மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu
அவர்கள்,
தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தளவாய்பட்டினம் பகுதியில் கழக வெற்றி வேட்பாளர் திருமதி. K. பானுமதி அவர்களுக்கு “இரட்டை இலை” சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK#Dharapuram #ByeElections
Road Show அப்டின்னா எப்படி இருக்கணும் அப்டின்னு அதிமுகவை பாத்து கத்துக்கோங்க ப்ரோ..
கட்சி அப்டின்றது ஒரு உணர்வு..
அந்த உணர்வுல எழுச்சியா வரணும்..
கட்சிக்காக உழைக்கணும்..
கட்சியை வெற்றி பெற வைக்க அர்ப்பணிப்போடு செயல்படணும்.
அதெல்லாம் ஆச்சரியக்குறிகளுக்கு புரிய வாய்ப்பில்லை..
மக்களின் எழுச்சிமிகு ஆரவாரத்தோடு தாராபுரத்தில் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
தமிழக காலி சேர் கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டம் பாருங்க!
ஒரு நடிகரைத் துரத்தும் ரசிக வெறி தவிர ஒன்றுமில்லாத கட்சி என்று தவெக அம்பலப்பட்டு நிற்கிறது.
இவ்ளோ தான் சார் இவங்க!
#தமிழக_வெத்துவேட்டு_கழகம்
RTI-க்கு “Law & Order” என்ற பெயரில் ஒரு அரசு முழுமையான மூடாங்கு போட முடியுமா?
21.09.2026 அன்று @TVKVijayHQ அரசால் வெளியிடப்பட்ட https://t.co/KDgymeHHhp.57 மூலம் தமிழ்நாடு அரசின் Public (Law & Order) Department முழுவதையும் RTI Act, Sec 24(4)-ன் கீழ் விலக்கியுள்ளது மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது.
உச்சநீதிமன்றம் Special Police Establishment v. Kamta Prasad Mishra வழக்கில், ஒரு அமைப்பை "Intelligence & Security Organisation" என்று அறிவித்துவிட்டாலே Sec 24(4)-ன் கீழ் blanket exemption கிடைக்காது; அது சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
காவல் சித்ரவதை, மரணங்கள், அரசியல் போராட்டங்கள் என பொதுமக்களோடு தொடர்புடைய ஒரு துறைக்கு முழு விலக்கு அளிக்க #விஜய் அரசு முயல்வது எதற்காக?
வெளிப்படைத்தன்மை ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை @CMOTamilnadu அறியவேண்டும்.
நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய #தவெக அரசின் இந்த ஜனநாயக விரோத அரசாணை தமிழ்நாட்டை Police State ஆக மாற்றுவதற்கான பிள்ளையார் சுழி!
@AIADMKOfficial
#RTI #RightToInformation #TamilNadu #Transparency
நினைத்து நினைத்து பெயர்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் என்பது தவெக கட்சியின் உள்கட்சி அறிவிப்பு அல்ல; R.P. Act, 1951 – Section 77(1), Explanation 1 & Explanation 2 மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
Section 77(1), Explanation 2-ன் proviso படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் இறந்தாலோ அல்லது அந்த அரசியல் கட்சியின் உறுப்பினராக இல்லாமல் போனாலோ, அவருக்குப் பதிலாக மற்றொரு பெயரைச் சேர்ப்பது தொடர்பான சிறப்பு விதி உள்ளது.
மேலும், நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் அறிவிக்கை வெளியான 7 நாட்களுக்குள் ECI மற்றும் சம்பந்தப்பட்ட CEO-விடம் தெரிவிக்கப்பட வேண்டும். முறையாகத் தெரிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கே Section 77-ன் சிறப்பு செலவுக் கணக்கு விதிகள் பொருந்தும்.
வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் போன்றோரை தவெக கட்சி தனது Star Campaigner பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ள நிலையில், அவர்கள் தவெக வேட்பாளர்களுக்காக மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்தால், Section 77-ன் Star Campaigner செலவு விலக்கு அவர்களுக்குப் பொருந்தாது.
எனவே, அந்தப் பிரசாரத்துடன் தொடர்புடைய செலவுகள் Section 77 மற்றும் ECI-யின் expenditure-monitoring விதிகளின்படி சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முன் உள்ள முக்கிய சட்டநிலை.
சட்டம் பேசட்டும்!
#மதுராந்தகம்_தாராபுரம் #அதிமுக
#StarCampaigners #Section77 #TVK
@AIADMKOfficial@TVKVijayHQ
@ECISVEEP@TNelectionsCEO
பெரம்பலூரில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கி அடாவடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்.
சொந்தக் கட்சி நிர்வாகிகளை கூட கட்டுப்படுத்த இயலாத டம்மி முதல்வரால் தமிழகத்தில் சீரழியும் சட்டம் ஒழுங்கு!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கோவை, ராயல்கேர் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் திரு. வெங்கு (எ) G. மணிமாறன் அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகளைப் பாதுகாக்க வக்கில்லாத த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
“ஊருக்குள்ளயே வர வேண்டாம்”
மக்கள் தீர்ப்பை எட்டி மிதித்து குதிரை பேரத்தில் மூழ்கிய துரோகிகளுக்கு களத்தில் மக்கள் சொல்லும் பதில் இது தான்!
துரோகம் வீழும்!
இரட்டை இலை வெல்லும்!
#ByeElection#Madurantakam#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கோவை, ராயல்கேர் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் திரு. வெங்கு (எ) G. மணிமாறன் அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.