கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது போல் மிகக் கொடிய விஷம் எதுவுமில்லை । எதிர்காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது போல் முட்டாள்தனமும் எதுவுமில்லை ! இந்த நொடி மட்டும் நிஜம். அமைதி!
ஊர் ஊரா Trip போய்ட்டு இருக்கிற ஒருத்தன்ட்ட போய் உனக்கு வாழ்க்கையில பொறுப்பில்லையா'னு கேக்காதிங்க
வெளில எங்கயும் சுத்தாம movie/ series/ social media னு இருக்கவன்ட்ட போய் room ah விட்டு வெளில வா'னு force பண்ணாதிங்க
Relationship ல பிடிப்பு இல்லாம தனியா இருக்கவன்ட்ட போய் காலா காலத்துல ஒரு கல்யாணத்த பண்ணுடானு advice பண்ணாதிங்க
ரொம்ப வருஷமா காதலிக்கிற ஒருத்தன்ட்ட போய் love எல்லாம் இப்ப பொய் ஆகிருச்சி'னு உங்க story சொல்லி அவன் trust ஒடஞ்சி போற மாரி பேசாதிங்க
குடிச்சிட்டு தம் அடிச்சிட்டு இருக்கவன்ட்ட போய் எதோ நீங்க தான் பெரிய உத்தமன் மாரி உபதேசம் பண்ணாதிங்க
இதுவரைக்கும் குடிப்பழக்கம் சிகரெட் பழக்கம் இல்லாதவன் கிட்ட போய் ஒரு தடவ try பண்ணி பாருடா'னு அவன் மனச மாத்தாதிங்க
இங்க இருக்கிற எல்லாருமே வித்தியாசமானவங்க. அவங்க கடந்து வந்த பாதைகளும் அவங்களோட கதைகளும் வித்தியாசமானது
அதனால யாரும் யாரையும் குறை சொல்ல வேணாம் யாரையும் குறச்சி மதிப்பிடவும் வேணாம்.
அவன் life அவனோடது. அத அவனுக்கு பிடிச்ச மாதிரி வாழ அவனுக்கு முழு உரிமையும் இருக்கு
அவனுக்கு எது பிடிச்சிருக்கோ.. எப்டி இருக்கிறது comfortable ஆ இருக்கோ.. அவன் அப்டி இருந்துட்டு போகும்.
அவனோட life style உங்கள affect பண்ற வரைக்கும் நீங்க அதுக்கு react பண்ண வேண்டிய அவசியமும் இல்ல உரிமையும் இல்ல.
இங்க இருக்க எல்லாருமே அவங்களோட வாழ்க்கையையும் வேலையையும் மட்டும் பாத்துட்டு இருந்தாலே இங்க நெறைய பிரச்சனைகள் கண்ணுக்கு தெரியாம மறஞ்சி போயிரும்.
Try பண்ணி பாருங்க ♥️🍂🌍
Hospital செல்லும் வழியில் credit/debit card உள்ள என் purse-ஐ hotel-லில் வைத்து விட்டு மறதியோடு சென்று விட்டேன்.
Bill 7911.25 Dirhams! which is commonly abbreviated as AED
நம்மூர் Gandhi talks-ல் 1,97,781.25 (approxi)
Purse miss-Hotel
long dis
So,
நண்பர்களிடம் கைமாத்தாகக் கையேந்தும்
அவசர நிலை!
ஊதும் சிகிரெட்டை ஒதுக்கிவிட்டு உதடு பிதுக்கினர் சிலர்,signal கிடைக்கவில்லையென 🚦-ஐ cross செய்தபடி stearing-ஐ திருப்பினர் சிலர்,
அந்தப் பணக்கார்ர்களின் மனதில் ….
கேட்பது ஒரு celebrity கொடுத்துவிட்டு திரும்ப கேட்க முடியாமல் போய் விட்டால்?நியாயம் தானே?
குறுகிய காலத்திற்குள் என் மனம் சற்றே கருகியது
அதை இறுகிய என் முகம் வெளியில் காட்டிக் கொடுத்து விட்டது.
பின்புறமிருந்து ஒரு தன்மையான குரல்” சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா..” என்றபடி கைநிறைய
அந்நாட்டு currency-ஐ நீட்டினார் ஆச்சர்யத்துடன் பார்த்தேன் “5000 தான் இருக்கு கொஞ்சம் time குடுத்தீங்கன்னா மீதியை புரட்டிகிட்டு வர்றேன்.
“நீங்க என்ன சார் பண்றீங்க”ன்னு கேட்க,
“டிரைவர்”-என்றார் டக்கென உட்புகுந்து மனதில் நின்றார்.பணக்கார்ர்கள் வரூம் ஆனா வராதூ என என்னத்தே கண்ணையாவாக சிந்திக்கும் வேளையில் மொத்த சேமிப்பையே வராவிட்டாலும் பரவாயில்லையென தரத் தயாரானவரின் தரமான இதயத்தை சற்றே உற்று நோக்கியப் பின் பணத்தை அவர் பாக்கெட்டில் வைத்துவிட்டு கரங்களை கண்களில் ஒற்றிக் கொண்டேன். இப்பதிவு அம்மாமனிதரின் மனிதாபிமானத்தை பறைசாற்றவேத் தவிர, மற்றோரை கோடியில் dirham பெற்றோரை குறை சொல்ல அல்ல. கோடிகளில் உள்ளோர் உள்ள நாடுகளில் , மனம் படைத்தோர் மட்டும் பல கோடியில் ஒருவர் இருவரே உளர். உணர்!
அதற்குள் என் மகள் கீர்த்தனாவிடம் கேட்டிருந்த online transaction done successfully !
இடையில் என் மீது சந்தேகப்பட்ட Philippines receptionist-யிடம் அவசரப்பட்டு அடகு வைத்திருந்த என் passport-ஐ மீட்டுக் கொண்டு வந்தேன்.
பணம் போயின் பிணமே அதுவும் மானம் போன பிணமே!
புகைப்படத்தில் அந்த Mr. A R Thajuddeen
Driver by profession but really a great human!
நாம் குடிக்கும் தண்ணீரில் ஒரு ரகசியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா...?
நாம் வசிக்கும் இந்த பூமி 71% தண்ணீராலும், 29% நிலப்பரப்பாலும் ஆனது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த 71% தண்ணீரானது இந்த பூமி தோன்றியது முதல் அதே அளவிலேயே உள்ளது. இந்த நிலத்தை போலவே பல பில்லியன் ஆண்டுகள் பழமையானது இந்த தண்ணீர்.
உதாரணத்திற்கு, டைனோசர்கள் காலத்தில் இருந்த அதே தண்ணீர் தான் இப்போதும் நம் வீட்டில் உள்ளது. இந்த பூமிக்கு புதிதாக(Fresh water) எந்த தண்ணீரும் வேறு கிரகத்திலிருந்து வரவில்லை.
டைனோசர் காலத்திலிருந்த அந்த தண்ணீர் ஆவியாக மேலே போனது, மழையாக கீழே வந்தது. பின்னர் இதே தான் திரும்ப திரும்ப நிகழ்ந்தது. இப்போது வரை. இது ஒரு சுழற்சி (cycle) தானே...?
ஆக, நம்மை சுற்றியுள்ள தண்ணீர் மற்றும் நாம் குடிக்கும் தண்ணீர் எல்லாமே பல பில்லியன் ஆண்டுகள் பழமையானது.
இது ஒரு விஷயம்..
இன்னொரு விஷயம் என்னான்னா....150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்கள் குடித்த அதே தண்ணீரை தான் நாமும் இப்போது குடிக்கிறோம்.
நான் சொன்னது உண்மை தான்...
ஒரு குட்டையில் டைனோசர் வாய் வைத்து தண்ணீரை குடித்தபோது, அதன் தொண்டை வழியாக சென்ற அதே தண்ணீரை தான் நீங்கள் இன்று குடித்தீர்கள்.
எப்படி....?
தண்ணீரில் டிரில்லியன் கணக்கான மூலக்கூறுகள் உள்ளன. ஒவ்வொரு மூலக்கூறும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுவால் ஆனவை.
சரி, டைனோசர்கள் நூற்றுக்கணக்கான லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கும். இவ்வளவு தண்ணீரை குடித்த பின்னர் அவை சிறுநீர் கழிக்கும்.
நிலத்தில் சேரும் அந்த சிறுநீர் சூரிய ஒளி மூலம் ஆவியாகும். இப்படி ஆவியாகும்போது, சிறுநீரில் கலந்துள்ள அசுத்தமான யூரியா, சால்ட், மினரல்ஸ் என அனைத்தும் கீழேயே தங்கிவிடும். ஏனெனில், இவற்றிற்கு எடை உண்டு என்பதால், ஆவியாகும்போது மேலே செல்ல இயலாது.
ஆனால், சிறுநீரில் உள்ள அந்த ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்கள் மேலே செல்லும். சூரிய ஒளி சிறுநீரை சுத்தமான நீராக மாற்றி விடும். பின்னர், அவை மேகங்களாக மாறி இன்னும் சுத்தமான மழை நீராக அதே அணுக்களுடன் திரும்ப கீழே வரும்.
டைனோசர் காலத்தில் இருந்த இந்த தண்ணீர் அணுக்கள் அழியாமல் எப்படி இன்று வரை உள்ளது...?
ஏனெனில், மரங்கள், உயிரினங்கள் வயதாகி இறப்பது போல் அணுக்களுக்கு ஏற்படாது. அவை எப்போதும் உயிருடன் இருக்கும்.
சோ, டைனோசர் சிறுநீராக கழித்த தண்ணீர் அன்று வாழ்ந்த உயிரினங்களுக்கும் அதற்கு பின்னர் தோன்றிய உயிரினங்களுக்கும் குடிநீராக அமைந்தது. பின்னர் இந்த கோடிக்கணக்கான உயிரினங்கள் கழித்த சிறுநீர் தான் இன்றும் சுழற்சி என்ற முறையில் மழையாக மாறி நமக்கு குடிநீராக வருகிறது.
நீங்கள் இப்போது ஒரு கப் தண்ணீர் குடித்தால், அதில் சிறிதளவு டைனோசர்கள் குடித்த அதே (exactly) மூலக்கூறுகள் இருக்கின்றன என்பது 100% அறிவியல் பூர்வமான உண்மை.
இந்த 150 மில்லியன் ஆண்டுகளாக(அதற்கு முன்னர் கூட) பல கோடி உயிரினங்களுக்குள் சென்று வந்த அதே தண்ணீர், அதவாது பல டிரில்லியன் முறை அசுத்தமான அதே தண்ணீர் தான் இன்றும் நமக்கு சுத்தமான குடிநீராக கிடைக்கிறது.
ஆக, இப்படி ஒரு பிரமாண்டமான, அபாரமான சுத்திகரிப்பு ஆற்றலை கொண்டுள்ள இந்த இயற்கையை நாம் எப்படி வியந்து புகழாமல் இருக்க முடியும்...???
ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.
முடியவும் முடியாது.
கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது
ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.
ஆனால் தமிழில்.....
தமிழ்,
தமிழ் இனியா
தமிழ் அமுதன்
தமிழ் ஓவியா
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழழகன்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
தமிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்,
தமிழ் வேந்தன்,
தமிழ் கொடி.
என்று தமிழோடு...
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!
தமிழன் மட்டுமே,
தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.