மிக உயர்ந்த ஆன்மீக எண்ணம் இல்லாதவர்களால் அயோத்தியை புரிந்து கொள்ள முடியாது... அயோத்தி ஒரு நகர் மட்டுமல்ல அது ஒரு லட்சிய உலகம்.. அது ஒரு ராம ராஜ்ஜியம்.. மட்டுமல்ல அனைவருக்கும் சமூக நீதியை தரும் கிராம ராஜ்யமும் கூட... குற்றமில்லை ஊழல் இல்லை வறுமையில்லை அரசன் மக்களை எந்த பாராபட்சமும் இல்லாமல் தந்தை போல் நேசிக்கும் நிலை... தெய்வம் தரும் பரிபூரணத்துடன் மனிதர்கள் தரும் பண்புடன் இ��ைந்த சமூக நீதி ஆட்சி தான் அயோத்தியின் ஆட்சி என்று விவரிக்கிறார் கம்பர்.. ஆக அயோத்தி ஒரு நகரம் அல்ல ஒரு லட்சிய உலகம் அங்கு அரசன் ஒரு நிர்வாகி அல்ல தர்மம் நிறைந்த மனித தெய்வம் மக்களுக்கும் அவருக்கும் ஆனது.. அயோத்தி என்பதுஎன்பது கோபுரமும் கோயிலும் மட்டுமல்ல .. அதனோடே சேர்ந்த தர்மமும் நல்லாட்சியும் தான்... ஆக அயோத்தி என்பது வேறுபாடு இல்லாத வறுமை மற்றும் ஊழல் இல்லாத மக்கள் பங்களிப்போடு கூடிய ஒரு நல்லாட்சியின் குறியீடு... அதை சிலரால் புரிந்து கொள்ள முடியாது..
தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கத்தாலும், தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் கொள்கைத் தலைவராக வீரத���தின் அடையாளம் வீரமங்கை வேலுநாச்சியார் அ��ர்களை மக்களிடம் கொண்டு சேர்த்த செயலாலும் இது நடந்துள்ளது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்று பெயர் வைக்கும் விளம்பர அரசியலை முதல்வர் தற்பொழுது கையில் எடுத்துள்ளார் என்று மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள் .
இந்த நான்கரை ஆண்டுகள் வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களை திமுக அரசாங்கம் மக்களிடம் கொண்டு சேர்த்த செயல்கள் என்னென்ன?
எத்தனை மக்கள் தி���்டத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயரை வைத்துள்ளீர்கள்?
தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து பயம். வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களை சொந்தம் கொண்டாட வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்னெடுக்கும் விளம்பர வெற்று அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது.
இதுபோன்று எதையாவது செய்து மக்களை எங்களிடம் இருந்து பிரிக்கலாமா என்று முயற்சி செய்கிறீர்கள்.
உங்கள் ஏமாற்று வேலைகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
மக்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விடாதீர்கள்.
மேம்பாலத்திற்கு பெயர் வைப்பதை தவறு என்று சொல்லவில்லை. ஏ��்றுக் கொள்கிறேன்.இதுவும் எங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.மேம்பாலத்திற்கு பெயர் வைப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயரில் பெண் காவலர் பயிற்சி கல்லூரி சிவகங்கையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னீர்கள். அது என்னானது CM SIR? @mkstalin
சொன்னதை எப்பொழுது நிறைவேற்றப் போகிறீர்கள்?
தவிர்க்க முடியாத சக்தியாக தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் திகழ்ந்து வருகிறார்.
பல கோடி மக்களிடம் வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களை கொண்டு சேர்த்த பெருமை எங்கள் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்குதான் உள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த செயலுக்கும் எங்கள் தலைவர்தான் காரணம் என்பது பலருக்கும் தெரியும். புரியும்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இன்று 30.11.25
மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்.கழக பகுதி,
வார்டு மற்றும் நிர்வாகிகள் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
SR.தங்கப்பாண்டி
நிர்வாக குழு உறுப்பினர்
#தமிழகவெற்றிக்கழகம்
மாவட்ட கழக செயலாளர்
மதுரை மாநகர் தெற்கு.
#TVKVijay#Madurai@TVKVijayHQ|@BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
பேரறிஞர் அண்ணா ,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ,
புரட்சித் தலைவி அம்மா ,
தந்தை பெரியார்….
அவர்களின் நினைவிடத்தில் வணங்கி மலர் தூவி மரியாதை செலுத்திய போது 🙏🙏🙏
ஈரோட்டில் மேடை ஏறிய பொம்மை முதலமைச்சர், வழக்கம் போல
என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார்.
அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது,
எது நடந்தாலும் "ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்" என்று கூறிக்கொண்���ே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல,
"நான் டெல்டாக்காரன்" என்று பச்சைதுண்டு போட்டு டயலாக் பேசிவிட்டு,
மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டக் கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாக தானே,
இப்போது நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்தார் இந்த துரோகி ஸ்டாலின்?
ஆட்சிக்கு வந்து இந்த நான்கரை ஆண்டுகளும், விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டைக் கூட அளிக்காமல்,
முறையாக நீரைத் திறக்காததால், கடைமடை வரை நதிநீர் சென்று சேராததால், டெல்டா பகுதியில் 2 லட்சம் ஏக்கர் வரை தொடர்ந்து பாதித்து, விவசாயிகள் தவித்த போது கூட, விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்?
உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவ��்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு செய்தன என்னவென்று!
நூறு ஏரிகளுக்கு நீரேற்றும் சரபங்கா திட்டம் முதல், தலைவாசல் கால்நடைப் பூங்கா, அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக நான் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் போது, இதெல்லாம் நான் கொண்டு வந்த திட்டம் என்று தெரியவில்லையா இந்த பொம்மை முதல்வருக்கு?
கோவை மட்டுமல்ல, ��துரை மெட்ரோவும் வர வேண்டும் என இப்போது கூட மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை ச��்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன் நான்.
எங்கள் அரசு முன்மொழிந்த மெட்ரோ திட்டத்திற்கான DPR-ஐக் கூட முறையாக சமர்ப்பிக்கத் தெரியாமல், உங்கள் அரசு சமர்ப்பித்த DPR-ல் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் நிவர்த்தி செய்து மறு சமர்ப்பிப்பு செய்வதை விட்டுவிட்டு, இதை வைத்து தனது அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே திரு. @mkstalin வெட்கப்பட வேண்டும���.
"அஇஅதிமுக ஆட்சியில் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வரும்" என்று சொன்னதைக் கேட்டு வயிற்றெரிச்சல்பட்டு, திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று கேட்கிறார். திரு. @mkstalin அவர்களே- நீங்கள் ஒரு கையாலாகாத, நிர்வாகத் திறனற்ற முதல்வர் என்பதைத் தான் நாங்கள் எப்போதும் கூறுகிறோம்.
உங்கள் ஆட்சி இருக்கும் போது தான், சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்து நான் வலியுறுத்தினேன். எங்களின் கோரிக்கையினை ஏற்று தான், மத்திய அரசும் ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது.
ஆக, @AIADMKOfficial எப்போதும் மக்களுடன் நின்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. நீங்களோ, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள், யார் துரோகி என்று!
ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையைத் துடைக்க கர்சீப்பைக் கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்தீர்களே- அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா திரு. ஸ்டாலின் அவர்களே?
நான் எப்போதும் என் உயிருக்கு உயிரான தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்! ஆனால், ஒரே ஒரு கேள்வி-
எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால்,
நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?