தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.
ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது.
ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது. Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு. நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட
மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ
மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர். Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.
சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி.
வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்கள்!
ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு
தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் @lokbhavan_tn ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள @CMOTamilnadu ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.
மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன் ,பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது.
மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார்.
2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசு நிர்வாகத்தில் புறையோடிக் கிடக்கும் லஞ்ச ஊழல்களை அடியோடு ஒழிக்கவும்,
நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தி அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு திகழும்.
கனிம வளக் கொள்ளைகள் தடுக்கப்படும்;
அரசின் வருவாய் அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை சுமார் 1000 கோடிக்கு மேல் அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்திருப்பது நிதி மேலாண்மையில் புதிய அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
ஒன்றிய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக இருக்கிறது.
தமிழக அரசு இயந்திரம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு எளிமையான வழிமுறைகள் உருவாக்கப்படும்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
@TVKVijayHQ ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கதாகும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.06.2026
#vaiko #CMJosephVijay #governer #TamilnaduAssembly #mdmk
திமுக ஆட்சில இருக்கும் போது ஏரியா திமுக கவுன்சிலர் கிட்ட பத்திர பதிவு பண்ணி கொடுக்காம 6 மாசமா அலைகழிச்சு இருக்காங்க இன்னைக்கு தவெக ஆட்சில உடனே கிடைச்சு இருக்கு 👏🏻❤️
@TVKVijayHQ@CMOTamilnadu#தமிழகவெற்றிக்கழகம்