர்��ும் கிடைக்கப்பெறாது திரும்பி வந்ததெல்லாம் முதல்வர் விஜய்க்குத் தெரியாதா? ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுபோல, முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என ஊடகங்களில் கருத்துருவாக்கம் செய்து, விஜய்யின் அரசியல் பிம்பத்தை நிலைநாட்டுவதைத் தாண்டி, இ���்சந்திப்பில் வேறென்ன பயன் விளையப் போகிறது? காவிரி நதிநீர் உரிமைப் பங்கீட்டுக்காக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசி, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், கருத்துக்களையும் பெற முயற்சி எடுக்காத தவெக அரசு, முரண்டுபிடிக்கும் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் துடியாய் துடிக்கிறது? காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசைக் கூட்டணியிலும், அமைச்சரவையிலும் வைத்துக் கொண்டு, அங்கு போய் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் ஊடகச்செய்தியைத் தாண்டி, உருப்படியாக எந்தப் பயனையும் இது தரப்போவதில்லை.
கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்துவிடாததால், சூன் 12ஆம் தேதி தண்ணீருக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை. இதன���ல், குறுவை சாகுபடி காவிரிப்படுகையில் மொத்தமாகப் பொய்த்துப் போனது. அடுத்தப் போகமான, சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதில் எவ்வித உறுதிப்பாடுமில்லை. காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும்கூட, அதனை ஏற்க மறுத்து, மேல்முறையீட்டுக்குச் செல்கிறது கர்நாடக அரசு. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்கப் போகிறார்? எதற்கு இந்த வறட்டுப்பிடிவாதம்? ஏற்கனவே, பயிர்க்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்றாது ஏமாற்றி, விவசாயிகளின் வயிற்றிலடித்த தவெக அரசு, இப்போது காவிரி நதிநீர்ச்சிக்கலையும் மிகுந்த மெத்தனப்போக்கோடும், அலட்சியப்போக்கோடும் கையாள்வது ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும். மேகதாதுவில் அணை கட்டுவத�� எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதற்கு நடுவர் மன்றம் கோரி, புதிய சிக்கலை இழுத்துவிடத் துணிந்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகா செல்வது வரலாற்றுப் பெருந்தவறாகும். இப்போது சூழல் ச��ியில்லாததால், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாமென்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார். எப்போதும் கர்நாடகாவுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தையே செய்ய வேண்டாமென்று நாங்கள் கூறுகிறோம். தவெக அரசு, பேச்சுவார்த்தை எனும் பிழையான முடிவை முழுமையாகக் கைவிட்டு, சட்டப்போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் செய்வதே ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.
ஆகவே, காவிரி நதிநீர்ப்பங்கீட்டுக்காக கர்நாடகா சென்று, பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதல்வர் விஜய் அவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். விவசாயச் சங்கங்கள், காவிரி நதிநீர் உரிமைக்காகப் போராடும் மண்ணுரிமைப்போராளிகள், எதிர்க்கட்சிகள் என எல்லோரது எதிர்ப்பையும் மீறி கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முயன்றால், போராடிப் பெற்ற உரிமையைக் காவுகொடுத்த வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி