இராணிப்பேட்டையில் விசிகவினரால் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி, அன்புத்தம்பி குபேந்திரன் சிகிச்சைப்பெற்று வரும் சூழலில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி உட்பட தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய துணிவற்ற தவெக அரசின் காவல்துறை, தம்பி குபேந்திரனை கைது செய்ய முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆட்சியாளர்களின் அதிகார அழுத்தம் காரணமாக, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை மேற்கொள்ளும் இத்தகைய கொடும் அடக்குமுறையை உடனடியாக கைவிடாவிட்டால், விரைவில் பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
Before the elections, India Today started discussing Tamil Nadu-centric issues only because that gave them an opportunity to act as a mouthpiece for TVK.
Now, they are launching a new Tamil channel to do the same thing on a much larger scale.
India Today is TVK's godi media.
கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர��களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி, தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பா��்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.
மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு. கர்நா���க மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது? கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கே��்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்வராக இருக்கலாம். எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நா���்கள் பொறுப்பல்ல பெருமக்களே! தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரி��் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.
தமிழர்கள் எனும் மூத்தத் த��சிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்க���ை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்���ள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.
ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தா��ுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Chief Minister Vijay had reportedly sought a report on the activities of the party’s ministers and their aides. A recent intelligence report is said to have noted: “Only nine ministers are concerned about protecting the government’s image. The rest are acting without restraint.”
The aide of a Minister Handling a department closely linked to the Children reportedly made Huge collections in connection with a recent transfer posting.
Another aide of a minister holding “powerful” portfolios was reportedly accused of negotiating a “deal” worth three sweet boxes with sand operators. Chief Minister Vijay had earlier said that action would be taken against ministers, regardless of who they are, if they are found to be involved in wrong doing. The question now is: What action will he take against these ministers and their aides? News Link:
https://t.co/WLKIqu10Fv
#TVKVijay
எங்களுக்கு எதாவது நல்லது நடக்க வேண்டும் என்று தான் எங்க தொகுதி எம்.எல்.ஏவும் உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணனை பார்த்ததுக்கு அவர் சொன்ன பதில��� என் முகத்தை பார்த்தா ஓட்டு போட்டீர்கள் என்று கேட்கிறார்..? சட்டசபையில் பேசுங்கனு சொன்னதுக்கும் முடியாதுனு சொல்ல��ட்டார்.. அவரின் அணுகுமுறை சரியில்லை.. தங்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி உண்ணாவிரதம் இருக்கவும் அனுமதி கொடுக்கல.. பட்டினப்பாக்கம் மீனவர்கள் குற்றச்சாட்டு..
#Chennai | #Minister | #TVK | #Fishermen | #Protest | #PolimerNews
நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்தது..? முதல் படத்தில் அறிமுமமாகும் போது போடாதது ஏன்..? தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது பெரம்பூரையும், திருச்சி கிழக்கையும் தேடி போய் நின்றது ஏன்..? உங்களை ஒழிக்காமல் எப்படி இதையெல்லாம் ஒழிப்பது..? சீமான் கேள்வி
#Seeman | #NTK | #PolimerNews
Tenkasi Iyarkai Vala Paathugappu Sangam thanked @CMOTamilnadu C Joseph Vijay for temporarily banning agressive mineral transportation to neighbouring States and alleged that successive Dravidian party governments had failed to prevent the large-scale transportation of minerals to Kerala. President of the Sangam and former MLA Ravi Arunan claimed that thousands of tonnes of mineral resources were transported daily in giant trucks, leading to environmental degradation and depletion of Tamil Nadu’s natural wealth.
.@CMOTamilnadu@vdsatheesan
Tonnes of #KeralaWaste, largely plastic waste, used car parts, seat covers & electrical wires, have allegedly been dumped on govt land at Kadayam in Tenkasi district.
This is major incident since the National Green Tribunal, acting on a TNIE report, directed Kerala to take back tonnes of illegally dumped biomedical waste from several villages in Tirunelveli in December 2024.
In the aftermath, Tamil Nadu amended Goondas Act to enable the preventive detention of those involved in illegal biomedical waste dumping.
@CollrTenkasi@tnpoliceoffl
#KeralaWaste dumping into south Tamil Nadu has resumed. Around 10 tonnes of mixed waste, brought from Kerala, has been found dumped on HR & CE land in Tenkasi district. Kadayam police registered a case against unidentified miscreants. @TenkasiPolice failed to seize vehicles of transporters at Puliyarai check post @CMOTamilnadu@vdsatheesan
#KeralaWaste menace:
Environmentalists have demanded @TVKVijayHQ@CMOTamilnadu govt to approach National Green Tribunal, make @vdsatheesan govt to take back their waste from Tenkasi to Kerala & arrest waste transporters under amended Goondas Act.
https://t.co/kXCSYg8E3U
https://t.co/K858g4F8pA
https://t.co/S2l5zwbOSN
https://t.co/dL2HqpBO2Y
https://t.co/7ssbrR5dHh
https://t.co/o9XI1eZeBn
TAMIL GIRL ASKS WHY VIJAY IS SILENT ON SONAM WANGCHUK 🚨
REPORTER: What is your disappointment?
SAUMYA 🎯: Everyone questioned Aamir Khan because of 3 Idiots. But Vijay played the same role in Nanban. Today he is a politician, not just an actor.
REPORTER: What is the expectation?
SAUMYA 🔥: Sonam is fasting for a public cause. If Vijay wants to write political history, silence is not an option.
REPORTER: Your question seems valid.
SAUMYA: Exactly. Ask Vijay too. Why have he and his party not spoken?
முதலமைச்சர் விஜயின் கீழ் இயங்கும் காவல்துறையினர் வசம் இருந்த விசாரணை கைதியான சபரி வர்மன் லாக் அப் மரணம் அடைந்துள்ளார்
சபரி வர்மனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு வேலை வழங்குவாரா முதல்வர் விஜய்?
தனது கட்சி சார்பில் நிதி உதவியும் அரசு சார்பில் நிதி உதவியும் வழங்குவாரா?
கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் ��ுதல்வருக்கு அழுத்தம் கொடுப்பார்களா?
Sir @collectorkki, please help this Tenkasi girl, running frm pillar to post for weeks to get her certificates from a pvt college. She says no pending fee dues. The college reportedly told her that it is withholding her certificates only because she lodged her grievance with you & @CMOTamilnadu. This is atrocious.
From @Thanioruvanshv1 👇
🎓 ஒரு மாணவியின் கல்வி பாதிக்கப்படக் கூடாது!
📍 தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரைச் சேர்ந்த ஒரு மாணவி, கடந்த கல்வியாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
மாணவி கூறுவதன்படி, உடல்நலக் காரணங்களால் படிப்பைத் தொடர முடியாமல், கல்லூரியில் சமர்ப்பித்திருந்த தனது அசல் கல்விச் சான்றிதழ்களைத் திரும்பப் பெற பலமுறை கல்லூரி நிர்வாகத்தை அணுகியுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பிறகும், தனது சான்றிதழ்களை வழங்காமல் இருப்பதாக��ும், கூடுதல் தொகை கோரப்படுவதாகவும் மாணவி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தனது உயர்கல்வியைத் தொடர முடியுமோ என்ற அச்சத்தில் அந்த மாணவியும் அவரது குடும்பத்தினரும் உள்ளனர்.
📢 கல்வி என்பது ஒரு மாணவரின் அடிப்படை உரிமை.
ஒரு மாணவரின் எதிர்காலம் நிர்வாகச் சிக்கல்களால் பாதிக்கப்படக் கூடாது.
🙏 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், உயர்கல்வித் துறையும், சம்பந்தப்��ட்ட மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தை விரைந்து விசாரித்து, உண்மை நிலையை கண்டறிந்து, மாணவியின் கல்வி பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
💬 கல்வி தொடர விரும்பும் ஒவ்வொரு மாணவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு ��ரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்க���ிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இட��ந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத த��ெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியா��் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி