கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய தேர்வர்கள் கைது - அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது.
கூட்டுறவுத்துறையில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடக் கோரி சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக போராடிய தேர்வர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை தற்போது வரை வெளியிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, அத்தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி ஜனநாயக ரீதியில் போராடிய தேர்வர்கள் மீது காவல்துறையின் மூலம�� அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 185வது வாக்குறுதியாக ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 187வது வாக்குறுதியாக அரசுத்துறைகளில் நிலவும் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதியாக கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில், அரசுத்தேர்வுகளை முறைய��க நடத்த முடியாமலும், முடிந்த தேர்வுகளுக்கான முடிவுகளைக் கூட வெளியிட முடியாமலும் திணறிக் கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி கனவு கானல் நீராகவே மாறும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தேர்வர்களை எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, கூட்டுறவு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என கூட்டுறவுத்துறையையும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
கூட்டுறவுத்துறை தேர்வு சம்மந்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கேடுகெட்ட ஸ்டாலின் அரசாங்கம் தாக்கி கைது செய்து சென்னைக்கு வெளியே வலுக்கட்டாயமாக கூட்டிச்செல்கிறது , கேவலமான அரசாங்கம்
கூட்டுறவுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி பட்டியல், 100 நாட்கள் கடந்தும் வெளியிடப்படாமல் இருப்பதால், கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக, தேர்வுகள் எழுதிய இளைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையில், மாநில அளவிலான தேர்வில், 327 பணியிடங்களிலிருந்து 267 ஆக குறைத்து துரோகம் செய்ததோடு ம��்டுமல்லாமல், மாவட்ட அளவிலான 2314 பணியிடங்களுக்காக, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நம்பிக்கையோடு தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் திமுக அரசுக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடைபெறும் அமைதியான அறப்போராட்டம், வெறும் கோரிக்கை மட்டுமல்ல, பல குடும்பங்களின் நியாயத்திற்கான குரல். தகு��ியான இளைஞர்களின் எதிர்காலத்தை தாமதப்படுத்தாமல், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
Release DRB/ SRB exam final result
#ReleaseSRB_DRBResults#JusticeForAspirants
Please result odanae publish panuga . Ithuvae engaluku dailyuam oru depression aa feel panuroam .plzz release results