Strongly condemn the shocking conduct of the Delhi Police and paramilitary forces at UNI’s Rafi Marg office, where journalists were allegedly dragged out and manhandled. Such high-handedness, denial of advance notice and time to gather personal belongings, and reported mistreatment, including of women staff, is unacceptable in a democracy and cannot be justified under the cover of a court order.
A free press cannot function under intimidation. Authorities must ensure accountability and uphold the dignity and rights of journalists.
உறுதியைக் கற்றுக்கொடுத்த கியூப பெண்மணி
பிடல் காஸ்ட்ரோ மற்றும் அவரது குழு கியூபாவில் மாண்கடா ஆயுதக்கிடங்கை தாக்கினார்கள்.
இத்தாக்குதல் தோல்வியடைந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ, ராவுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட பாதி குழுவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இரண்டு பெண்களும் அடங்குவர். அதில் ஒருவரது பெயர் ஹைதே சாண்டாமரியா.
மேலும் அந்தக்குழுவில் ஒரு இருந்த ஹைதேவின் சகோதரன் அபெல் மற்றும் காதலன் போரிஸூம் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களை பட்டிஸ்டா ராணுவம் மிக மோசமாகச் சித்திரவதை செய்தது.
சகோதரன் அபெலின் ஒரு கண்ணை பிடுங்கியெடுத்து இரத்தம் சொட்டச் சொட்டக் கொண்டுவந்து ஹைதேவிடம் காட்டினார்கள். அதேபோல, காதலன் போரிஸின் விதைப்பையை அறுத்தெடுத்து ஹைதேவின் கண்முன்னே வைத்தார்கள். இப்படியாகப் பயமுறுத்தி ஹைதேவிடம் இந்தத் தாக்குதலுக்கு உதவிய கியூப மற்றும் சர்வதேசக் குழுக்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிய முயன்றது. இராணுவம்.
ஆனால், ஹைதேயோ, "இவ்வளவு துன்புறுத்தியும் அவர்களிடம் எதைக் கேட்டு உங்களால் அவர்களைப் பேசவைக்க முடியவில்லையோ, அதேபோலத்தான் நானும் எதையுமே பேசமாட்டேன்" என்று வெகுதைரியமாகப் பேசினார்.
பாலின வேறுபாடின்றி கொள்கை உறுதி நாட்டின் மீதான பற்று காதல் நாட்டுமக்கள் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து அவர்களுக்கு விடுதலை பெற்று தரவேண்டும் என்ற வேட்கையோடு போராடும் ஒரு புரட்சிகர குழுவின் உறுப்பினர்களின் நெஞ்சுரத்திற்கும் தைரியத்திற்கும் ஹைதேயின் வரலாற்று பாத்திரம் ஒரு உதாரணம்.
#Cuba #CubanRevolution #Lefthistory #HaydeeSantamaria