கரடியே காரித்துப்பிய தருணம்
இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை தமிழ் நாட்டு மக்கள்
இவ்வளவு சீக்கிரம் 100 நாட்களுக்குள் expose ஆவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை
தி மு க மிரட்டலுக்கு பயந்து வீடியோவை எடிட் செய்த கோபி- சுதாகர் , உண்மையான பரிதாபங்கள் இது தான் , நீங்க மாமியார் மருமகள் , நாத்தனார் , கொழுந்தனார் பரிதாபங்கள் விடியோஸ் போடத்தான் லாயக்கு .
Fame does not necessarily give you a back bone. 😊
யாரா இருக்கும் ! யோவ் ராஜீவ் நீயாயா.. இல்லை அமைச்சர் விஜயலட்சுமி? யாருயா அது..
ஈரோடு மட்டுமே 400+ சாயப்பட்டறைகள் இருக்கும். இதில் வருடம் 1 லட்சம் என்றால் கூட 40 கோடி.. இதில் திருப்பூர் நாமக்கல் பகுதிகள் ஒரு 800 சாயப்பட்டறைகள் இருக்கும் - அது ஒரு 80கோடி.. மா நிலத்தின் பிற பகுதிகள்.. எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தால் இது ஒன்று மட்டுமே 140 கோடி வசூல் நடக்குமே..
இதுவே இவ்வளவு என்றால் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் , சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் என பட்டியல் போட்டால் வருடம் 1000 கோடி வசூல் தாண்டுமே...
அய்யா விஜய் கொஞ்சம் அமைச்சர் மீது வரும் புகார்கள் மீது நடவடிக்கை எதாது எடுங்க... இல்லை எந்த மாற்றமும் இல்லை பெரிய கொள்ளை கூட்டத்தை விட்டு கொள்ளை அடிக்க அனுமதித்தது போல் முடியும்..
151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தவெக அரசின் அலட்சியத்தால காலியாகி இருக்கே!
அதவிடுங்க ஐயா!
தளபதி கருப்பு கோட் போட்டுக்கிட்டு, எவ்வளவு ஸ்டைலா Walk பண்றாரு பாருங்க!
முதல்வர் - வாயை திறக்கவே மாட்டார்.
மந்திரிகள் - வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள்.
வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு இந்த @TVKVijayHQ அரசு
- பத்திரிக்கையாளர் மணி
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தூரில், அப்பகுதியைச் சேர்ந்த மாண்புமிகு விவசாயி முருகேசன் அவர்கள், கல்குவாரிகளை இழுத்து மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
கேள்விக்குப் பதில் தெரியலன்னா கூட பரவால்ல. நம்ம அமைச்சருக்குத்தான் கேள்வியே புரியாதே!
இந்த இலட்சணத்துல இருக்காரு நீர்வளத்துறை அமைச்சர்!
இதுல எங்குட்டு பதில் சொல்றது?
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை முறையான அனுமதி பெறாமல் தனியார் நிறுவனம் அமைத்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத மாற்று மின்பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்வின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே காலநிலை மாற்றம், பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் முறையா? அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்கக்கூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
உரிமை கேட்டு போராடும் எம்ஆர்எஃப் (MRF) தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் மக்களுக்கான மாற்றமா?
@CMOTamilnadu@TVKVijayHQ
பெரம்பலூரில் அமைந்துள்ள, எம்ஆர்எஃப் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 730 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு கடந்த 27 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் எம்ஆர்எஃப் நிறுவனம் அவர்களுக்கு உரிய ஊதியம் தர மறுத்து வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களைத் துன்புறுத்தி அடித்து, மிரட்டும் தவெக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச்சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களைக் கூவி கூவி அழைத்து ஒப்பந்தம் போடும் தமிழ்நாடு அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா? தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் பேச்சுவார்த்தை நடத்தி நம் தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் நலன் காக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் தலையாயக் கடமையாகும்.
அதை விடுத்து, நாங்கள் மக்களை காக்க வந்த காவலர்கள், மாற்றத்தைத் தர வந்த மனிதப் புனிதர்கள் என்று தற்பெருமை பேசும் தவெக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பெரம்பலூர் எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி குறித்து சமீபத்தில் நம்ம நண்பர் @itisprashanth நிறைய பதிவிட்டு வீடியோக்கள் போட்டும் வருகிறார் . ஆரோக்கியமான ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் / இருக்கணும் , ஆனா , நீங்க என்ன தான் விமர்சனம் செய்தாலும் . தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி தனித்துவம் வாய்ந்தது , சீமான் தனித்துவம் வாய்ந்த அரசியல் தலைவர் தான் .
தேர்தல் அரசியலில் மக்களின் அங்கீகாரம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன . அதை மட்டுமே வைத்து ஒரு இயக்கத்தையும் அதன் தலைமையையும் எடை போடுவது சரியான பார்வை அல்ல . ஒரு அரசியல் இயக்கத்திற்கு பணம் அவசியம் , ஆனால் திரள் நிதி என்பது பலரது நம்பிக்கையின் அடிப்படையில் தங்களது உழைப்பின் சன்மானத்தில் ஒரு பகுதியை கொடுக்கிறார்கள் , அதை விரும்பி கொடுக்கிறார்கள் , அவர்களது ஆதர்ச தலைவர் சீமான் . அவர்களே ஏற்கும் பட்சத்தில் நமக்கென்ன பிரச்சனை ? அந்த லாஜிக் படி எல்லா தலைவர்களும் நடிகர்களும் தொண்டர்களின் / ரசிகர்களின் உழைப்பை உறிஞ்சிதான் வாழ்கிறார்கள் என்றும் வாதிடலாமே