கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பான பலனை அளித்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 54.75 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வித்யா ராமராஜின் விளையாட்டுத் திறமையை அங்கீகரித்து, அவருக்கு ELITE பிரிவின் மூலமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) மூலமும் தேவையான உதவிகளை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வித்யா ராமராஜ், இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
மேலும், இந்தியாவிற்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள அபினயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பரணிகா, ஹரிஹரன் மற்றும் காமலினி ஆகிய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TNCF) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட நிதியுதவி மற்றும் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 300 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு போன்ற நடவடிக்கைகள், நமது விளையாட்டு வீரர்கள் இத்தகைய உயரங்களை எட்டுவதற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்கும் வகையில், தற்போதைய அரசு தொடர்ந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.
நமது விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்ந்து உயர்ந்து, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கட்டும்!
@polimernews பெருசா ஆசை எதுவும் இல்லை.
அண்ணனை National Population control board க்கு Ambassador ஆக்கனும்.
தெரு தெருவா அண்ணன் மீட்டிங் போட்டு மக்கள் தொகையை குறைக்கனும்.
@selvachidambara இவரோட டைம் லைன் செக் பண்ணா தெரியும்.
எப்ப எல்லாம் views குறையுதோ அப்ப எல்லாம் குப்பையில இருந்து கோழி குதறி கொண்டாந்து போடுற மாதிரி ஒரு post போடுவாரு views க்காக
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DummyCM #Murders